அத்தியாயம் 12
இரண்டு மணி நேர தொடர் சிகிச்சையின் முடிவில் ரதியும் அவள் வயிற்றில் உள்ள குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர் ராகவனிடம் கூறினார். மேலும் ரதியை கவனமாக பார்த்து கொள்ளும் படி கூறினார்.
இங்கே கோபமாக சென்ற தேவ் திரும்பி வரும் போது அவனை வரவேற்றது காலி அறை தான். அங்கே மேசையின் மீது ஒரு கடிதம் அதில்
ருத்ரதேவன் அவர்களுக்கு,
என் குழந்தையை கொன்று என்னை அனாதை என்று சொல்லி துன்பறுத்திய உன்னை நான் இன்றோடு வெறுத்து விட்டேன். மேலும் உனக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனக்கு பணம் தான் முக்கியம் அதனால் நான் அதை தேடி செல்கிறேன்.
இப்படிக்கு
ரதி
என்று அந்த முடிவு பெற்று இருந்தது. கூடவே அவன் அணிவித்த ஆர். டி. என்ற முகப்பு வைத்த தாலிக்கொடியும் இருந்தது.அவனால் அதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அப்போது உள்ளே வந்த நீலவேணியோ ருத்ர நீ கவலை படாதே எப்படியாவது நம்ம ரதியை கண்டு பிடிச்சு விடலாம் சரியா என பொய்யாக ஆறுதல் கூறி வீட்டுக்கு அழைத்து சென்றார்.
ருத்ரனுக்கு தன்னை சுற்றி நடப்பது எல்லாம் எதோ கனவு போல இருந்தது.
ஒரு வார காலமாக ஊட்டி, மதுரை, அதன் சுற்று பகுதிகளில் என நிறைய இடங்களில் அவன் அம்முவை தேடி அலைந்தான். அப்படி ஒரு நாள் அவன் மணிமேகலை வீட்டுக்கு போகும் போது நீலவேணியும் மணிமேகலையும் பேசிக்கொண்டது அவன் காதுகளில் விழுந்தது.
மணி : அம்மா நம்ப அந்த ரதி பொண்ண மூன்று நாள் ஒரு வேலைக்காரி போல கொடுமை செஞ்சது அப்பறோம் அன்னக்கி அவளுக்கு கஞ்சில விஷம் கொடுத்தது எல்லாம் அந்த ருத்ரக்கு தெரிஞ்ச என்ன ஆகும் மா. எனக்கு என்னவோ பயமா இருக்கு அம்மா
வேணி : அடி போடி இவளே. அதுக்காக கஷ்டப்பட்டு இவ்வளவு வேலை செஞ்சது. அவ கண்டிப்பா திரும்ப வர மாட்ட என்ன நா அவ போகும் போது விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டேன் அப்பறம் நீ திரும்பி வந்த உன் புருஷனையும் கொன்னுடுவேன் அப்படினு மிரட்டி தான் அனுப்பி வச்சு இருக்கேன் சரியா
மணி : என்ன அம்மா இவளோ வேலை பார்த்து இருக்க என்கிட்ட கூட சொல்லவே இல்ல
வேணி : அடி ஆமா, அன்னக்கி அவ ஹாஸ்பிடல் போனல பின்னாடியே நானும் போய் அவள அப்படியே விரட்டி விட்டு வந்துட்டேன். நான் மட்டும் சந்தோசமா இந்த சொத்தை எல்லாம் அனுபவிக்கலாம்னு பார்த்த என் புருஷன் பையன் வேணும்னு என் தங்கச்சிய ரெண்டாவது கல்யாணம் பண்ணி அந்த ருத்ரன் பொறந்தான்.
சரி எனக்கு இல்லனாலும் உனக்கு சொத்து மொத்தமும் வரும் பார்த்த என் அப்பா, தங்கச்சி அப்பறம் என்ற புருஷனும் சேர்ந்து அவனுக்கு அதுல பாதி எழுதி வச்சு இருகாங்க அப்படினு எனக்கு அவனுக்கு 17 வயசு இருக்கும் போது அச்சிடேன்ட்ல இறந்துட்டாங்க அப்போதான் லாயர் மூலமா தெரிஞ்சிச்சு.அப்பறோம் இவனை என் கைக்குள்ள வச்சு சொத்தை எல்லாம் உன் பெருக்கு மதிக்கலாம்னு பார்த்த இவன் காதல் கல்யாணம் குழந்தைனு வந்து நிக்குறான்.
அதான் என் பேச்சை மீறி கல்யாணம் பண்ணி கிட்டு வந்தான். சரி வந்தவளாவது பணக்காரிய இருப்பான்னு பார்த்த அதுவும் இல்ல.அதனால தான் அவள விரட்டிவிட்டுட்டேன். அவன் அம்மாவும் அப்பாவும் பண்ண பாவத்துக்கு அவன் குழந்தை செத்து போச்சி என்று இரக்கமற்ற அரக்கி போல பேசிக்கொண்டு இருந்த நீலாவேணியையும் மணிமேகலையும் தான் ருத்ரன் பார்த்து கொண்டு இருந்தான். அவனிடம் சொத்து வேண்டும் என கேட்டால் முழுவதையும் கொடுத்து இருப்பான். இப்படி நம்ப வைத்து அவன் குழந்தையை கொன்ற அரக்கியை பார்த்து உதட்டில் விரக்தியான புன்னகையோடு அவன் வந்த சுவடே தெரியாமல் சென்று விட்டான்.
ஆறு மாதங்கள் கழித்து.......
இந்த ஆறு மாதத்தில் நிறைய மாற்றம் நடந்துவிட்டான. நீலவேணி மரடைப்பால் இறந்து விட மணிமேகலையின் குடும்பம் தொழில் நட்டம் ஏற்பட்டு கூலி வேலை செய்து கொண்டு உள்ளனர். ருத்ரனும் அவன் சொத்துக்களை எல்லாம் மணிமேகலைக்கு எழுதி கொடுத்து விட்டு சென்னை வந்து ஆர். எம். குரூப்ஸ்யில் வேலை செய்து கொண்டு உள்ளான். பின் வார விடுமுறையில் அவன் அம்முவை தேடி ஊர் ஊராக சென்று வருவான்.
ராகவன் ரதியை நன்றாக கவனித்து வந்தான் அவனுக்கு உதவியாக அவன் காதலி ராகபல்லவியும் உடன் இருந்தாள். இப்போது குழந்தை வயிற்றில் நன்றாக அசைய தொடங்கி இருந்தது.
தினமும் ராகவனும் பல்லவியும் வந்து குழந்தையிடம் பேசி விட்டு செல்வார்கள். பகலில் தேவ் நினைவில் இருந்து வேறு சிந்தனைக்கு செல்பவளால் இரவில் அவள் தேவ் நினைவிகளிலே மூழ்கிக்கிடந்தாள் ரதி.
அவளால் அவனை மறக்கவும் முடியாமல் மன்னிக்கவும் முடியாமல் தவித்து வந்தாள். இங்கே தேவ்வின் நிலையும் இதுதான். சங்க காலத்தில் சொல்லப்படும் பசலை நோய் இருவரையும் வாட்டி வதைத்தது. அகிம்சை முறையில் ஒரு யுத்தம் நிகழ இரு உயிர்கள் இங்கேயும் அங்கேயும் நினைவலைகளில் மடிந்தது.💔
ஒன்பது மாதம் தொடக்கத்திலேயே அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை வெளியே எடுத்தனார். விஷத்தின் தாக்குதலால் குழந்தை மூச்சு விட சிரமம் பட ஐ சி யூ வில் வைக்கப்பட்டது.
ரதி மட்டும் சென்று குழந்தைக்கு தாய் பால் கொடுத்து விட்டு வருவாள்.
முதன் முதலில் குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்து கொண்ட ரதியின் மனம் அவள் தேவ் தான் தேடியது. அவள் ஆசைப்பட்டது போலவே மகன் பிறந்து விட்டான் அதுவும் அவள் மனம் கவர்ந்த அவளவன் ருத்ரதேவனின் சாயலில் குட்டி தேவன் போல அதே மயக்கும் கண்களோடு.ஆனால் அதை கொண்டாட வேண்டியவன் தான் அங்கே இல்லை. ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அவள் மனம் இப்போதும் தாயை தேடும் குழந்தையை போல அவள் தேவ்வை தான் தேடுகிறது.
இரண்டு மாதம் கழித்து குழந்தையோடு வீட்டிற்கு சென்றாள். குழந்தைக்கு உடல் சூடு தேவை என்பதால் ரதியும் ராகவனும் குழந்தையை தூக்கி நெஞ்சோடு அணைத்து கொள்வர். இவர்கள் இருவரை தவிர குழந்தையை யாரிடமும் கொடுக்க மாட்டார்கள். கண்ணின் இமை போல பாதுகாத்தனார் அந்த சிறிய குழந்தையை.
முன்பு ஒரு நாள் இரவு கூடல் முடிந்து தேவ் மார்பில் தலை சாய்ந்து இருந்த ரதியிடம் தேவ் சிறுவயது முதல் அவனை தாத்தா வீராவிஜயதேவன் தான் வளர்த்தது என்று கூறினான். மேலும் நாளை மகன் பிறந்தால் அவனுக்கு வீர் என்றும் அதுவே மகள் பிறந்தால் அவன் தேவதை ரதியின் பெயரும் அவன் தேவதையின் தேவதை நிலாவின் பெயரையும் சேர்த்து ரதிநிலா என்று பெயர் வைக்க போவதாக கூறினான். ரதியும் அவள் உணர்வுக்கும் மதிப்பு தரும் அவள் தேவ்வின் இதழில் ஆழமாக முத்தமிட்டு அவள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். அதை நினைத்த பார்த்த அவள் கண்ணின் ஓரம் நீர் துளிகள் துளிர்த்தது.
ரதியும் குழந்தைக்கு அவள் நெஞ்சத்தில் புகுந்து ஆட்சி செய்யும் மன்னவன் பெயரையும் சேர்த்து ருத்ரவீர் என்று பெயர் சூட்டினாள். மேலும் தேவ்யின் நினைவு அவளை வாட்டும் போது எல்லாம் இந்த குட்டி தேவ் ஐ அணைத்து கொள்வாள்.அதன் பின் கம்பெனி சி ஏ ஓ வாக மாறி பொறுப்புகளை இரண்டு வருடம் கழித்து எடுத்துக்கொண்டாள்.
அன்று மருத்துவமனையில் செக்கிங் செல்லும் போது மீண்டும் அவள் ருத்ரனை சந்தித்தாள் ஆனால் அவள் அவளவன் மேல் கொண்ட ஊடலால் அமைதியாக சென்று விட்டாள். எப்போதும் குழந்தை போல இருந்தவள் அவள் குழந்தைக்காக கோபத்தையும் இருக்கமான முகமூடியையும் போட்டு கொண்டாள்.இந்த ஒரு வருடமாக அவள் தினமும் அவள் அலுவலக சிசிடிவி மூலம் அவள் தேவனின் தரிசனம் காண்பாள்.
பாவம் தேவ் தான் இது எதுவும் தெரியாமல் அவளை ஒரு வருடம் ஊர் ஊராக சென்று தேடி அலைந்தான்.
இப்போது நிகழ் காலம்....
நடந்த அனைத்தையும் தேவ்விடம் கூறி விட்டு அவன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தாள் ரதி.எப்போதும் வசீகரமாக இருப்பவன் இன்று மெலிந்து முகத்தை மறைக்கும் அளவு தாடியுடன் இருந்தான். காதல் கொண்ட மனம் அவளவனுக்குக்காக கரைந்தாலும் தாய்மை உள்ளம் அவன் மேல் கொண்ட கோபத்தை குறைய விட வில்லை.
அவனும் பார்வையால் அவளை துளைக்க மீண்டும் ரதியே கேள்வியை தொடர்ந்தாள். மிஸ்டர்.
ருத்ரன் நீங்க தான உங்க பெரியம்மாவா கொன்னது.
அவனோ கூலாக ஆமா டி பாப்பா நான் தான் பண்ணேன் என் அம்மு பாப்பா வா கஷ்டப்படுத்த கொடுத்த விஷத்தை அவங்களுக்கும் கொஞ்சம் அவங்க மாத்திரைல கலந்து கொடுத்துட்டேன் அதை சாப்பிட்டு அவங்களும் அவங்க புருஷன் கிட்டயே போய்ட்டாங்க போதுமா.
சரி சொல்லு என்ன சாப்புடுற என்ன சமைக்கணும் சொன்ன செஞ்சி கொண்டு வரேன் சரியா என கேக்க அவளும் சம்மந்தம் இல்ல அவன் பேச்சில் முட்டை கண்களை சுழட்டி முழித்தாள். பின் அவனை பார்த்து எனக்கு எதுவும் வேண்டாம் யாரும் வேணாம் நான் வீட்டுக்கு போறேன் அங்க ராகவ் காத்துகிட்டு இருப்பான். நீ கேட்ட உண்மைய தான் சொல்லிட்டேன்ல இப்ப நான் கிளம்புறேன் என கூறி குழந்தை இருக்கும் அறைக்கு சென்றாள்.
அவள் பின்னால் வந்த தேவ்ஓ அவளை சுவரரோடு சாய்த்து அவள் தேகமோடு தேகம் உரச நின்று அவள் கண்களை பார்த்து இனிமே நீயும் என் பையனும் இங்க தான் இருப்பிங்க சரியா வேணும்னா உன் ராகவன இங்க தாங்கிக்க சொல்லு அப்பறம் நீ என்று அவளை அணைத்து அவள் இதழில் ஆழமாக ஒரு முத்தம் வைத்து இனிமே என்னை விட்டு போறேன்னு சொன்ன இப்ப முத்தம் தான் கொடுத்தேன் அடுத்த வாட்டி மொத்தமா கடிச்சு எடுத்துக்குவேன் பார்த்துக்கோ என்ன கூறி அவள் இடையை நன்றாக செவக்க அழுத்தி விட்டு அவளை விடுவித்தான்.
அவளும் சிலை போல நின்றவள் குழந்தை அழும் சத்தம் கேட்டு தான் தெளிந்தாள். சென்று வீரை தூக்கி அவனக்கு பசியாற்றி விட்டு அவனோடு விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது உள்ளே வந்த தேவ் அவளிடம் ஒரு டம்ளர் ஜூஸ் கொடுத்து குடிக்க சொல்ல அவளும் எனக்கு வேணாம் என முகத்தை திருப்பி கொண்டாள்.
அவள் வேண்டாம் என்றால் கேக்கும் ரகம் இவன் இல்லையே. அவனோ மீண்டும் அவள் இதழின் மேல் பார்வையை வைத்து இப்ப நீ குடிக்கல அப்பறம் என் ஸ்டைல்ல குடிக்க வைப்பேன் சரியா கேக்க அவன் பார்வை சென்ற இடம் கூறிய செய்தியில் அமைதியாய் அதை குடித்தாள்.
பின்பு அவனே இரவு உணவையும் சமைத்து அவள் மறுக்க மறுக்க ஊட்டி விட்டான். அவளும் புடவை உடலை உறுத்த சென்று தேவ்வின் டி ஷர்ட் மற்றும் ஷாட்ஸ் ஐ மாற்றி கொண்டு உறங்கி விட்டாள். அவனும் உறங்கும் அவள் வயிற்றில் உள்ள காயங்களின் மேல் களிம்பை இதமாக பூசி விட்டு அவள் பிறை நெற்றியில் முத்தம் இட்டு இருவருக்கும் இடையில் குழந்தையை படுக்க வைத்து போர்வை போற்றி விட்டு கட்டிலின் மறுபுறம் சென்று படுத்து அவன் அம்மு மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் அவளவனின் பூ போன்ற முகத்தை பார்த்து கொண்டே உறங்கினான்.
ராகவனை சந்திக்கும் தேவ்.ரதிக்கு விவாகரத்து கொடுக்கும் ருத்ரதேவன். நடந்தது என்ன?அடுத்த பாகத்தில்.....

Last edited:
Author: Nithya
Article Title: ரதி 🩵12
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.