அத்தியாயம் 38
அந்த ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் காரை இலக்கின்றி ஒட்டி கொண்டு இருந்தான் சூர்யா. அவன் மனமோ " நிலா கூறிய நான் உன்ன தான் காதலிக்குறேன் மாமு " என்ற வார்த்தைகளும் கதிர்யின் ' நீயே வார்த்தையால குத்தி அவள கொன்னுட்டியே டா ' என்ற கேள்வியும் அரித்து கொண்டே இருந்தன. காதல் கொண்ட அவன் மனம் காதலை கூறும் மூன் உடைந்ததை அவனே அறிவான். பின் காதல் கூடிய வேலையும் அதை ஏற்க முடியாமல் அவன் தவித்த தவிப்பையும் அவனே அறிவான். இப்படி அவன் காதலையும் அன்பையும் மறைத்து போய் முக மூடியோடு சுற்றி தெரிந்தவன் இன்று ஒரு முடிவோடு வீட்டிற்கு சென்றான்.
---
வெளியே சென்று வீடு திரும்பிய சூர்யா கண்டதோ ஹால் சோபாவில் உடலை குறுக்கி கொண்டு உறங்கும் அவன் எலி குட்டியை தான். எதுக்கு இப்படி படுத்து இருக்கா என யோசனையோடு அவள் அருகில் சென்றவன் அவளை எழுப்ப நெற்றியில் கை வைக்க அவள் உடலின் வெப்பம் அதிகமாக இருப்பதை உணர்ந்தான்.
பெண் அவளை கவனிக்க மறந்ததை எண்ணி தலையில் அடித்து கொண்டவன் வேகமாக கிட்சேன் சென்று அவளுக்கு கஞ்சியும் சூடு நீரும் கொண்டு வந்து அவளை எழுப்பினான். அவளோ அரை மயக்க நிலையில் " சொல்லு மாமா " என்றாள்
சூர்யாவோ ' எலி எழுந்திரி டா இந்த கஞ்சிய குடிச்சிட்டு டேப்லெட் போட்டுக்கோ அப்ப தான் பிவேர் குறையும் ' என்றான்
அவளோ ' எனக்கு வேணாம் மாமா ' என அவனை அணைத்து கொள்ள அந்த அணைப்பில் பெண் அவளின் சோர்வும், பாசமும், நம்பிக்கையும் என அனைத்தையும் கண்டு கொண்ட அவன் மனமோ : “ சாரி டி எலி குட்டி என்னால உனக்கு கஷ்டம் மட்டும் தான் ” என வேதனையில் ஊமை கண்ணீர் வடித்தது.
பின் அவனே " அடம் பிடிக்காத எலி என் தங்கப்புள்ளல சொன்ன கேளு கொஞ்சமா சாப்புடு ஏற்கனவே நேத்து மதியம் சாப்பிட்டது இப்ப கொஞ்சமா சாப்புடு எலி... " என கெஞ்சி கொஞ்சி கஞ்சியை அவளுக்கு முழுவதுமாக ஊட்டி விட்டான். அவளும் அமைதியாக அவன் மார்பில் சாய்த்து கொண்டு அனைத்தையும் உண்டு விட்டு அவன் கொடுத்த மாத்திரையும் விழுங்கினாள்.
பின் அவள் முகத்தை துடைத்து விட்டு பூ போல அவளை கையில் ஏந்தி கொண்ட சூர்யா நேராக அவன் அறைக்கு சென்று மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவளை அணைத்த படி படுத்து கொண்டு அவள் தலையை மார்பில் சாய்த்துக் கொண்டான்.அவள் அவனை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டு, நிம்மதியான சுவாசத்தில் மெதுவாக உறங்கினாள்.
அவளை அணைத்தபடி படுத்திருந்தவன், தனது மனதில் ஒரு முடிவை எடுத்து: " எலி இனிமே உன்ன நான் கஷ்ட படுத்த மாட்டேன் டி நீ இதுக்கு அப்பறம் சந்தோசமா இருக்க இந்த முடிவு சரியாக தான் இருக்கும் " என நினைத்தான்.
அந்த முடிவுடன் அவன் அவளது தலைமுடியை மெதுவாக வருடி விட்டான்.
அவள் முகத்தில் சின்ன சிரிப்பு வந்தது.
அந்த சிரிப்பு அவனுக்கு உலகமே ஆனந்தமாய் தோன்றியது. அவனோ அவள் நெற்றியில் முத்தம் வைத்து " சிரிக்கும் போது பாக்க எலி குட்டி மாதிரியே இருக்கடி " என்றான்.
---
அன்று இரவு முழுவதும் சூர்யா விழித்து இருந்து பெண் அவள் நிம்மதியாக தூங்குகிறாளா, காய்ச்சல் குறைகிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டான்.
அடிக்கடி தண்ணீரில் துணியை நினைத்து அவள் நெற்றியை துடைத்து, அன்போடு கவனித்துக் கொண்டான்.
சூர்யா இதுவரை யாருக்கும் காட்டாத பராமரிப்பை அவளுக்குக் காட்டினான்.
இதே அன்பும் பாசமும் இன்று தான் கடைசி என தெரியாமல் நிலாவும் நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தாள். இதை அறியும் போது அவள் நிலை என்ன வாக இருக்குமோ?...
---
காலை நேரம்...
காலை வெய்யோனின் பொன் கதிர்கள் முகத்தில் பட மெல்ல கண்களை திறந்தாள் தூரிகை நிலா. கண் விழித்த அவள் கண்டதோ இன்னும் தன்னை அணைத்து கொண்டு உறங்கும் அவள் காதல் கள்வனை தான் ஒரு நிமிடம் அதை கனவு என நம்பியவள் பின் அவனின் அசைவில் தான் அது நிஜம் என்பதை உணர்ந்தாள். கண்களை விழித்த சூர்யாவோ " குட் மார்னிங் எலி குட்டி, இப்ப எப்படி டா இருக்கு " என்றான்
அவளும் ' இப்ப ஓகே மாமா ' என்றாள்
அவனோ ' சரி போய் குளிச்சிட்டு கிளம்பி வா வெளிய போகலாம் ' என்றான்
அவளும் எதும் கேக்காமல் அறையை விட்டு வெளியே சென்று குளித்து முடித்து கிளம்பி வந்தாள். அவளுக்காகவே சோபாவில் காத்து கொண்டு இருந்தான் சூர்யா. அவனோ அவளை பார்த்து ' போலாமா எலி ' என்றான்
பெண் அவளும் " போலாம் மாமா " என அவனோடு நடக்க துவங்க இருவரும் காரில் சென்று ஏறி கொண்டனர். சூர்யாவும் காரை நேராக ஆர். எம். பேலஸ் மூன் நிறுத்தினான். நிலா தான் இருக்கும் இடத்தையும் சூர்யாவையும் கேள்வியோடு பார்க்க அவனோ ' நீ உள்ள போ எலி இனிமே நீ அங்க வர வேண்டாம் ' என்றான்
அவளும் " ஏன் மாமா நாம இங்கயே இருக்க போறாமா " என்றாள்
அவனும் " இல்லை நீ இப்ப உள்ள போ அப்பறம் உனக்கே புரியும் " என்றான். பெண் அவளை வாசலிலே இறக்கி விட்டு வேகமாக அவன் காரில் பறந்து விட்டான் சூர்யா. நிலா அங்கேயே நிற்க அப்போது அங்கு வந்த தேவ்வோ " வா பாப்பா எப்ப வந்த ஏன் டா இங்கயே நிக்குற உள்ள வா " என்றான்
அவளோ ' அது அப்பா சூர்யா இப்ப தான் இறக்கி விட்டுட்டு போறாங்க ' என்றாள்
அவனும் " சரி வா பாப்பா உள்ள போகலாம் " என அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான். அவளும் கீ கொடுத்த பொம்மை போல உள்ளே சென்றாள். பல்லவி, ராகவன், ரதி என மூவரும் அவளை கண்டு " ஏன் பாப்பா ஒரு மாதிரி இருக்க " என்றனர்
அவளோ ' கொஞ்சம் சோர்வா இருக்கு ' என வாய்க்கு வந்த பொய்யை கூறி விட்டு அவள் அறைக்கு சென்று விட்டாள். யாரும் அவளை எதுவும் கேக்க வில்லை ஏனென்றால் நேற்று அவளுக்கு உடல் நிலை சரி இல்லை என வீரும் ஆத்யாவும் கூறி இருந்தனர் அதனால அவர்களும் அப்படியே விட்டு விட்டனர். அறையில் மனம் ஒரு நிலையில் இல்லாமல் சுற்றி கொண்டு இருந்தாள் தூரிகை நிலா.
---
இங்கே சூர்யாவோ நேராக ஒரு குடும்ப நல லாயர்யை பார்க்க சென்றான். அவர் திருமதி கார்க்குழலி எழிலரசன். சூர்யாவோ அவரிடம் சென்று " வணக்கம் மேடம், எனக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆகுது நானும் என் மனைவியும் பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிகிட்டோம் அதனால எங்களுக்கு டிவோர்ஸ் வாங்கி தரணும் " என்றான்
குழலியோ " எஸ் மிஸ்டர் சூர்யா நீங்க சொல்றத வச்சி பாத்தா உங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் தான் ஆகுது ரைட். வேணும்னா நாம ஒன்னு பண்ணலாம் இன்னும் ஒரு மூணு மாசம் ரெண்டு பெரும் பிரிஞ்சி இருந்து பாருங்க, நான் டிவோர்ஸ் டீடெயில்ஸ் பத்தி உங்க ரெண்டு பேருக்கும் அனுப்புறேன் ஹெரிங் மூணு மாசம் கழிச்சி வச்சிக்கலாம் " என சொல்றிங்க என்றாள்
அவனோ ' ஓகே மேடம், எனக்கு தெரிஞ்சு இன்னும் மூணு மாசத்துல ஒன்னும் மாற போறது இல்ல சோ ஹெரிங் அப்பவே வச்சிக்கலாம் ' என்றான்
குழலியோ " அப்படி சொல்ல முடியாது யார் கண்டா நீங்களே கூட அப்ப வந்து எனக்கு என் மனைவி தான் வேணும்னு கூட சொல்லலாம் " என்றார் சிரிப்போடு
அவனோ " பாக்கலாம் மேடம் " என கூறி வெளியே சென்று விட்டான்.
---
சில மணி நேரங்களில், நிலாவின் மொபைலில் ஒரு mail வந்தது.
அதைத் திறந்தவுடன், கண்கள் பெரிதாகி, மூச்சு நின்றது போல அவள் குலைந்தாள்.
“Divorce Petition – Respondent: Thoorigai Nila” என்ற தலைப்பு அவள் வாழ்க்கையைச் சிதறடித்தது.
அவள் சில நொடிகள் நின்றாள். பின் சுவரை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
“இது உண்மையா? மாமு எனக்கு டிவோர்ஸ் தர போறாரா …”
அவள் அழுகையை அடக்க முடியாமல் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வழிந்தன.
ஆனால் உடனே மனதில் ஓர் உறுதி வந்தது. “இல்லை. நான் மாமூவ நேராகச் சந்திக்கணும். ஏன் இப்படிச் செய்றிங்கனு கேட்கணும்.” என நினைத்து உடனே சூர்யா இருக்கும் கல்லூரிக்குப் போவதற்காக வீட்டை விட்டு வெளியேறினாள்.
வேகமாக அவள் காரில் காலேஜ் நோக்கி சென்று கொண்டு இருந்தாள் தூரிகை நிலா. அவள் நினைவோ பூமியை சுற்றும் சூரியனை போல அவள் சூரியனை தான் சுற்றி கொண்டு இருந்தது. அப்போது அவளை வழிமறித்து ஒரு லாரி நிற்க அவள் பின்னால் ஒரு கருப்பு காரில் இருந்து இறங்கிய ஒரு மர்ம நபர் நிலாவின் காரை உடைத்து அவளை கடத்தி சென்றான்.
யார் அவன்?
தொடரும்...

Author: Nithya
Article Title: ரதி 🩵 38
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.