அத்தியாயம் 4
ரதியும் ருத்தரனும் குழந்தையுடன் மகிழுந்தில் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது வழியில் மூன்று கருப்பு நிற மகிழுந்துகள் அவர்களை வழிமறித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய தடியன் கள் ரதியை தாக்க முயற்சி செய்தனர். ருத்ரன் ரதியை மகிழுந் தினுள் இருக்கும்படி கூறி விட்டு அந்த அடி ஆட்களை எல்லாம் அடித்து வீழ்த்தினான்.
அதில் ஒருவன் மயக்க புகை குண்டினை ரதியின் மகிழுதினுள் விசினான். அதற்குள் காவலர்கள் அங்கே வந்து அடி ஆட்களை கைது செய்து சென்றனர்.
ருத்ரன் மகிழுந்தில் பார்த்த பொழுது ரதியும் குழந்தையும் மயங்கிய நிலையில் இருந்தனர். நொடியும் தாமதிக்காது மகிழுந்தை மருத்துவமனை நோக்கி செலுத்தினான். குழந்தையை அவசர பிரிவில் சேர்த்துவிட்டு ரதியை காண அவள் அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்றான். முகத்தில் சோகமே கலை யாக கொண்டு தேய்ந்து போன நிலவை போல காட்சி தந்தாள். ருத்ரன் அவள் அருகில் அமர்ந்த பொழுது அவள் உதடுகள் தேவ் மாமா என முணுமூணு த்தது. அதனை கேட்ட ருத்தரனும் தீ சுட்டது போல அங்கே இருந்து வெளியே சென்றான். அப்போது வீரராகவன், மீனாட்சி, தேவராகவன் விடயம் அறிந்து ரதியை பார்க்க வந்தனர்.
மருத்துவர் வந்து ரதியை பரிசோதனை செய்து விட்டு சின்ன மயக்கம் தான் கொஞ்சம் நேரத்தில் கண் விழித்துவிடுவாள் என கூறி சென்றார். இதற்கு இடையில் ருத்தரனின் கை,கால்களில் இருந்த காயங்களுக்கும் மருந்து போட்டுவிட்டு சென்றான் ராகவன். மயக்கம் தெளிந்து எழுந்த ரதி அந்த ஐ சி யூ வின் முன் நின்று அழுது கொண்டு இருந்தாள். இதை சற்று தூரமாக இருந்து ருத்தரனும் கண்ணில் நீர் வழிய பார்த்து கொண்டு இருந்தான்.உள்ளே குழந்தைக்கு ராகவன் மருத்துவம் பார்த்து கொண்டு இருந்தான். சுமார் இரண்டு மணி நேர சிகிச்சை நடந்த பின் குழந்தை கண் திறந்தது. அதன் பின் ரதி சென்று குழந்தையை பார்த்து விட்டு வந்தாள்.
இரவு 11 மணி அளவில் அனைவரும் வீட்டுக்கு சென்றனர். மீனாட்சி ரதி ருத்ரன் மற்றும் குழந்தையை ராகவனோடு நிற்க வைத்து திருஷ்டி சுற்றினார். வழமை போலவே ரதி குழந்தையை ராகவனிடம் கொடுத்து விட்டு நிலாவின் கல்லறையின் மேல் படுத்து கொண்டாள். இங்கே ருத்தரனின் நினைவோ ரதி தேவ் மாமா என அழைத்ததை நினைத்து கொண்டு இருந்தது. அவன் உதடுகளோ மிஸ் யூ அம்மு என கூறியது.
மறுநாள் காலை கதிரவன் மீது காதல் கொண்ட தாமரை மலர பொழுது விடிந்தது. அனைவரும் அவரவர் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர். வீரராகவனின் வீட்டிற்கு கோவிலின் தலைவர் மற்றும் சில முக்கிய நபர்கள் வந்து இருந்தனர். அவர்கள் ரதியை அம்மனின் வாளுக்கு பூஜை செய்ய அழைத்து செல்ல வந்து இருந்தனர். இந்த பூஜை இருபது வருடங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் பூஜை கடைசியாக நிலவொளியினியால் இந்த பூஜையை செய்தாள். இப்பொது ரதி செய்ய போகிறாள்.
ராகவனோ ரதியின் உடல் நிலை காரணமாக தடுக்க ரதியோ பூஜைக்கு செல்ல சம்மதம் தருகிறாள். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பூஜை என முடிவு செய்யப்படுகிறது.
பூஜைக்காக ரதி மூன்று நாட்கள் விரதம் இருந்து வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்கிறாள். காலை கதிரவனின் ஒளி போல பிரகாசமான முகத்தில் சிவப்பு நிற போட்டு, உச்சியில் குங்குமம், கண்களில் கருப்பு நிற மை வைத்து, காதில் குடை போல் விரிந்த ஜிமிக்கி, கழுத்தில் தேவ் என பெயர் போட்ட சங்கிலி மற்றும் சில நகைகள் இரண்டு கைகளிலும் தங்க வளையல்கள் சிவப்பு நிற பட்டு உடுத்தி அந்த ரதி தேவியை போலவே நடந்து வந்தாள்.
ரதியை பார்த்த ருத்தரனின் விழிகளோ ஒரு நிமிடம் அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தன. அதன் பின் அனைவரும் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் எல்லாம் நடைபெற்றது. பின் ரதியிடம் வந்த கோவில் பூஜாரி ஒரு மஞ்சள் நிற புடவையை கொடுத்து கோவில் குளத்தில் குளித்து விட்டு மற்றி வரும் படி கூறினார்.
மாலை வேலை சூரியனின் மஞ்சள் நிற கதிர்களுக்கு இணையாக மஞ்சள் நிற தேவதை போலவே அந்த மஞ்சள் நிற புடவையில் ஜோலித்தால் ரதி. பின் காப்பு கட்டி பூக் குழி இறங்கி அம்மனை தரிசித்தால். இரவு கடைசி நிகழ்ச்சி யாக அம்மனின் வாளை ரதி கைகளில் எந்தி அழகிய ருத்ர தாண்டவம் ஆடினாள். அப்போது எங்கு இருந்தோ வந்த அம்பு அவள் வயிற்றின் மீது குத்தியது.
அனைவரும் அதை பார்த்து பதற ரதியோ அந்த அம்பை பிடுங்கி துர வீசினாள். பின் வாளை அம்மன் கால் அடியில் வைத்து விட்டு அங்கேயே ரதி மயங்கி சரிந்தாள்.
அதற்குள் ருத்ரன் அவளை கைகளில் எந்தி மகிழுந்தில் மருத்துவமனை நோக்கி சென்றான்.
அங்கே அவளுக்கு மருத்துவம் பார்த்து கொண்டு இருந்த ராகவனோ அவளிடம்
எழுந்துரு ரதி come on rathi wake up
என கத்தி கொண்டு இருந்தான். ப்ளீஸ் ரதி don 't give up நீ இல்லைனா உன் பையன் அனாதை ஆகிடுவான் ரதி எழுந்திரு என கத்தி கொண்டு இருந்தான்.
அவன் குரல் அவள் செவிகளை அடைய வில்லை போல எந்த உணர்வும் இல்லாமல் வாடிய மலர் கொடியினை போல படுத்து கிடந்தாள் ரதிமலர்.
அவளுக்காக ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரை எல்லாம் வர வளைத்து சிகிச்சை அளித்து கொண்டு இருந்தான் தேவ ராகவன். வெளியே அழும் ருத்ர வீரை கையில் வாங்கிய ரூத் ரானுக்கோ சொல்ல முடியா ஓர் உணர்வு, மனதை எதோ போட்டு அமுக்கு வது போல அவனக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது. அன்னையை காணாது அழுத வீரோ ருத்தரனின் கைக்கு சென்றதும் அழுகையை நிறுத்தி அழுத களைப்பில் உறங்கி விட்டான்.
வெளியே வந்த மருத்துவரோ ரதி அவளின் கடைசி நிமிடங்களில் இருப்பதாகவும் கடைசியாக பேச விரும்புவோர் சென்று பேசி விட்டு வரும் படி கூறினார்.
இதை கேட்ட மீனாட்சியோ நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்.
ரதி பிழைப்பாளா? யார் அந்த தேவ் மாமா? விடை அடுத்த அத்தியாத்தில்....

Last edited:
Author: Nithya
Article Title: ரதி 🩵4
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.