Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
279
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 45

சென்னை டூ லடக் இடைவிடாது நடக்கும் 68 மணி நேரப் பயணம், ஓய்வு எடுத்து விட்டு செல்லவே நாட்கள் கூடும். சுண்டு விரல் கூட வெளி தெரியாத வகையில் தலையில் இருந்து கால் பாதம் வரை, உறுதியாக ஹெல்மெட், உடைக்கவசம் அணிந்துக் கொண்டு, நூற்றுக் கணக்கான ஆண்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்போட்ஸ் பைக்கிள், சீறிப் பாய்ந்துக் கொண்டிருந்தனர்.

மாலை கிளம்பியவர்கள் ஒருவரை முந்தி மற்றொருவர் முன்னேறி செல்வதிலேயே குறியாக இருக்க, கரடுமுரடு சாலைகளில் வண்டியை செலுத்துவதே மாபெரும் சவாலாக இருந்தது.

பலமணி நேரங்கள் இடைவிடாது பயணம் மேற்கொண்டு கும்மிடிப்பூண்டியை அடைய இரவாகிப் போனது. ரெய்டு தொடங்கியது முதலே தீபக்கின் கோரப் பார்வை ஆத்வி மீது தான் இருந்தது.

கேப் கிடைத்த நேரத்தில் எல்லாம் அவனை அடித்துத் தூக்க, கடும் முயற்சிகள் செய்துக் கொண்டே தீபக் வண்டியை செலுத்த, அவன் பேசிய பேச்சிக்கு தீபக் மீது கொலை வெறியில் இருக்கும் ஆத்வியோ, அவன் செய்த முயற்சிகளை எல்லாம் முறியடித்துக் கொண்டே, 'நேரம் வரும் போது காலி டா மவனே நீ' உள்ளே கொதித்தவனாக, லாவகமாக பைக்கை கையாண்டான்.

******

இங்கு கடுங்கோவத்தில் இருந்த ஆதி, தன் முன் நின்றிருந்த அசோக்கை முறைத்துக் கொண்டிருக்க,

"அங்கிள் அவன் தான் உங்களுக்கு தெரியாம ரகசியமா செய்ய சொன்னான்.. எனக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, ப்ளீஸ் அப்டி முறைக்காதீங்க அங்கிள் வயித்தக் கலக்குற ஃபீல் வருது.." அசோக் பாவமாக சொல்ல, டென்ஷன் ஆகிவிட்டான் ஆதி.

"டேய்.. அவன் சொன்னா உனக்கு எங்க போச்சி அறிவு.. ஆத்வி ரெயிடுக்கு போகக் கூடாது மீறி அவன் அதுக்கான முயற்சி எடுத்தா என்கிட்ட சொல்லணும்னு சொல்லி இருக்கேனா இல்லையா.. அதுவும் கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட ஆகல, என் கண்ணுல மண்ணை தூவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கான்..

அவன் கூட நீ ஒத்து ஊதி இருக்கே எவ்ளோ தைரியம்.." ஆத்திரம் தீராமல் பொங்கி எழ, பதில் சொல்லத் தெரியாத பச்சை பிள்ளையாக பயத்தில் கால்கள் கிடுகிடுங்கி, திருத்திருவென முழித்து நின்றான் அசோக்.

"பைக்க எங்க டா பதுக்கி வச்சிருந்தீங்க.."

"என் வீட்ல தான் அங்கிள்.." என்றவன் அவசரமாக வாயில் கை வைத்து ஆதியைக் கலவரமாக பார்க்க, வெறிகொண்டு முறைதான் அவனை.

"ஆத்தி படபடன்னு பயத்துல வாய விட்டு மாட்டிக்கிறியே டா அசோக்கு, இன்னைக்கு உன் நிலைமை ரொம்ப பரிதாபம் தான்.." மனதில் நினைத்துக் கொண்டு வெளியே பாவமாக முகத்தை வைத்திருக்க,

"பைக்க பக்காவா ரெடி பண்ணி எப்போ இங்க இறக்கின.." பல்லைக் கடித்தபடி அடுத்த கேள்வி வந்தது.

"சரியா மூணு அம்பதுக்கு ஆத்வி தான் பின் வாசல்ல நிறுத்தி மூடி வைக்க சொன்னான்.." என்கவும், அவனை முறைத்து தள்ளிய ஆதி,

"போய் தொல டா, இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்னாலும் தலைய தனியா கழட்டி எடுத்துடுவேன்.." எனும் போதே ஆதியின் கண்ணில் இருந்து, நொடியில் மறைந்து போனான் அசோக்.

ஆதிக்கு தான் கோவம் சிறிதும் தனியாமல் இருந்தது. ஆத்வி எது செய்தாலும் அது நிச்சயம் சரியாக தான் இருக்கும் என பெருமையாக மார் தட்டிக்கொள்ளும் தந்தையவனுக்கு, அவன் ரேஸில் கலந்து கொண்டால் மட்டும் அடக்க முடியாமல் கோவம் வருகிறது.
இத்தனைக்கும் இந்த ரேஸ் விடயம் ஆரு மித்ராக்கு எல்லாம் தெரியாமல் இருந்து வருகிறது இதுவரை. தெரிந்தால் மித்ரா நெஞ்சை பிடித்துக் கொள்வது உறுதி என்று தான்.

அது ஏனோ கார் பைக்குகள் உருவாக்குவது மற்றும் ரேஸில் கலந்து கொள்வது என்றால் ஆத்விக்கு அத்தனை உயிர். ஆனால் ஆதிக்கு அப்படி இல்லையே, பெற்ற மகன் என்று வரும் போது கடுமை கூட இளக தானே செய்யும்.

சிறு வயதில் இருந்தே சாதாரணமாக தான் அவன் கார் பைக் பொம்மைகளை வைத்து விளையாடி வருகிறான் என்று நினைத்திருக்க, ஆனால் ஆத்வி அதை வைத்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, வளர வளர இணையதளம் புத்தகம் என்று அனைத்திலும் தேடி தேடி சேகரித்து அதன் உதிரிபாகங்கள் என்ன? அவைகள் எப்படி இருக்கும்?

எப்படி எல்லாம் ஒரு வாகனத்தை உருவாக்கி உயிர் கொடுப்பது? என்ற தீவிரம் காட்டி பல வருடங்களாக அந்த ஆராய்ச்சில் இறங்கி, பள்ளி முடிக்கப் போகும் வேளையில் தந்தையிடம் இருசக்கர வாகனம் வேண்டும் என்று கேட்க, 'கல்லூரி செல் பிறகு வாங்கி தருகிறேன்' என்றான் அப்போதைக்கு.

ஆண் பிள்ளைகளுக்கு வாகனம் ஓட்ட கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்களிடம் இல்லை என்றாலும் எப்படியாவது வண்டி ஓட்ட கற்று வந்துவிடுவர். அதே தான் ஆத்வியும், கண்ணை மூடிக் கொண்டு தாருமாராக சாலையில் ஓட்டுவது கூட கை வந்த கலை அவனுக்கு.

கல்லூரி கடைசி வருடம், மீண்டும் தந்தையிடம் வண்டி வேண்டும் என்று நிற்க, பிள்ளைகள் வாய் திறந்து கேட்கும் முன் அனைத்தையும் கொண்டு வந்து அவர்கள் முன் நிறுத்தும் ஆதி, ஏனோ இந்த வாகன விடயம் மட்டும் அவன் மனதை நெருடி, திட்டவட்டமாக வாங்கித் தர முடியாது என மறுத்து விட்டான் ஆதி.

அதுவே அவனுக்கு தன்மானத்தை விழிக்க வைத்ததோ என்னவோ! அப்போது முதல் தந்தையிடம் பேசுவதை நிறுத்தி இருந்தான் ஆத்வி. மித்ரா பலமுறை கேட்டும் இருவரிடையும் பதிலில்லை.

இரவு பகல் தூங்காமல் கஷ்டப்பட்டு இருசக்கர வாகனம் ஒன்றை உருவாக்கி வெற்றி கண்டவன், தன் கண்டுபிடிப்பு சரியாக வேலை செய்கிறதா என்று சோதித்துப் பார்க்க, முதலில் மிதமான வேகத்தில் சாலையில் செலுத்திவன், பின் ஒவ்வொரு வேகமாக அதிகரித்து ஓட்ட நன்றாக வேலை செய்தது.

அந்த பூரிப்பில் காற்றில் சீறிப்பாய்ந்த துறைக்கு கண்மண் தெரியாமல் போனது. எதிரே வந்த நபரை இடித்து விடக் கூடாதென்று கார் வருவதை கவனிக்காமல் திருப்பயதில், பலத்த காயங்களோடு மருத்துவமனையில் படுத்திருந்தான் ஆத்வி.

மித்ராவின் கதறளை சொல்லவா வேண்டும்! ஆதியின் மனமோ உலைக்கனலாய் கொதித்துப் போனது. அப்படி இருந்தும் ரேஸ் விடயத்தில் மட்டும் இருவரும் விடாப்பிடியாய் இருந்தனர். தந்தை வேண்டாமென்றும், பிள்ளை வேண்டுமென்றும்.

யானைக்கும் அடி சருக்கும். அப்படி தான் ஆத்விக்கும் தோல்வியை கண்டு அஞ்சிடாதவன், மீண்டும் திடமாக எழுந்து வந்தான் முழு நம்பிக்கையும் தன்மேல் வைத்து. ஆதிக்கு போக்குக் காட்டி நிறைய ரேஸில் கலந்துக் கொண்டான். இப்போதும் அதே நம்பிக்கையோடு சீறிக் கொண்டு இருக்கிறான்.

"என்னங்க ஆத்வி எங்க ரொம்ப நேரமா ஆளையே காணல, இந்த நேரத்துல வெளிய எங்க போனான், கவி முகமும் சரியில்ல.. அந்த பொண்ண பிடிச்சி இருக்குனு ஒரு வார்த்தை கூட சொல்லாம திடீர்னு கல்யாணம் பண்ணிகிட்டான், அவளுக்கு எப்டி இருக்கும் பாவங்க அவ..

அவ கூட இருந்து அவன் மனசுல உள்ளத எடுத்து சொல்லி, புரிய வைக்காம எங்க போனான்.." அரை மணி நேரமாக இதே புலம்பல் தான்.

ஆதியோ வாயை திறவாமல் இருக்கவும் பெருமூச்சு விட்ட மித்ரா, "இப்டி எது கேட்டாலும் அமைதியா இருந்தா நான் என்னனு புரிஞ்சிக்கிறது.. சரி சாப்பிட வாங்க நான் போய் கவி ஸ்வாதிய கூட்டிட்டு வரேன்.." அலுப்பாக அவள் எழுந்து சென்றதும் கை முஷ்டியை இறுக்கிக் கொண்டவன்,

"எத்தனையோ பேர அசால்ட்டா டீல் பண்ற எனக்கு, உன்னையும் உங்க அம்மாவையும் மட்டும் சமாளிக்கவே முடியல டா. ரொம்ப படுத்துற ஆத்வி.. ஒவ்வொரு முறையும் நீ ரேஸ் ரேஸ்னு ஓடும் போது, இங்க எனக்கு நிம்மதி இல்லாம, என் மித்துபேபி கூட முகம் கொடுத்து பேச முடியாம, உயிர் போய் உயிர் வருது ரொம்ப கஷ்டமா இருக்கு டா..

நீ எது பண்ணாலும் சரியா இருக்கும், ஆனா இந்த ரேஸ் மட்டும் என்னால ஏத்துக்க முடியாத ஒன்னு ஆத்வி.. ஒரு முறை உன்ன ஹாஸ்பிடல்ல பாத்ததுக்கே என் ரத்தமெல்லாம் உறஞ்சி போச்சி, திரும்பவும் அப்டி ஒரு நிலைவந்தா சத்தியமா சொல்றேன், உன் அம்மா தாங்குவாளோ மாட்டாளோ என்னால தாங்க முடியாது கண்ணா.." மகனின் புகைப்படத்தை பார்த்து புலம்பியவன் கண்கள் கலங்கிப் போனது.

"என்னங்க இன்னும் உள்ள என்ன பண்றீங்க, சாப்பிட வாங்க.." மித்ராவின் குரலில், கையில் இருந்த மகனின் படத்தில் ஆசையாக முத்தம் வைத்து விட்டு வெளியே வந்தான்.

கவியின் முகம் மேலும் வாடி வதங்கி இருந்தது என்றால், ஸ்வாதியின் முகமோ தோழிக்கு திருமணமாகி விட்ட குஷியில் கவலைகளை மறந்து, முகம் மலர்ந்து இருந்தது.

"என்ன ஸ்வாதி இன்னைக்கெல்லாம் உன் முகம் பிரகாசமா இருக்கு.." ஆரு தான் புன்னகையாக கேட்டது.

"அது ஒன்னும் இல்ல மேடம், என்னோட இத்தன வருஷத்து கனவு நிறைவேறிடுச்சி.. என் கவிக்கு நான் நெனச்சது போலவே ஒரு நல்ல வாழ்க்கை குடும்பம்னு கிடைச்சிடுச்சி.. அந்த சந்தோஷம் தான், எத்தனை நாள் இவளை பத்தி கவலை பட்டிருப்பேன்..

என்னதான் பிரண்டா அவகூட நான் இருந்தாலும், அவளுக்கே அவளுக்குனு கிடைக்கிற உறவு தானே என்னைக்கும் நிலைச்சி இருக்கும்.." என்றவளுக்கு கண்கள் கலங்கிப் போனது, கவி பேசிய அன்றைய நாளின் தாக்கத்தில்.

அவள் உணர்வுகளை நன்றாக புரிந்துக் கொண்ட கவிக்கு, மனம் கனத்துப் போனது.

எந்த அளவுக்கு தான் பேசிய வார்த்தைகள் ஸ்வாதியின் மனதை காயப்படுத்தி இருக்கிறது என்று, இரண்டு வாரத்திற்கு முன்னால், தனிமையில் இருக்கும் போது வாய் விட்டு புலம்பி அழுததை, உணவு கொண்டு வந்த கவி தான் கேட்டு விட்டாளே.

தன்னை கண்டதும் கண்களை துடைத்துக் கொண்டு இயல்பாக நடந்துகொண்ட ஸ்வாதியை, வேதனையாக கண்ட கவி, பழைய விடயங்களை கிளறி மேலும் அவள் மனதை புண்ப்படுத்த எண்ணாமல் விட்டு விட்டாள்.

அவள் சொன்னதை கேட்ட ஆருவோ இருவரின் நட்பை கண்டு பூரித்துப் போனவள்,
"என்ன தான் கவிக்கு பல உறவுகள் இப்போ கிடைச்சி இருந்தாலும், உன் ஒருத்தி அவகூட இருக்க மாதிரி வருமா ஸ்வாதி.. உனக்கு அப்பா அம்மா இருந்து பாத்துக்க வேண்டிய வயசுல, நீ கவிக்கு அம்மாவா மாறி இத்தனை வருஷம் அவளை நல்லபடியா பாத்துட்டு வந்திருக்க..

ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காம ரொம்ப அன்பா பாசமா இருக்கீங்க, அவ சந்தோஷத்துல நீ உன் துக்கத்தை மறந்து சிரிக்கிற, உன் கஷ்டத்துல கவி உருகி தவிக்கிறா.. இதுதான் எதிர்பார்ப்புகள் இல்லாத தூய்மையான அன்பு..

உனக்கு இதயம் கிடைக்கலைன்னு சொன்னதும், என் இதயத்தை எடுத்து என் ஸ்வாதிக்கு வைங்கனு, தான் உயிர தியாகம் பண்ண வந்தாளாம் உன் பிரண்ட் தெரியுமா.." என்றதும் ஸ்வாதி அதிர்ச்சியும் கண்ணீருமாக கவியை பார்க்க, அவள் உணர்ச்சி வசப்படுவதை கண்ட கவி,

"ஸ்வாதி சீக்கிரம் சாப்டு, கொஞ்ச நேரம் நடந்த பிறகு, மருந்து சாப்ட்டு நேரத்துக்கு தூங்கணும், சாப்டு.." என லேசாக அதட்டல் போடவும், உள்ளம் பூரித்து உணவை உண்டாள்.

ஆரு சொன்னதை ஆமோதித்த மித்ரா, "உங்க ரெண்டு பேரையும் பாக்கும் போது எனக்கு என் ரெண்டு தங்கச்சிங்க நியாபகம் தான் அதிகம் வருது.. எப்ப ஒத்துமையா இருப்பாங்க எப்போ சண்டை போட்டு கத்தி அடிச்சிப்பாங்கனு சொல்லவே முடியாது..

எவ்ளோ சண்டை போட்டுக்கிட்டாலும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்துக்க மாட்டாங்க.. என் மாமனுங்க அண்ணன் தங்கச்சிங்கனு நாங்க எல்லாரும் ஒன்னு சேந்தா, எங்க வீட்டு ஆளுங்க காதுல பஞ்சி வச்சிட்டு தலைகாணிகுள்ள தலையை விட்டுப்பாங்க.. ஆனா இப்ப அவங்க யாருமே என் கூட இல்லையே.." பழைய நினைவில் மித்ரா கண் கலங்கி விட்டாள்.

"ஏன் ஆண்டி அவங்க எல்லாரும் உங்கள விட்டு பிரிஞ்சி போய்ட்டாங்களா.." என்றாள் ஸ்வாதி.

"ம்ம்.. ஆமா எப்பவும் பாக்க முடியாத தூரத்துக்கு போய்ட்டாங்க.. விரக்தியாக சொல்லவும் மித்ராவை கூர்ந்து பார்த்த ஆதியோ,
"சரியா சொன்னே மித்து உன்ன விட்டு போன உன் சொந்தம், நமக்குன்னு ஒரு சொந்ததை மட்டும் விட்டுட்டு போயிருச்சு போல.. அது எப்டி செத்து போய்ட்டான்னு நெனச்சிட்டு இருந்தவ சரியா உன்ன தேடி வந்திருக்கா.." என்றதும் ஆரு அஜய் மித்ரா ஸ்வாதி கவி என்று அனைவரும் அவனை புரியாமலும் அதிர்ச்சியோடும் பார்க்க,

"என்.என்ன சொல்றீங்க, எனக்கு ஒன்னும் புரியல.." என்றாள் மனம் துடிக்க.

"எப்பவும் சொல்லி அழுது கரைவியே, என் குடும்ப வம்சமே நெருப்புல கருகி அழிஞ்சி போச்சேன்னு, அந்த வம்சம் அழியலைன்னு சொல்றேன்.." பூடகம் பேசும் கணவனை இதயம் படபடக்க ஏறிட்ட மித்ரா,

"அ.அப்போ என் ம்.மனசுல நெனச்சி குழம்பி தவிச்ச விஷயம் உ.உண்மையா.. உங்களுக்கு ஏதோ பெருசா தெரிஞ்சிருக்கு, சொல்லுங்க ஏன் பேசாம இருக்கீங்க.." கணவனிடம் ஓடி அவன் கை பிடித்து கண்ணீரோடு உளுக்கி எடுக்க, மற்ற அனைவரும் அவர்களை புரியாமல் பார்த்தனர்.

நிதானமாக அவளை ஏற்றிட்டவன், "நீ என்ன நினைக்கிறியோ அதான் உண்மை.. உன் குடும்பத்தோட வம்சம் இதோ இருக்காளே.." என கவியை கைக்காட்ட, மொத்த பேருக்கும் அதிர்ச்சி என்றால், மித்ரா மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டே அழுதவளாக,

"அ.அ.ப்போ இ.இவ.." என வார்த்தை வராமல் கரம் நடுங்க, அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருக்கும் கவியை காட்டிட,

"உன் நொண்ணன் பெத்த பொண்ணு.." என்றான் முகத்தை அஷ்டகோணலாக்கி. ஆதிக்கு தான் அவள் அண்ணன் நிலனை பிடிக்காதே, ஆனால் கவியை பிடிக்கும்.

அவ்வளவு தான், உணர்ச்சிவசம் பொங்க மகிழ்ச்சியில் செய்வதறியாது கண்ணீரோடு ஓடி, கவியை அணைத்து கதறி விட்டாள் மித்ரா.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 45
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top