- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 17
அவசரமாக வந்த கவி, எதிரே வந்தவனை கவனிக்காமல் அவன் மேல் மோதி இருவருமாக பேலன்ஸ்யின்றி கீழே விழுந்து விட்டனர்.
கவியின் முகம் அவனது திண்ணிய நெஞ்சில் புதைந்து கிடக்க, அவள் அளவான கார்கூந்தலோ ஆடவன் முகத்தை மொத்தமாக மூடி, கூந்தலில் வீசும் பிரத்தியேக மனமே அவனுக்கு ஆக்ஸிஜனை வழங்கி, அடி ஆழம் வரை நிறைத்து விட்டது.
பஞ்சி பொதியாக அவன் மேல் பயத்தில் கண் மூடி படுத்திருக்க, ஆத்வியோ அவள் வாசனையை நன்கு உள்வாங்கிக் கொண்டவனாக, தன்னை மீறி விழப் போன அவசரத்தில் அவளை அணைத்துக் கொண்ட கைகளை மெது மெதுவாக அவள் மென்பஞ்சி முதுகை வருடியபடி எடுத்து, தன் முகத்தில் இருந்த கருங்கூந்தலை ஒதுக்கிவிட்டவனாக, அவளை நெஞ்சில் தாங்கியபடியே தலை தூக்கிப் பார்க்க, பெண் முகம் தெரியவில்லை.
இவை அனைத்துமே ஸ்லோமோவில் அறுபது நொடிக்குள் நடந்து முடிந்திருக்க, பின் என்ன நினைத்தானோ! இப்படி கண் தெரியாமல் மேலே வந்து மோதியவள் மீது கோவம் எழ, தன் மேலிருந்தவளை பட்டென தள்ளி விட்டு எழுந்து நின்ற ஆத்வி,
அவன் தள்ளி விட்ட வேகத்தில் வலியில் முனகியபடி கண் கண்ணாடியை சரி செய்தபடியே எழுந்து நின்றவளை கண்டதும் ஆத்திரம், அதிர்ச்சி, கோபம், வெறுப்பு என்று போட்டி போட்டு அவளை தீயாக முறைத்தவன் கண்கள், தீரா கோபத்தில் சிவப்பு மிளகாய் போல சிவந்து போனது.
கவியும் கண்ணாடி சரி செய்து கொண்டவளாக, தன் மேல் தவறுள்ளதை எண்ணி அவனிடம் மன்னிப்பு கேட்கலாம் என நிமிர்ந்து பார்த்தவளுக்கும் அதிர்ச்சி ஆத்வியைக் கண்டு.
அவன் பேருந்தில் செய்த காரியம் நினைவுக்கு வந்து அவனை கேவலமாக கண்டவளின் பிங்க் நிற இதழ்கள் "பொருக்கி" என தானாக முணுமுணுத்து, "ச்ச.. இவன் மேலயா போயும் போயும் விழுந்து வாரினோம்" என்று நினைக்கயில் அருவருப்பு தோன்றியது.
"ராஸ்கல் நீ இங்கேயும் வந்துட்டியா, உன்னையெல்லாம் யாரு உள்ள விட்டது,. முதல்ல இங்கிருந்து வெளிய போறியா, இல்ல இந்த வீட்டு ஆட்கள கூப்ட்டு உன்ன கழுத்த பிடிச்சி வெளிய தள்ள சொல்லவா" அவன் மீதுள்ள கோபத்தில் அதிகமாகவே வார்த்தையை விட்டாள், தான் இருப்பது அவன் வீடு என்று அறியாமலே.
புயலின் சீற்றம் எல்லையைக் கடந்தது அவள் பேச பேச, அவள் முகத்தை பார்க்க பார்க்க. கோவத்தில் மீசை துடிக்க அவளை கண்ட ஆத்வி,
"ஏய்ய், யார் நீ இங்க என்ன பண்ற" என்று கேட்டவன் குரலில் அத்தனைக் கடுமை. ஆனால் அது கவிக்கு கேட்கவில்லையே! கீழே விழுந்ததில் இயர் பாட்ஸ் செவியில் இல்லாமல் கழுத்தில் தொங்கியது.
அவன் முக இருக்கத்தை வைத்தே கோவமாக பேசுகிறான் என்று உணர்ந்த கவி, சட்டென காதில் இயர்பாட்ஸை மாட்டியவளாக, "ஏய்..என்ன சொன்ன திரும்ப சொல்லு" என்றாளே திமிராக, ஆத்விக்கு அவள் கழுத்தை முறித்து போடும் அளவுக்கு கோபம் பொங்கியது.
"இடியட். யார் டி நீ.. நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க" அவன் பல்லைக் கடித்துக் கொண்டு உரும,
"யோவ்.. நீ என்ன நான் கேட்டதையே திரும்ப கேக்குற, நீ யாரு என்ன கேக்க.. ஆமா என்ன சொன்ன டியா.. நீதான்டா டா.. என்கிட்ட பேசும் போது மரியாதையா பேசு இல்ல" என முள்ளங்கி விரலை நீட்டி அவள் கத்த, நீட்டிய விரல் உடைந்து போகும் வலி அவன் பிடித்து வளைத்ததில்.
"டேய்.. டேய்ய்.. என்ன டா பண்ற ராஸ்கல்.. என் கைய விடு டா பிக்காளி பயலே.." வலியில் மரியாதையின்றி திட்டி அவனிடம் சிக்கி இருந்த விரலை உருவ முயற்சிக்க, அவனுக்கோ மேலும் மேலும் அவள் தன்னை இழிவாக பேசுவதை கேட்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், ஷூ அணிந்திருந்த காலை தூக்கி செருப்பணியாமல் இருந்த அவள் பிஞ்சி காலில் வைத்து, அழுத்தி அரக்கி விட்டான்.
ஆத்வியின் அரக்கத்தனமான செயலில் வலியில் அலறித் துடித்து கண்ணில் நீர் கோர்க்க, அவனிடம் விடுபட போராடியவளை கண்டு உள்ளம் குளிர்ந்து போனான் ஆத்வி.
"கால எடுடா பன்னி, எரும மாடு" இன்னும் மரியாதை தேய, மேலும் அவள் காலில் அழுத்தம் கூடியது. வலி தாலாமல் கண்ணீரும் கோவமும் ஒரு சேர வந்தது.
"என்ன டி கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டு போற.. ஏற்கனவே நீ எனக்கு கொடுத்த அவமானத்தையே உனக்கு ரெண்டு மடங்கா திருப்பி தர காத்துட்டு இருக்கேன், திரும்ப வந்து மேலும் மேலும் என்ன சீண்டி விட்டதும் இல்லாம,
என் வீட்டுல நின்னு என்னையே மரியாதை இல்லாம பேசி, டா வேறயா போடுற, இப்ப பேசு டி.." என்றவனின் முகம் இறுகி பார்ப்பதற்கே பயத்தை உண்டு செய்தது அவளுக்கு.
இருந்தும் பயத்தை வெளிகாட்டாமல், தன்னை மீறி வரும் கண்ணீரை துடைத்துக்கொண்டு மூக்கு சிவக்க அவனை முறைத்த கவி,
"நீ பண்ண பொறுக்கித்தனத்துக்கு உனக்கு பாராட்டு பத்திரமா குடுக்க சொல்ற.. மரியாதையா சொல்றேன் இப்ப நீ என்கிட்ட நடந்துகிட்ட விதத்துக்கு ஒரு சாரி கேட்டு போயிட்டே இரு, அதவிட்டு என்கிட்ட வம்பு பண்ண நினச்ச அசிங்கப்பட்டு தான் போவ" என்றவள் அவன் என் வீடு என்றதை சரியாக கவனிக்கவில்லை போலும்.
கவி பேச பேச ஆத்விக்கு கோவம் தான் எல்லையைக் கடந்தது.
"ஏய்..என்ன டி சொன்ன, போயும் போயும் உன்கிட்ட நான் சாரி சொல்லனுனா" கர்ஜனை செய்தவன் அவள் கை பிடித்து மிருகம் போல் முறுக்க, கவி கத்திய கத்தில் மேலே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த மித்ராவும், மடிக்கணினியில் வேலையாக இருந்த ஆருவும் ஓடி வந்து பார்க்க, அங்கு கவி வலியில் அழுதுக் கொண்டிருந்தாள்.
"அச்சோ கவி.. என்னமா ஏன் இப்டி அழுதுட்டு இருக்க" என்றபடி மித்ரா அவளை நெருங்க,
ஆருவும் "என்னாச்சி கவி" என்று அவளிடம் வந்தாள்.
இருவரையும் கண்ணீர் கோடுகளோடு பார்த்தவளாக, "மேடம் அது இவன்" என அவள் நடந்ததை சொல்ல வாயெடுக்கும் போதே,
"டேய் ஆத்வி நீ எப்போ ஆபிஸ் விட்டு வந்த.. ஆமா கவி ஏன் இப்டி கத்தினானு உனக்கு ஏதாவது தெரியுமா" கை முஷ்டி இறுக கவி மேல் உள்ள கோபம் தீராமல் நின்றிருந்தவனை கண்டு ஆரு கேட்கவும், அவனை பற்றி சொல்ல வந்த கவி, ஆரு அவனிடம் உரிமையாக பேசுவதை கேட்டதும் குழப்பமாக வாய் மூடிக் கொண்டாள்.
ஆரு கேட்க்கும் கேள்விக்கு எதற்குக்கும் பதில் சொல்லாமல், தீ பார்வையை கவி மீது அழுத்தமாக வீசி விட்டு, விறுவிறுவென தன் அறைக்கு சென்று விட்டான்.
"ஆரு என்னாச்சி அவனுக்கு" மித்ரா குழப்பமாக கேட்க,
"தெரியல ம்மா.. அப்புறமா போய் அவனை பாப்போம் முதல்ல கவிக்கு என்னாச்சின்னு பாருங்க ம்மா.." என்றதும்,
"என்னாச்சி கவி ஏன் கத்தின, முகமும் பாக்க நல்லா அழுது சிவந்து போன மாறி இருக்கு" மித்ரா கனிவாக கேட்டாள்.
மித்ராவின் முகத்தை சற்று உற்று நோக்கிய கவிக்கு, தன்னிடம் மிருகம் போல் நடந்துக் கொண்ட ஆத்வியின் முகத்தை அப்படியே சாந்த்தமாக பார்த்தால் எப்படி இருக்குமோ, அப்படியே இருப்பதை போல் தோன்ற,
"ஒ.ஒன்னும் இல்ல மேடம், அவசரமா வரும்போது க்.கார்பெட் தடுக்கி கீழ விழுந்துட்டேன்.. அதான் வலில கத்திட்டிட்டேன்" என்று மித்ராவின் முகத்தை விட்டு பார்வையை எடுக்காமல், தடுமாற்றமாக சொன்னாள்.
"அட பாத்து வரக் கூடாதா கவி, பாரு கை நல்லா பிசரிடுச்சி போல, இப்டி வா தைலம் போட்டு விடுறேன்" என்ற மித்ரா அவளை சோபாவில் அமர வைக்க,
"இல்ல பரவால்ல மேடம், நான் பாத்துக்குறேன் ஹாஸ்டல் போய் மருந்து போட்டுப்பேன்" கவி என்ன சொல்லியும் கேளாமல், ஆரு வலி நிவாரனி எடுத்து வந்து தானே அவளுக்கு போட்டு விட, அசோகர்யமாக உணர்ந்தாள் கவி.
அதற்குள் ஆதி, அஜய் இருவருமே ஒன்றாக வந்தவர்கள், என்னவென விசாரிக்க மித்ரா நடந்ததை சொல்லவும்.
"ஏன் பாப்பா பாத்து வர கூடாதா, இப்ப பாரு நீதான் வலில கஷ்டப்படுற, சரி நீ கெளம்பு நானே உன்ன கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டு வரேன்" அக்கறையாக சொன்னான் அஜய்.
"இல்ல பரவால்ல சார் நானே போய்டுவேன், நீங்களே இப்ப தான் வீட்டுக்கு வந்துருக்கீங்க ரெஸ்ட் எடுங்க சார்" என்றாள் அவன் கனிவில் உருகி.
"நோ கவி, அஜய் சொல்றது தான் சரி.. நீ அவன் கூட கெளம்புஸ் ஆதி கராராக சொல்லவும் வேறு வழி இல்லாமல் அஜயோடு ஹாஸ்டல் சென்றாள்.
மொத்த குடும்பமும் அவள் மீது காட்டிய கரிசனத்தையெல்லாம், மெலிருந்து ஒருவன் கழுகு கண்களால் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
மேலும் ஆதி அவளை பார்க்கும் போது அவன் கண்களில், கனிவும் அன்பும் இருப்பதை கவனிக்கவும் தவரவில்லை ஆத்வியின் சிவந்த விழிகள்.
குளித்து முடித்த ஆத்வி, இரவு உணவிற்காக கீழே வர, ஆதிக்கு பரிமாறிக் கொண்டிருந்த மித்ரா,
"அந்த பொண்ணு கூட பேசும் போதும் பழகும் போதும், எனக்கென்னவோ என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க மாதிரி பீல் ஆகுதுங்க.. வேற ஒரு பொண்ணாவே அவளை நினைக்கத் தோணல ஏதோ பழக்கப்பட்ட ஒருத்தர்கிட்ட பழகுற மாதிரி தான் இருக்கு..
ஆமா உங்களுக்கு அந்த பொண்ண எப்டி தெரியும்" மனதில் உள்ளதை அப்படியே சொல்லி, கேள்வியாக நிறுத்தினாள்.
இருக்கையில் அமர்ந்தபடியே தாய் சொல்வதை எரிச்சலாக கேட்டுக் கொண்டவன் உணவை பிசைந்து வாயில் வைக்க,
"அந்த பொண்ண எனக்கு ஒரு மூணு மாசம் முன்னாடி தான் தெரியும் மித்து.. சரியா ஆத்விய அழைக்க ஏர்போர்ட் போனோமே அன்னைக்கு ரோட்ல அடிபட்டு அழுதுட்டு இருந்தா, நானும் அஜயும் ஹாஸ்பிடல் தூக்கிட்டு போனோம்" என்றதோடு முடித்துக் கொண்டவனுக்கே இன்னும் தெரியாத நிறைய குழப்பங்கள் இருந்தது.
தந்தை சொல்வதை கேட்டுக் கொண்ட ஆத்வி, "அன்னைக்கே அவளை எக்கேடாவது கெட்டு போகட்டும்னு விட்டு வந்திருந்துருக்கலாம்" என அலுத்துக் கொண்டு, "பிளெடி இடியட்.. திரும்ப திரும்ப என்கிட்ட மோதி சீண்டி விட்டல்ல டி, இனி தான் உனக்கு இருக்கு..
சரி போனா போகட்டும்னு நானா ஒதுங்கி போகலாம்னு நெனச்சாலும், திரும்ப என் கண்ணுல பட்டு நீயா வந்து என்கிட்ட மாட்டிகிட்டியே பேபி.. அதுவும் என் வீட்டுக்கே வில்லங்கத்த விலை கொடுத்து வாங்கி தேடி வந்துருக்க.. சும்மா விடுவேனா, உன்ன தேடி அலையிற என் வேலையும் ஈஸியாக்கி கொடுத்துட்ட" மர்மப் புன்னகை சிந்தியவன், உண்டு முடித்து தன் அறைக்கு சென்று விட்டான்.
******
"கவி உண்மைய சொல்லு, நிஜமாவே கீழ தான் விழுந்து வாரினியா" அவளின் கை கால்களை பதறிப் போய் ஆராய்ச்சி பார்வை வீசிய ஸ்வாதி, சந்தேகமாக பார்க்க,
"ஆ.ஆமா ஸ்வாதி, உண்மையா கீழ தான் விழுந்தேன்" முதல் முறையாக தோழியிடம் பொய் உரைத்தாள் கவி.
"ஆனா இந்த சிவந்து போன இடத்த பாத்தா கீழ விழுந்த மாதிரி இல்லையே கவி.. யாரோ வேணும்னு கைய பிடிச்சி அழுத்தின மாறியும், ஏதோ வெயிட்டான ஒன்னு உன் கால் மேல விழுந்த மாதிரி இருக்கு"
ஸ்வாதி சரியாக சொல்லயும் திருட்டு முழி முழுத்தவளுக்கு, எங்கே உண்மையை சொன்னால் தன்னை அவள் ஆத்வியின் வீட்டுக்கு வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டாளோ என்ற பயத்திலும், அங்குள்ள மனிதர்களை ஆழ்மனதுக்கு பிடித்துப் போனதாலும் மீண்டும் அழுத்தமாக பொய்யுரைத்த கவி,
மேலும் அவளிடம் பேச்சி நீண்டால் உண்மையை கண்டு பிடித்து விட்டாள் என்று போர்த்திக் கொண்டு படுத்தவளின் நினைவை முழுக்க, ஆத்வி தான் ஆட்க்கொண்டான்.
*******
"ஏன் யாதவ் அவனுக்கு பயந்துட்டு தினமும் லேட்டா வர, இது உன் வீடும் தானே கண்ணா" இரவு 10 மணிக்கு மேல் வீடு வந்த யாதவை வேதனையாக பார்த்த மித்ரா, கலைத்து போய் வந்த மகனின் கன்னம் வருடினாள் மென்மையாக.
"ஏன் ம்மா, உங்களுக்கு தான் அண்ணன பத்தி தெரியுமே அவனுக்கு பிடிக்காதத செஞ்சா நிச்சயம் அவன் இந்த வீட்ல இருக்க மாட்டான்.. ரெண்டு வருஷமா அவன் என்னால வீட்ல விட்டு வெளிய போனதே போதும்..
திரும்ப திரும்ப அவன் கண்ணுல நான் பட்டா, என்னால அவன் உங்ககூட எல்லாம் பேசாம போய்டுவான் ம்மா.." என்றவனுக்கும் ஏன் ஆத்வி தன்னை அடியோடு வெறுக்கிறான் என்ற காரணம் தெரியாது.
"இல்ல யாதவ் நீ என்ன காரணம் சொன்னாலும் என்னால இதை ஏத்துக்க முடியாது. ம் நீயும் என் பையன் தான் டா, எந்த விதத்துலயும் சுபி இல்லங்குற குறை உனக்கு வந்துடக் கூடாதுனு உனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து பாத்து செய்யணும்னு நினைக்கிறேன்..
ஆனா எதுவுமே உன் விஷயத்துல முழுமையா நடக்கலையேப்பா, நீ இப்டி ஆத்விக்காக வீட்டுக்கு வராம இருக்குறது எனக்கு எவ்ளோ வருத்தமா இருக்கு தெரியுமா டா..
ஆத்வி ஏன் இப்டி இருக்கானு ஒண்ணுமே புரியல, நீயும் அவனை கண்டா ஒதுங்கி போற.. ஒரு வீட்ல இருக்க அண்ணன் தம்பிங்க இப்டியா டா இருப்பாங்க, எலியும் பூனையுமா" கண் கலங்கினாள் மித்ரா.
"ம்மா.. இப்ப ஏன் எமோஷனல் ஆகுறீங்க, சீக்கிரம் அண்ண மாறுவாம்மா.. நீங்க வேணுனா பாருங்க, எம்மேல உள்ள கோவம் போய்ட்டா, நானா ஒதுங்கி போனாலும் அவனா என்ன துரத்தி வந்து பேசுவான்..
இப்ப எனக்கு பசிக்குது சாப்பாடு எடுத்து வைக்க போறீங்களா இல்ல இப்டியே பேசிட்டு இருக்க போறீங்களா" மித்ரா தோளில் இரு கரம் கோர்த்து செல்லம் கொஞ்சி சமாதானம் செய்தான் யாதவ்.
"அவன் என்னதான் உன்ன தூக்கி எறிஞ்சாலும் அண்ணன விட்டு கொடுக்க மாட்டியே.. சரி வா" என அவனை அழைத்து சென்று தானே உணவை ஊட்டி விட்ட மித்ரா, அவன் அறைக்கு அனுப்பி வைத்தாள்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 17
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.