Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
அத்தியாயம் 31


அந்த மாலை வேலை அவசரமாக தயார் ஆகி கொண்டு இருந்தனர் தேவ் குடும்பம் முழுவதும், அவர்கள் அங்கே இப்படி பரபரப்போடு சென்று கொண்டு உள்ளனர். காணலாம் வாருங்கள்....

பெரிய ஹோட்டலில் நடக்கும் ப்ராஜெக்ட் பங்க்சனுக்கு அனைவரும் ரெடியாகி சென்றனர். தேவ் சிம்பிளான பிளாக் சூட்டில் மிளிர்ந்தான். ரதியோ டார்க் மரூன் சாட்டின் சாரீயில் அழகோடு திகழ்ந்தாள். சூர்யா, வீர், நிலா மூவரும் ஒரே கலர் உடையில், சின்ன அரசர்களும் அரசியும் போல் தெரிந்தனர். ராகவனும் பல்லவியும் டார்க் ப்ளூ கலர் பார்ட்டி உடையில் இருந்தனர்.

விழா ஆரம்பம்...

ஸ்டேஜ் மேல் ரதிமலரின் பெயர் அழைக்கப்பட்டவுடன் ஹால் முழுக்க கைத்தட்டல்கள் ஒலித்தன. தொகுப்பாளர் “பெஸ்ட் பிஸினஸ் ப்ராஜெக்ட் அவார்ட்” கோஸ் டு மிஸ்ட்ரெஸ் ரதிமலர் ருத்ரதேவன் என்று மைக்கில் அறிவித்தார்.

ரதியோ மேடைக்கு சென்று விருது பெற்றாள். மைக்கில் பேச அழைக்கப்பட்ட போது, அவள் சிறு புன்னகையோடு

“இன்று நான் இங்கே நிற்பதற்கு என் தேவ், என் பிள்ளைகள் தான் காரணம். நான் துவண்டு போகும் போது எனக்கான மோட்டிவேஷன் அவங்க தான்.அது மட்டும் இல்ல என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் வலிமை என் குடும்பம் தான் என்பதை இங்கு கூற பெருமை படுகிறேன் . இந்த விருது எதுவும் எனக்காக இல்ல... என் குடும்பத்துக்காக...” என்று சொன்னவுடன் முழு ஹாலே நின்று கைத்தட்டினார்கள்.

ரதி மேடையை விட்டு கீழ் இறங்கி ஓடி சென்று தேவ்வை அணைத்து கொண்டு " காங்கிரஸ் மிஸ்டர் ருத்ரதேவன் நாம ஜெயித்துவிட்டோம் " என்றாள் மகிழ்ச்சியில் தேவ்வோ பெண் அவளை விளக்கி அவள் நெற்றியில் முத்த மிட்டான்.அந்த அழகிய தருணம் எல்லாம் புகைப்படமாக மாற்ற பட்டது.

---

பதினைந்து வருடங்கள் கழித்து...


ஆர். எம். பேலஸ் புதிய பொலிவுடன் இருந்தது. வீரராகவன் - மீனாட்சி இருவரும் வயது மூப்பு காரணமாக இறைவன் அடி சென்று விட தேவராகவன் மற்றும் ரதிமலர் ஒன்றாக அங்கே வாழ்ந்து வந்தனர்.

சின்ன இன்றோ :

Dr.தேவராகவன் - Dr. ராகபல்லவி
மகன் - கவிசூரியன்

ருத்ரதேவன் - ரதிமலர்
மகன் ருத்ரவீர் - ஆத்யா
மகள் தூரிகை நிலா

அந்த வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்து இருந்த காலம் மாறி இன்று கண்ணீர் கடலில் தத்தளித்து கொண்டு இருந்தனர்.
ரதியோ அவள் அறையில் அழுது கொண்டு இருக்க அவள் அருகில் வந்த தேவ் ' இன்னும் ரெண்டு நாள் டைம் கொடு அம்மு அதுக்குள்ள பாப்பா வீட்ல இருப்பா, இப்படி அழுகாத டி பாக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ' என கூற

அவளோ பாய்ந்து சென்று அவனை அணைத்து கொண்டு ' கண்டிப்பா நீ கூட்டிட்டு வருவேன்னு தெரியுமா ஆனா என்னால முடியல தேவ் அவளால பசி கூட தாங்க முடியாது சின்ன குழந்தை தேவ் அவ என கூற

அவனோ ' நம்ம பாப்பாவை கடத்துனவன் மட்டும் கிடைக்கட்டும் அப்பறம் இருக்கு அவனுக்கு, நான் சூர்யா கிட்ட சொல்லி இருக்கேன் அவன் தேட போய் இருக்கான் நீ அழுகாத டி ' என ஆறுதல் கூறினான்.

---

ராகவன் அறையில்....

" டேய்! இன்னும் என்னடா ம*ற****டு ஹா இருக்கீங்க என் பாப்பா காணாம போய் ரெண்டு நாள் ஆகுது, என்ன பண்ணுவீங்களோ எது பண்ணு வீங்களோ எனக்கு தெரியாது நாளைக்கி காலையில அவ என் வீட்ல இருக்கனும் " சிங்கத்தின் கர்ஜனை போல முழங்கி கொண்டு இருந்தான் தேவராகவன்.

அவன் அருகே வந்த பல்லவியோ " என்னாச்சு அத்து எதாவது தெரிஞ்சுச்சா பாப்பா எப்ப வருவா " என்று எதிர் பார்ப்போடு கேக்க

அவனோ ' தேட சொல்லி இருக்கேன் பேபி நீ போய் ரதி கூட இரு நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன் ' என்று வெளியே சென்று விட்டான்.

வீட்டில் இப்படி ஒவ்வொரு முளையிலும் ஒருவர் கவலையாக இருக்க காரணமான அந்த பாப்பா யார்? எங்கே அவள்?

இவர்கள் தேடலுக்கு காரணமானவளோ அந்த பீச் ஹவுஸ்யில் ஒரு அறையில் மயக்க நிலையில் இருந்தாள். அப்போது உள்ளே வந்த அந்த கருப்பு உருவமோ அவள் மேல் நீரை உற்ற அவளோ பதறி அடித்து கொண்டு எழுந்தாள்.

எழுந்தவள் சுற்றி முற்றிலும் பாக்க தான் எதோ புதிய இடத்தில் இருப்பதை உணர்ந்து தன் எதிரே இருப்பவனை பயம் கலந்த பார்வை பார்த்து ' நீ.. நீ.. யாரு ' என்றாள்

அவனோ சிரித்து கொண்டே ' உன் காதலன் ' என்றான்

அவளோ அவனை நன்றாக பார்த்து ' போய் சொல்லாத டா என் மாமூவ பத்தி எனக்கு தெரியும் முதல என்னை விடு நான் போகணும் அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் நான் வீட்டுக்கு போகணும் ' என எலி குட்டி போல அவள் கீச்.. கீச்.. குரலில் கத்த

அவனோ கல்யாணம் என்ற வார்த்தையில் கோபம் ஆகி ' இங்க பாரு வாய மூடிக்கிட்டு இருந்தா உனக்கு நல்லது இல்லனுவை உனக்கு தான் சேதாரம் ஜாஸ்தி ' என அவன் கையில் இருந்த உணவையும் நீரையும் வைத்து விட்டு வெளியே சென்று விட்டான்.

அவளுக்கு பசி பயங்கரமாக எடுக்கவே அந்த உணவை உண்டு விட்டு அங்கே படுத்து கொண்டாள்.

இரவு நேரம்......

அந்த பீச் ஹவுஸின் மேல் மாடியில் இருந்த அந்த இருட்டானா அறையில் அந்த பெண் தனியாக கீழே சாய்ந்து அமர்ந்து இருந்தாள். சுவர்களே மூச்சுத்திணற வைக்கும் மாதிரி இருந்தது. அவள் மனமோ ' எப்ப வந்து என்ன கூட்டிட்டு போவ டா மாமு ' என அவள் காதலன் மாமு நினைத்து அழுதாள்.

இங்கே நெடுசாலையில்....

ராகவனோ காரை ஓரமாக அந்த ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஷீட்! என்று ஓங்கி உதைத்தான். ' எங்க போன பாப்பா, எப்படி இப்படி நடந்துச்சு, யாரு? யார்? அது உன்ன கடத்துனது ' என யோசித்து கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான். அப்போது அவன் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் என்ன செய்தி கூற பட்டதோ புயலேனா அவன் வாகனத்தை இயக்கி கொண்டு கடற்கரை பாதை நோக்கி சென்றான்.

---
பீச் ஹவுஸ்....

அந்த அறைக்குள் வந்த கருப்பு உருவமோ " ஹேய்! எழுந்திரு டிஇஇ " என அறை அதிரும் அளவு கத்த

பெண் அவளோ பயந்து எழுந்தாள்.
அவனோ " இங்க பாருடி உன்ன இப்ப நான் வெளிய விடுறேன், திருப்பி ஒரு முறை என் கண்ணுல நீ பட்டாலும் அந்த சாவு கூட உன்ன என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது நியாபகத்துல வச்சிக்கோ போ போடி " என கத்த

அவளோ விட்டாள் போதும் என வேகமாக வெளியே கடற்கரையை நோக்கி ஓடி சென்று மறைந்து விட்டாள். செல்லும் அவளையே விழி ஆகலாமல் பார்த்து கொண்டு இருந்தான் அந்த கருப்பு மனிதன். யார் அவன்?

அடுத்த பாகத்தில்....

தொடரும்...
 

Author: Nithya
Article Title: ரதி 🩵 31
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top