Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

ரதி 🩵 எபிலாக்...

Member
Messages
53
Reaction score
8
Points
8
எபிலாக்.....


சொன்னது போலவே காலை சூர்யாவோடு கரம் கோர்த்து கொண்டு ஆர். எம். பேலஸ்க்குள் நுழைந்தாள் தூரிகை நிலா. இவர்கள் ஒன்றாக வருவதை பார்த்த அனைவரும் மகிழ்ச்சியோடு பார்த்தனர்.... ராகவன் மட்டும் கோபமான முக பாவனையோடு அமர்ந்து இருந்தார்....

ஹால் சோபாவில் ராகவன் - ரதி அமர்ந்து இருக்க இருவருக்கும் இடையில் அமர்ந்து இருந்த சூர்யாவோ ' ரதிம்மா நீங்களாவது சொல்லுங்க.... உங்க அண்ணா ரொம்ப பன்றாரு.... நீங்க சொன்ன அவர் கேப்பாரு சோ என் கிட்ட பேச சொல்லுங்க.... ' என ரதியிடம் கெஞ்சி கேக்க

ராகவனோ அவ சொன்ன நான் கேட்கணுமா என்பது போல அமர்ந்து இருந்தார்.. ரதியோ ' நீ ஆச்சு ராகவ் ஆச்சு ' என விலகி கொள்ள... அவன் பார்வையோ இப்போது அவன் மனைவி நிலாவின் மேல் படிந்தது.

பெண் அவளுக்கோ ஒரு புறம் பல்லவி உணவை ஊட்டி கொண்டு இருக்க.... மறுபுறம் வீர் அவள் பாதங்களை பிடித்து விட்டு கொண்டு இருந்தான்... அவளோ சோபாவில் அமர்ந்து சூர்யா படும் அவஸ்தைகளை கண்டு சிரித்த படி பார்த்து கொண்டு இருந்தாள்...

அப்போது தேவ் உதவியோடு கதிர் வீட்டிற்குள் மெதுவாக நடந்து வர அதை கண்ட சூர்யாவோ எழுந்து சென்று கதிரை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தான். வீட்டில் உள்ள அனைவரும் அவனிடம் நலம் விசாரிக்க பின் பொதுவாக பேசி கொண்டு இருந்தனர். ரதியோ கதிரிடம் " அப்பறம் கதிர் அடுத்து என்ன வேலை பாக்க போற... பிசினஸ் பன்றியா... இல்லை எதுவும் பிளான் இருக்க?? " என்றாள்

கதிர்யும் ' ஆமா, ரதிம்மா ஆஸ்திரேலியா போகலாம்னு இருக்கேன்... மனசுக்கு கொஞ்சம் சேஞ்சு வேணும்னு தோணுது ' என்றான்

ராகவனோ ' அப்பறம் எப்ப கல்யாணம் பண்ணிக்க போற... உன்கூட சுத்துன எருமை மாடு எல்லாம் அப்பா ஆக போகுது ' என கூறி சூர்யாவை முறைக்க

சூர்யாவோ ' நான் எருமைனா அப்ப அவரு யாரு ரதிம்மா ' என்றான்...

பல்லவியோ சிரித்த படி ' யாரு அப்பாவாக போற ' என கேக்க

ராகவனோ ' இதோ சார் தான் ' என சூர்யாவை காட்டினார்...

பல்லவியோ நிலாவை பார்த்து ' ஒய், பாப்பா சொல்லவே இல்ல இதுக்கு அந்த குரங்கும் துணையா.... ' என கேக்க

சூர்யாவோ ' ம்மா... அவ நேத்தே சொல்ல சொன்ன நான் தான் உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்... ஆனா அதுக்குள்ள அப்பா தான் என்கிட்ட பேசாதடான்னு கோச்சிக்கிட்டாரு அதான் சொல்லல ' என்றான்

வீட்டின் முதல் குழந்தை வரவை எண்ணி அனைவரும் மகிழ்ச்சியாக நிலாவிற்கு அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்...

ஒன்பது மாதங்கள் கழித்து....

ஆஹ்... ம்ம்மமமா... என வலியில் கத்தி கொண்டு இருந்தாள் தூரிகை நிலா. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை இப்படி தான் அடி வயிற்றில் சுயிர் என வலி எடுத்து அவள் அலற.....

அப்போது அவள் கைகளை பிடித்து கொண்டு ' ஒன்னும் இல்ல டா கொஞ்சம் புஷ் பண்ணு ' என தைரியம் சொல்லி கொண்டு இருந்தான் கவி சூரியன்.

அவளோ தலையை இட வலமாக அசைத்து கொண்டே ' முடியல மாமு ரொம்ப வலிக்குது ' என கண்களில் நீரோடு கூற...

அதற்குள் மருத்துவரோ ' புஷ் பண்ணுங்க மேடம் குழந்தை தலை தெரியுது ' என்றார் அவளால் ஒன்றுமே.. முடியவில்லை... வலியில் கத்தினாள்... முழு முயற்சி செய்து குழந்தையை வெளியே தள்ள முயற்சி செய்தாள்...

சூர்யாவும் அவள் கண்ணீரை துடைத்து நெற்றியில் முத்தம் வைத்து "ஒண்ணும் இல்ல நிலா மா கொஞ்சம் முயற்சி பண்ணு டா பாப்பா வெளிய வந்ததும் உனக்கு வலி குறைஞ்சிடும் " என ஆறுதல் கூற

அடுத்த வலி.....

ஆஆஆஆ.... என்று அவள் அலற..

" கொஞ்சம் முயற்சி பண்ணு நிலா " என்றான்.. அவளும் தன் முழு சக்தி கொண்டு அவளின் மெடிட்ட வயிற்றை கீழ் நோக்கி அழுத்தி.... குழந்தையை வெளியே தள்ளி இருந்தாள் நிலா....

ரத்தமும் சதையுமாக அவர்கள் குழந்தை... அவளவனுக்காக உயிரை கொடுத்து அவள் தந்த விலை மதிப்பில்லாத பரிசு....

" காங்கிரட்ஸ் மிஸ்டர் சூர்யா.. " பொண்ணு பிறந்து இருக்கா... என்றார் மருத்துவர்.. மூச்சு முட்டியது அவனுக்கு...

முதல் முறையாக அவன் குட்டி தேவதையின் குரலை கேக்கிறான்... குழந்தையை கூட வாங்க முடியாமல் ' நிலா... நிலா... ' என பெண் அவளின் கையை இருக்கி பற்றி கொண்டான்.


நிலா வலியை மறந்து மெதுவாக புன்னகையுடன், கண்ணீர் வழிய, ‘பாப்பா பொறந்து இருக்கா மாமு... காங்கிரட்ஸ்...’ என்றாள்... அவன் நெற்றி மூட்டி.... அவனும் அழுகை கலந்த சிரிப்போடு ' ம்ம். உன்ன மாதிரியே எலி குட்டி.... ' என்றான்

சிறிது நேரத்தில் குழந்தையை சுத்தம் செய்து அவன் கைகளில் கொடுத்தார் மருத்துவர்... அவனும் சிறு நடுகத்தோடு அந்த சிறிய மொட்டை கைகளில் ஏந்தி கொண்டு அதன் நெற்றியில் முத்தம் வைத்து ' ரொம்ப அழ வச்சிட்ட பாப்பா என் நிலாவா... இனிமே இப்படி எல்லாம் பண்ண கூடாது ' என்றான்

----

வெளியே தேவ் - ரதியின் மொத்த குடும்பமும் காத்து கொண்டு இருக்க.. தன் ஆறு மாத மெடிட்ட வயிற்றை ஒரு கையில் பிடித்து கொண்டு வீரின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு இருந்தாள் ஆத்யா..

வீரோ " என்னாச்சு அதிமா எதாவது வேணுமா " என்றான்..

அவளோ ' அதெல்லாம் ஒன்னும் வேணாம் ருத்து.. நீயும் சூர்யா மாதிரி என் கூடவே இருப்பியா நம்ம பாப்பா வரும் போது ' என்றாள்

வீரும் ' கண்டிப்பா வரேன் அதி.. ரொம்ப நேரமா நிக்குற கொஞ்ச நேரம் உக்காரலாமா... ' என்றான்

ஆத்யாவோ ' வேணாம் ருத்து.. ' என சொல்ல.... அப்போது கையில் தன் மகளோடு வெளியே வந்தான் சூர்யா..

மொத்த குடும்பமும் அவனை சுழ்ந்து கொள்ள சூர்யாவோ சந்தோசமாக ' பொண்ணு பொறந்து இருக்க.. ' என்றான்

தேவ் கையில் குழந்தையை கொடுத்த சூர்யாவோ ' எங்கள வளர்த்த மாதிரி இனிமே இவளையும் நீங்க தான் பார்த்துக்கணும் ' என்றான்

தேவ்வோ ' கண்டிப்பா என் அம்முமாக்கு அப்பறம் என் வாழ்க்கையில் கிடைச்ச பெரிய பொக்கிஷம் இவ ' என ஆனந்த கண்ணீரோடு பேத்தியின் நெற்றியில் முத்தம் வைத்தான் ருத்ரதேவன்...

நார்மல் டெலிவரி என்பதால் சில நாட்கள் கழித்து நிலாவையும் குழந்தையையும் வீட்டிக்கு அழைத்து வந்தனர்.. ஒரு நல்ல நாளில் குழந்தைக்கு அமுதினி என பெயர் சூட்டினர் தேவ்வும் ராகவனும்....


🎶🎶சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ❤️

🎶சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ💞

🎶அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை💜

🎶இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்🎶 💞


நாட்களும் மழலைகளின் மொழிகளோடு இனிமையாக செல்ல.... ருத்ரவீர்க்கும் ஆத்யாவிற்கும் மகன் யாழன் பிறந்தான்.... இப்படியே ஒரு வருடம் சென்று விட இன்று அவர்கள் வீட்டு செல்ல இளவரசி அமுதினி பிறந்தநாள்....

இரவு பிறந்தநாள் பார்ட்டி முடிந்து அனைவரும் அவரவர் அறைகளில் தஞ்சம் கொள்ள இங்கு சூர்யாவின் அறையில்....

உறங்கும் மகளை தோளில் போட்டு நடந்து கொண்டு இருந்தான் அவன்.. நிலாவோ மெத்தையின் ஒரு புறம் அமர்ந்து கொண்டு கையில் இருக்கும் அப்ளிகேஷன் பேப்பரையும் அவள் மாமூவையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தாள்...

சூர்யாவும் மகளை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு, அவள் அருகே வந்து அமர்ந்தான்.. அவளும் சூர்யா எதிர் பார்த்தது போல " நான் அமெரிக்கா போகல " என்றாள்

அவனும் எதுவும் தெரியாதது போல ' எதுக்கு இப்ப நீ போகல ' என்றான்

அவளும் ' ஏன்? உனக்கு தெரியாத மாமு ' என்றாள்

' பச்! இப்ப என்ன தாண்டி உன் பிரச்சனை சொல்லு... உன்னோட ஆசை தான அமெரிக்கா போய் ப்ராஜெக்ட் பண்ணனும்னு இப்ப தான் அதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சி இருக்கு... ஆனா இப்படி சின்ன பசங்க ஸ்கூலுக்கு போக சொன்ன மாட்டேன்னு அடம் பிடிக்குற மாதிரி போக மாட்டேன்னு சொல்ற ' என்றான் கோபமாக

அவளோ ' அப்ப நான் வேணாம் என்ன அமெரிக்கா அனுப்பிட்டு அப்பாவும் பொண்ணும் மட்டும் ஜாலியா இருக்க போறிங்களா ' என்றாள்

அவனோ ' ஏய்! எலி குட்டி சொல்றத கேட்டு ஒழுங்கா ஊருக்கு போய்ட்டு வா... என்ன ஒரு வருஷம் தான... பாப்பாவா நான் பார்த்துக்குறேன்.. ' என்றான் அவள் அருகில் அமர்ந்து கொண்டு

அவளோ அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு ' உங்க ரெண்டு பெரையும் விட்டுட்டு நான் மட்டும் தனியா எப்படி மாமு போறது. ஐ மிஸ் யூ ' என்றாள்

அவனும் அவளை அணைத்து கொண்டு ' இதே மாதிரி ரதிம்மா சொல்லி இருந்தா நாம இவ்வளவு நாளும் ஆர். எம். குரூப்ஸ் நடத்தி இருக்க முடியாது எலி குட்டி.... இப்ப எதோ வேகத்துல வேணாம்னு சொல்ற அதுவே நாளைக்கி ஒரு வேல போய்ட்டு வந்து இருக்கலாமேனு தோணும்...

அதனால கொஞ்ச நாள் தான்... நானும் இங்க இருக்க வேலை எல்லாம் கதிர் கிட்ட கொடுத்துட்டு பாப்பாவோட அங்க வரேன் சரியா ' என்றான்

அவளும் அரை மனதாக " சரி நான் போறேன் ஆனா நீயும் கூடவே வரியா " என்றாள்

அவனும் ' சரி... முதல இத பில் பண்ணி அனுப்பு அப்பறம் போறத பத்தி சொல்றேன் ' என அவன் மனைவியை கெஞ்சி கொஞ்சி அமெரிக்கா செல்ல சம்மதிக்க வைத்து விட்டான்....

நாட்கள் நிமிடங்களாக செல்ல நிலா அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது... இன்று இரவு விமானம் என்று இருக்க.. கிளம்ப மனமே இல்லாமல் சூர்யாவின் நெஞ்சின் படுத்து கொண்டு இருந்தாள் தூரிகை நிலா.. அவனும் ஒன்றும் கூறாமல் அவளை அணைத்த படி இருந்தான்.

கிளம்பும் நேரம் அருகில் செல்ல... செல்ல... இருவரையும் பிரிவு என்னும் துயர் வாட்டியது... பிறந்தது முதல் அவன் கைகுள்ளேயே வைத்து சுற்றி கொண்டு இருந்தவனால் அவள் தொலை தூரம் செல்வதை ஏற்கவே சில காலம் ஆனது இருந்தும் அவனவளுக்காக தானே என பிரிவையும் ஏற்றுக்கொண்டான்...

நேரம் ஆவதை உணர்ந்து நெஞ்சில் இருப்பவளின் இதழில் ஆழமான முத்தத்தை வைத்து ' அங்க போனதும் அழ கூடாது.. பத்திரமா போய்ட்டு வா எலி குட்டி, ஐ மிஸ் யூ ' என்றான்

அவளும் அவனை இருக்கி அணைத்து கொண்டு ' ஐ ஹேட் யூ ' என்றாள்

சூர்யாவும் சிரித்து கொண்டே ' சரி உனக்கும் சேர்த்து நானே லவ் யூ சொல்றேன்.. போனதும் கால் பண்ணு.. டைம்க்கு சாப்பிடு.. சரியா ' என்றான்

அவளும் அமைதியாக அவன் மார்பில் மேலும் ஒன்றி கொண்டாள்...

---

விமான நிலையம்....

வீட்டிலே அனைவரிடமும் விடை பெற்று கொண்டு மூவரும் விமான நிலையம் வந்து இருந்தனர். அமுதினி அவள் தோளில் தூங்கிக் கொண்டிருக்க
நிலா கண்ணகளில் நீருடன் சூர்யாவின் தோளில் சாய்ந்து கொண்டு இருந்தாள்.

“ நான் உங்க ரெண்டு பெரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன் மாமு...” என்றாள்

சூர்யாவோ ஒரு கையால் அவளை அணைத்து கொண்டு மறு கையால் அவள் கண்களை துடைத்து விட்டு , “ அழ கூடாதுனு சொன்னேன்ல.. எதுக்கு இப்ப அழுகுற.. " என்றான்

அவளோ ' நான் ஒன்னும் அழல அது கண்ணுல தூசி விழுந்திடுச்சு ' என்றாள்

அவனோ அவள் பதிலில் சிரித்து கொண்டு " அமெரிக்கா போகுறதுக்கு ஏன் அழுற? போடா... போய்ட்டு சீக்கிரமா ப்ராஜெக்ட் முடிச்சிட்டு வா... நீ வர வரைக்கும் நானும் பாப்பாவும் வெயிட் பண்ணுவோம்.” என்றான்

அவள் சிரிக்க முயன்றாலும் கண்ணீர் வழிந்தது.
அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன் சரியா... இன்னும் அழுது என்னையும் சேர்த்து அழ வைக்காத.. எலி குட்டி " என்றான்

அவளும் ' சரி நான் அழல.. ஒழுங்கா டைம்க்கு சாப்டு தூங்குங்க.. நான் இல்லனு அப்பாவும் பொண்ணும் ஜாலியா ஊர் எல்லாம் சுத்திட்டு இருக்க கூடாது ' என்றாள் அக்மார்க் மனைவியாக

அவனும் சிரித்து கொண்டே ' சரிங்க மஹாராணி ' என குழந்தையை வாங்கி கொண்டு வழி அனுப்பி வைத்தான்.

கண்களில் நீரோடு அவளும்..
கையில் மகளோடு அவனும்..
இருவருக்குமான முதல் பிரிவு இதுவே....
தூரம் தான் வந்ததடி...
ஆனா மனசு எங்கே போகுமடி...
உன் சிரிப்பின் ஒலி இன்னும் என் காதில் கேக்குதடி...
இதழின் ஈரம் காயும் முன்னே தூரம் சென்றது ஏனடி....

போனின் மறுபுறம் உன் குரல் கேட்டாலே,
உலகமே நெருக்கமாய் மாறுதடி...
உன் சிரிப்பு தான் என் பகல் ஒளி,
உன் நினைவு தான் என் இரவின் நிலா.
நீயே என் வாழ்வின் வெளிச்சமடி...

மைல்கள் பிரிந்தாலும் இதயம் இணைந்தே,
காலம் பிரித்தாலும் காதல் தளராதே...
தொலைவில் இருந்தும் இன்னும் நெருக்கமாய்
நம் பாசம் என்றுமே உயிராய்...💞

---

பிரிவை கண்டது தானே வாழ்க்கை நிலாவின் வாழ்வும் அப்படி தான் முதலில் குடும்பத்தை விட்டு இருப்பது அவளுக்கு கடினமாக இருந்தாலும் பின் போக.. போக.. பெண் அவளுக்கு பழகி விட்டது. தினம் காலையில் வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒரு முறையாவது வீடியோ காலில் பேசி விடுவாள்.... இப்படியே ஆறு மாத காலம் ஓடி விட்டது...

அன்றும் அப்படி தான் வீட்டிற்கு அழைத்து அனைவரிடமும் பேசியவள் அமுதினியை பற்றி கேக்க பல்லவியோ சூர்யாவோடு வெளியே சென்று இருப்பதாக கூறினார். அவளும் சரி என்று அவனுக்கு அழைக்க சுவிட்ச் ஆப் என வந்தது...

இதே கதை இரண்டு நாட்களும் தொடர.. அன்று இரவு சூர்யாவின் அழைப்பு வருகிறதா என அலைபேசியை பார்த்த படி அவன் போட்டோவை மார்போடு அணைத்து கொண்டு சோபாவில் படுத்து இருந்தாள் பெண் அவள்... கண்களில் உறக்கம் வருவேனா என அடம் பிடிக்க..

சரியாக நள்ளிரவு 2 மணி போல அவள் தங்கி இருந்த அபார்ட்மெண்ட்யின் அழைப்பு மணி அடித்தது.. அவளும் எதோ யோசனையில் அதை தவிர்க்க.. பின் விடாது கேட்ட சத்தத்தில் சென்று கதவை திறந்தவள் கண்களோ ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்தது...

ஆம், அங்கே அவள் மாமு தான் கையில் அமுதினியோடு நின்று இருந்தான். அதிர்ச்சியில் சிலையென நின்றவளோ.. குழந்தையின் ' ம்மா... ம்மா... தூக்கு ' என சத்தத்தில் தான் சுயம் வந்து குழந்தையை வாங்கி கொண்டு உள்ளே சென்று விட்டாள். சூர்யாவும் ட்ரோலியை தள்ளி கொண்டு உள்ளே வந்தவன் கண்டது என்னவோ மகளை கட்டி கொண்டு முத்த மழை பொழியும் அவன் பெண் நிலவை தான்...

பின் அவனும் சென்று ரெப்பிரேஷ் ஆகி விட்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டு ' என்ன பண்ற எலி ' என்றான் அவள் தோளில் சாய்ந்த படி.. நிலாவோ தன் தோளில் இருந்து அவன் தலையை விலக்கி விட்டு ' இத்தன நாள் பேசாம தான இருந்த இப்பவும் அப்படியே இரு ' என்றாள் கோபமாக

மனைவியின் கோபத்திற்கான காரணம் தாமதமாகவே மூளைக்கு உரைக்க... " சாரி டி எலி உனக்கு சர்பிரைஸ் தரலாம்னு போன் பண்ணல " என்றான்

" போட லூசு நீயும் உன் சர்பிரைஸ்யும் ஒரு நிமிஷம் பயந்துட்டேன் தெரியுமா உனக்கு தான் எதோ ஆகிடுச்சுனு " என அவன் மார்பில் அடிக்க...

முகத்தில் சிரிப்போடு அதை ஏற்று கொண்ட சூர்யாவோ " சாரி டி.. ரொம்ப பயந்துட்டியா என்ன... நான் கூட போன் பண்ணலாம்னு தான் நினைச்சேன் ஆனா கதிர் தான் போன் பண்ண வேணாம் நேர்ல போய் பேசிக்கோன்னு சொல்லிட்டான் " என விலக்க...

அப்போ அந்த லூசு கூட சேர்ந்து நீயும் லூசு ஆகிட்ட... போ போய் அவன் கூடவே தூங்கு.. என உறங்கும் மகளை தோளில் போட்டு கொண்டு அறைக்கு செல்ல

சூர்யாவோ ' ஒய் எலி குட்டி.. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.. ரொம்ப நாள் கழிச்சு புருஷன பாக்குறோம்னு ஒரு பீலிங் இருக்கா.. இப்படி தனியா படுக்க சொல்லிட்டு போற... சரியான ராட்சசி டி நீ ' என புலம்ப

மெத்தையில் குழந்தையை படுக்க வைத்த நிலாவோ ' என்ன புலம்ப வச்சீங்களா அதனால தனியாவே இருங்க ' என கூறி கதவை சாத்த போக.. அவளுக்கு மூன் உள்ளே சென்று கதவை அடைத்தவனோ அவளின் இடையை கை வைத்து இருக்கி அணைத்து கொண்டு " என்ன சொன்ன " என்றான் எதுவும் கேக்காதது போல...

அவளோ அவனின் அதிரடியில் ஒரு நிமிடம் அதிர்ந்து ' என்ன சொன்னேன்... ' என்றாள்..

அவனும் சிரித்து கொண்டே அவள் கழுத்தில் மீசை மூடி உரச... குட்டி குட்டி முத்தம் வைத்து கொண்டே.. ' அதான் சாரி சொன்னேன்ல இன்னும் கோபம் போகலையா... என் எலி குட்டிக்கு ' என்றான்

ஆடவனின் சூடான மூச்சு காற்று கழுத்தில் பட்டு உடலில் ஒரு வித மாற்றதை கொடுக்க.. இருந்தும் கோபத்தை விடாமல் ' ஆமா, உன் மேல கோபம் போல ' என்றாள் பொய்யாக

அவனும் ' சரி அப்ப என் ஸ்டைல் ல சாரி சொல்லவா ' என ஒற்றை புருவத்தை வில்லாக வளைத்து கேக்க... அதன் அழகில் சொக்கி தான் போனாள் பேதை அவள்.. அடுத்த நொடி அவள் உணரும் முன்னே அவளின் செம்மாதுளை இதழ்களை கொய்த்து.. அவன் வழியில் மன்னிப்பு கேட்டு கொண்டு இருந்தான் சூர்யா...

விடிய விடிய இருவரின் இத்தனை நாள் பிரிவு.. ஏக்கம்.. அன்பு.. காதல்.. என ஒருவரின் மேல் ஒருவர் காட்டி கொண்டு இருக்க குழந்தையின் உறக்கம் கலையா வண்ணம்... அந்த அறையில் ஆண் அவனின் முத்த சத்தமும்.. பெண் அவளின் மோக முனகள்களுமே நிரம்பி வழிந்தது...

நள்ளிரவு ஆரம்பித்த ஆண் அவனின் மன்னிப்பு கேக்கும் படலம் மறுநாள் காலை தான் முடிவுக்கு வந்தது.. இரவு நடந்த கூடலில் சோர்ந்து போய் அவன் மார்பில் உறங்கி கொண்டு இருந்தாள் நிலா...

அதன் பின் நிலா ஒரு பக்கம் ப்ராஜெக்ட் வேலையும்.. மறுபக்கம் சூர்யா, அமுதினியோடு சேர்ந்து நாட்கள் அழகாக மாற்றி கொண்டு இருந்தாள்.. மூவராக அமெரிக்கா சென்றவர்கள்.. நால்வராக தான் இந்தியா திரும்பினர்..

சில வருடங்கள் கழித்து......


🎶🎶நூறு வருசம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு வெளங்க இங்கு வாழனும்
சோலவனத்தில், ஒரு சோடி குயில் போலத்தான்
காலம் முழுக்கு சிந்து பாடனும்
ஒன்னுக்-கொன்னு பக்கத்திலே
பொண்ணு-புள்ள நிக்கயில
கண்ணுபடும் மொத்தத்தில
கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல! 🎶🎶

என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப இன்னும் 20 களில் இருந்த அதே காதலும் அழகும் போட்டி போட HAPPY 30TH WEDDING ANNIVERSARY என எழுத பட்ட சாக்லேட் கேக்யின் முன்னால் நின்று இருந்தனர் ருத்ரதேவனும் - ரதிமலரும்....

தலையில் சில வெள்ளி கம்பிகள் எட்டி பார்க்க அவர்கள் அருகில் முகம் முழுதும் சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தனர் தேவராகவனும் ராகபல்லவியும்... கூடவே ருத்ரவீர்.. ஆத்யா.. கவி சூரியன்.. தூரிகை நிலா.. கதிர் வேந்தன் அவன் மனைவி முல்லை நிலா என அனைவரும் ஒன்றாக நின்று கைகளை தட்ட தேவ் - ரதி இருவரும் ஒன்றாக கேக்யை வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொண்டனர்..

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆர். எம். பேலஸ் வண்ண விளக்கு மற்றும் மலர்களால் ஜொலிக்க... வீடே மழலைகலான சூர்யா - நிலாவின் மகள்கள் அமுதினி, சுடர் நிலவன்.. வீர் - ஆத்யா மகன் யாழன், கதிர் - முல்லை மகன் அகர இனியன் என நான்கு குழந்தைகளினால் உயிர்போடு இருந்தது...

இரவு உணவுக்கு பின் அனைவரும் அவர்கள் அறையில் தஞ்சம் கொள்ள... ரதி பால்கானியில் நின்று வானத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்... அவளை பின் இருந்து அணைத்து கொண்ட தேவ்வோ ' என்ன பலமான யோசனை அம்மு ' என்றான்..

அவளோ திரும்பி அவன் முகம் பார்த்து " ஒன்னும் இல்ல தேவ்.. நாம கடந்து வந்த இந்த 30 வருசத்த பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேன்.. எத்தன பிரச்சனை.. எவ்வளவு வேதனை.. நான் சந்தோஷமான இருந்த நேரமும் சரி.. சோகமான இருந்த நேரமும் சரி.. எப்பவும் உன்ன தான் மனசு தேடுது.. நம்ம கல்யாணம்.. வீர் பொறந்தது.. நாம பிரிஞ்சி சேர்ந்தது.. நிலா பொறந்தது எல்லாமே.. கனவு மாதிரி இருக்கு.. " என ரசித்து கூற

தேவ்வோ பொறுமையாக பெண் அவள் முகம் காட்டும் நவ ரசங்களையும் ரசித்து கொண்டே ' பேசி முடிச்சிட்டியா.. இல்ல வேற எதுவும் சொல்லனுமா ' என்றான் ஆழ்ந்த பார்வையோடு..

அவளோ ' ஏன் உண்மையா தானே சொன்னேன் நீ மட்டும் இல்லாம போய் இருந்த இன்னேரம் நான் இல்ல ' என முடிக்கும் மூன் அவளின் இதழை அவன் இதழ் கொண்டு அடைத்து இருந்தான் ருத்ரதேவன்...

அவனின் இந்த அதிரடி முத்தத்தில் விழிகளை அகல விரித்து பார்க்க... அவனோ மென்மையை விட்டு வன்மையாக அவளின் இதழை கொய்து கொண்டு இருந்தான்.. ஒரு கட்டத்தில் மூச்சு ஏங்கி அவன் மார்பில் கை வைத்து கிள்ள... அதில் அவளை விட்டு பிரிந்த தேவ் " ஒய் அம்மு எத்தன வாட்டி சொல்லி இருக்கேன் இந்த மாதிரி சொல்லாதன்னு கேக்குறிய பாரு இப்ப " என அவளின் இதழின் மேல் இருந்த ஒரு சொட்டு ரத்தத்தை துடைக்க..


அவனை மூச்சு வாங்க மொறைத்து பார்த்த ரதி ' என்ன சொல்லிட்டேன்னு இப்படி கடிச்சி வச்சி இருக்க... ' என்றாள் நுனி மூக்கு சிவக்க

அவனோ சிவந்த மூக்கின் மேல் முத்தம் வைத்து ' என் அழகி டி நீ... எப்பவும் தனிமை மட்டுமே துணையா இருந்த எனக்கு எல்லாமுமா கிடைச்ச தேவதை நீ... என் அம்மு பாப்பா.... இந்த தேவனோட ரதி தேவி டி நீ... ' என ஆழ்ந்த காதல் பார்வையோடு கூற

ரதியோ சிரித்து கொண்டே அவன் மீசையை அழகாக நீவி விட்டு " வயசானாலும் இந்த அழகும் ஸ்டைலும் உன்ன விட்டு போகவே இல்ல தேவ்... இன்னும் காலேஜ் பையன் மாதிரியே இருக்க... " என்றாள்

" அப்படியா... " என்ற தேவ்வின் கிறக்கமான கேள்வியில்..

' இந்த வயசுல கூட என்ன வேகம்... ப்பா! ' என்றாள் அவனால் காயம் பட்ட உதட்டை நாவால் வருடி கொண்டு

" மாமாவுக்கு உன் மேல அவ்வளவு காதல் டி... அது தான் இவ்வளவு எனர்ஜி கொடுக்குது " என மென்மையாக இதழ் ஒற்றினான்...

எதோ கிடைக்காத கனவு வாழ்க்கை கிடைத்த மகிழ்ச்சியில்.... சிறு வயது முதல் கிடைக்காத அன்பு.. பாசம்.. காதல்.. ஏக்கம்.. எல்லாம் அவன் அம்முவோடு சேர்ந்து தீர்த்து கொண்டு இருக்கிறான்..

வாழ்க்கையை எப்படி ரசித்து காதலோடு வாழ வேண்டும் என இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்...

மனைவியை நெஞ்சோடு அணைத்து கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தான் தேவ்...


' லவ் யூ அம்மு... '


' லவ் யூ டு தேவ் மாமா... ' என அவன் கழுத்தில் மாலையாக கைகளை கோர்த்து கொண்டாள் ரதி...

ஏக்கங்கள் தீர்ந்து ஆசை பட்டது எல்லாம் கிடைத்து விட்ட பரவச நிலையோடு...
இருவரும் அணைத்து கொண்டு வானில் தெரியும் நிலவை ரசித்து கொண்டு இருந்தனர்...

காலம் மாறினாலும் காதல் மாறாது... அது போல தான் காதலுக்கு அழிவே இல்லை... இருவரின் உடல் மறைந்தாலும் ஆன்மா கொண்ட காதல் கடைசி வரை தொடரும்....

சுபம்.....


இந்த கதை எழுத உக்கப்படுத்திய இந்து அக்கா அண்ட் வாசகர்கள் என அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்....

மீண்டும் புதிய கதையோடு சந்திக்கலாம்.... ❤️
 

Author: Nithya
Article Title: ரதி 🩵 எபிலாக்...
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top