Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
279
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 16

"குட் மார்னிங்.. குட் மார்னிங்.." என்று அனைவரும் சொல்லும் காலை வணக்கத்தை பணிவுடன் ஏற்றுக் கொண்டாலும், கம்பீரம் குறையாத நடையிட்டு தன் கேபின் வந்த யாதவ், அன்றைய வேலைகளை கவனித்தபடி, பெண்டிங்கில் இருக்கும் வேலைகளையும் வெகு சிறத்தையாக செய்துக் கொண்டிருந்தான்.

கேபின் கதவை தட்டிக் கொண்டு வந்த அவன் பிஏ. "சார் நாளைக்கு மறுநாள் ஒரு முக்கியமான கவர்மெண்ட் டீல் ஒன்னு நம்ம கைக்கு வருது, நீங்க இருப்பீங்க தானே" என்றான் சந்தேகமாக.

வேலையில் முழு கவனத்தையும் வைத்திருந்தாலும், அவன் பேசுவதை கூர்மையாக உள்வாங்கிய யாதவ், "நோ வெங்கட், நாளைக்கு நைட் கிளம்பப் போற பிளைட்க்கு நான் போயாகணும், திரும்ப வர டூ ஆர் த்ரீ மந்த்ஸ் ஆகலாம்.. சோ எல்லா டீல் அண்ட் பிராஜெக்ட்ஸும் பெரியப்பா பாத்துப்பார்"

தகவலாக சொன்னவன், நாளை இரவு ஏர்போர்ட் கிளம்பும் முன், மீதமுள்ள வேலையெல்லாம் கையோடு முடித்துவிட்டு, ஆதிக்கு சிரமத்தை கொடுக்காமல் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தான்.

"ஆனா ஆதி சார் போன முறை வந்த போது, இந்த டீலை உங்கள தான் முடிக்க சொன்னார் சார்" என்றதும் நெற்றி சுருக்கி சற்று யோசனையில் மூழ்கிய யாதவ், யாருக்கோ அழைப்பு விடுத்து இரண்டு நிமிடம் வரை பேசியவன்,

"வெங்கட் என் இடத்துல இருந்து முக்கியமான ஓருத்தர் இந்த டீலை பத்துப்பாங்க, நீங்க போலாம்" என்றதும், அந்த முக்கியமான நபர் யாரென்று, அவன் போனில் பேசுவதை வைத்தே புரிந்துகொண்டவனாக, அங்கிருந்து சென்று விட்டான்.

அவர் சென்றதும் களைப்பாக இருக்கையில் சாய்ந்தவனுக்கு, சூடாக எதாவது அருந்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே, "சரி கேன்டீன் சென்று காபி குடித்து வந்து வேலையைப் பார்ப்போம்" என்றெண்ணி அறையில் இருந்து வெளியேறிய யாதவ், லிப்ட் மூலம் செல்லாமல், பெறாக்கு பார்த்தபடி படியில் இறங்கியவன் மீது பலமாக மோதி இருந்தாள் பெண்ணொருத்தி.

மோதிய வேகத்தில் அப்பெண் விழப்போக, சட்டென அவள் மெல்லிடை பிடித்து தாங்கி நிறுத்தியது ஆடவனின் வன்கரம்.

பயத்தில் மூச்சி வாங்க அவன் தோளைப் பற்றி இருந்தவளுக்கு, யாதவை கண்டதும் உள்ளுக்குள் பயப்பந்து உருல கண்களை உருட்டியவளை கண்கள் இடுங்கப் பார்த்தவனாக,

"ஸ்டுபிட் இதுதான் வேலைக்கு வர நேரமா உனக்கு.." தன் கை கடிகாரத்தை திருப்பிப் பார்த்து யாதவ் கத்த,

"போச்சிடா இன்னைக்கும் கரெக்ட்டா இவன் கண்ணுலே லேட்டா வந்து மாட்டிக்கிட்டோமே.." தன்னையே நொந்து போன ஸ்வாதி,

"ஸ்.சாரி சார் பஸ் வர நேரமாகிடுச்சி அதான் லேட் நாளைல இருந்து சீக்கிரம் வந்திடுவேன் சார்" தினமும் சொல்லும் அதே காரணம் தான், ஆனால் இன்று சற்று வித்யாசமாக சொன்னாள், பதட்டத்தில் அவன் கை வளைவில் இருந்து விலகாமல்.

அதை அவனும் தாமதமாகவே உணர்ந்து கொண்டவனாக, குனிந்து அவளை உற்று நோக்கி, "ஏன் மேடம், அதை தள்ளி நின்னு பேச மாட்டிங்களோ.. இப்டி ஒட்டி நின்னு தான் சொல்லுவீங்களா" நக்கல் கேள்வியில் பதறியடித்து அவனிடமிருந்து விலகி நின்ற ஸ்வாதி,

"ஸ்.சாரி ஸ்.சார் எங்கே கீழ விழுந்திடுவேனோன்ற பயத்துல, நான் கவனிக்கல" என்றாள் தலை தாழ்த்தி தடுமாற்றமாக.

"ஆமா இப்ப கவனிச்சி மட்டும் என்ன பிரயோஜனம்" மனதில் நினைத்தபடி நின்றவனின் மேனியெங்கும் அவள் வாசம் வீச, அவள் இடைபிடித்த மென்மை ஆணவனின் உள்ளங்கையில் அழுத்தமாக பதிந்து போனது.

"சார்.. சார்.." இரண்டு முறை அவள் அழைத்த பின்னே நினைவை விட்டு மீண்டவன்,
"என்ன" என்றான் மென்மையை உணர விடாமல் தடுத்த கடுப்பில்.

"சார் நான் போகட்டுமா" தயக்கமாக ஸ்வாதி கேட்க,

"நாளைல இருந்து லேட்டா வர்றத மட்டும் பாத்தேன் அப்புறம் சீட்ட கிழிச்சி அனுப்பிடுவேன் சொல்லிட்டேன்.. வேலை டைம்ல எனக்கு பர்ஃபெக்ஷன் ரொம்ப முக்கியம்" காட்டமாக சொன்னவன், "போங்க போய் இருக்க டயத்தை வீணாக்காம கவனமா வேலையப் பாருங்க" எரிந்து விழுந்த யாதவ் அங்கிருந்து சென்றான்.

போகும் அவனையே சில நொடிகள் பார்த்தவளுக்கு, தலையினை உளுக்கிக் கொண்டாள்.
இங்கு வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து இதே சுப்பிரபாதம் தான் அவனிடம் இருந்து கிடைத்துக் கொண்டு இருக்கிறது. முதல் நாள் சோகத்தில் மூழ்கி கவலைப் பட்டதை போல் இல்லாமல், இப்போதெல்லாம் அவன் திட்டுவது கூட நன்கு பழகி விட்டு இருந்தது.

"அப்பாடா போய்ட்டான் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் இப்ப தான் நிம்மதியாக இருக்கு" மனதை நீவி விட்டபடி, தனக்காக கொடுத்த சிஸ்டத்தில் அமர்ந்து வேலைப் பார்க்க தொடங்கி விட்டாள்.

≈≈ ≈≈ ≈≈

ஆதியின் வீட்டு வராண்டாவே நூற்றுக்கும் மேற்பட்டோர் தாராளமாக அமர்ந்து உண்ணும் அளவிற்கு பெரிதாக அமைந்திருக்க, அந்த வீட்டு காலிங் பெல்லை அழுத்தி விட்டு கையை பிசைந்துக் கொண்டு படபடப்பாக நின்றிருந்தாள் கவி.

எட்டு அடிக்கு மேல் உயர்ந்து நின்ற பெரிய மரக்கதவு திறக்கப்படவே, "கடவுளே கண்டிப்பா எனக்கு இந்த முறை வேலை கிடைச்சிடணும்.. அப்பதான் என் ஸ்வாதிக்கு நிம்மதியா இருக்கும்" கண் மூடி நினைக்கும் போதே,

"யார் நீங்க?" பெண் குரல் தான் கம்பீரமாக வந்தது.

"மேடம், கேர் டேக்கர் வேலைக்கு விளம்பரம் கொடுத்து இருந்தீங்களே, அதுக்கு தான் இன்டெர்வியூ வந்திருக்கேன்" தன் எதிரே நிற்கும் ஆருவின் அழகை ப்ரம்மிப்பாக பார்த்தபடி தடுமாற்றமாக சொல்லி முடித்தாள் கவி.

"ஓஹ்.. எஸ்.. எஸ்.. உங்க நேம் என்ன.."

"பார்கவி" என்றாள் மெல்லிய குரலில்.

"ஓகே பார்கவி உள்ள வாங்க, என் டாடி உங்களுக்கான வேலை என்னனு சொல்லுவாங்க" என்ற ஆரு முன்னே செல்ல, படபடப்பு குறையாமல் அவள் பின் தொடர்ந்தாள் இவளும்.

பெரிய வீட்டை அதிசயமாக பார்த்து நின்றவளை ஆரு அமர சொல்லவும்,
"ஹான் சரி மேடம்" என தாராளமான சோஃபாவின் முனையில் அமர்ந்துக் கொள்ள, அடுத்த நிமிடம் பணியால் அவளுக்கு குளிர்பானம் கொடுக்கவும் தயக்கமாகவே எடுத்துக் கொண்டாள்.

"கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க பார்கவி டாடி வந்துடுவாங்க" ஆரு சொல்லும் போதே, கம்பீரமான நடைபோட்டு படிகளில் இறங்கி வந்த ஆதி, கவி அமர்ந்திருப்பதை யோசனையாக கண்டு குஷனில் அமர, அவன் பின்னே மித்ராவும் தன்யாவை தூக்கிக் கொண்டு வந்தாள்.

முதலில் ஆதியை பார்த்த கவிக்கு ஒருவித பரவசம் ஒட்டிக் கொள்ள, "அங்கிள் நீங்களா" உற்சாகம் கொண்டு சத்தமாக கேட்டதும், "ஆம் நான்தான்" எனும் விதமாக அவன் தலையாட்டி,

"நீ இங்க என்ன பண்ற" என்றான் சற்று சாந்தமான குரலில்.

"நான் இங்க கேர் டேக்கர் வேலைக்காக இன்டெர்வியூ வந்திருக்கேன் அங்கிள், ஆனா உங்கள நான் இங்க எதிர்பார்க்கவே இல்ல, உங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷ்மா இருக்கு அங்கிள்..

அன்னைக்கு நீங்க செஞ்ச ஹெல்புக்கு உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலையேனு கவலையா இருந்துச்சி, இப்ப உங்கள பாத்ததும் தான் மனசுக்கு லேசா இருக்கு அங்கிள்" உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டே போக, பாவம் அங்கு இருந்த பெண்கள் இருவருக்கும் சிறிது நேரத்தில், தொண்டை தண்ணீர் வற்றிப் போனது தான் மிச்சமாகிப் போனது.

ஆதியை பார்த்ததும் உற்சாகத்தில் எழுந்து நின்றவளின் ஹியரிங் பட்ஸ், காதில் இருந்து நழுவி விழுந்து விட்டது. அதை கவனிக்காமல் கவியும் பேசிக் கொண்டே போக,
"அட கொஞ்சம் பொறுமா, யார் நீ எப்ப இவரை பாத்த.." என்று மித்ராவும்,

"ஹெலோ பார்கவி போதும் கொஞ்சம் மூச்சி விடுங்க" என்று ஆருவும் கத்திக் கொண்டு இருக்க, ஆதியோ அவளின் அருமை பெருமை தெரிந்தவனாக, அவள் பேசி முடிக்கட்டும் என்று பொறுமை காத்து அமர்ந்திருந்தான்.

"ரொம்ப நன்றி அங்கிள் நீங்க செஞ்ச உதவிய நான் காலத்துக்கும் மறக்க மாட்டேன்.. ஹெலோ அங்கிள் என்ன நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன், நீங்க எதுவும் பேசாம அமைதியாவே இருக்கீங்க..

ஒருவேளை நான் உங்க வீட்டுக்கு வந்தது உங்களுக்கு பிடிக்கலையா.." அவன் முகத்துக்கு நேராக கையாட்டி அவள் பாவமாக மொழிய,
"இவள் என்ன லூசா" என்பது போல் தான் பார்த்து வைத்தனர் மித்ரா ஆரு இருவரும்.

அதை விட ஆதி இத்தனை பொறுமையாக கோவம் கொள்ளாமல் அமைதியாக கவி கத்துவதை கேட்டுக் கொண்டு இருப்பது தான், ஆச்சிரியத்திலும் அதிசயமாக இருந்தது.

"என்னங்க உங்களுக்கு இந்த பொண்ண முன்னாடியே தெரியுமா.. நாங்க பாட்டுக்கு காட்டு கத்து கத்திட்டு இருக்கோம், அதையெல்லாம் காதுல வாங்காம, நீங்க பேசலைனு கவலைபட்டு ஏதேதோ பேசுறா" நடப்பது எதுவும் புரியாமல் கணவனிடம் வினவ, ஆருவும் தந்தையின் பதிலுக்காக ஆதியை தான் பார்த்திருந்தாள்.

"இரு சொல்றேன் மித்து" என்றவனாக, கவிக்கு நேராக தன் கையை ஆட்டி, அவள் கழுத்தில் தொங்கிய பட்ஸை காட்டி அதனை காதில் மாட்ட சொல்லி சைகையாலே பொறுமையாக புரியும்படி செய்து காட்ட,

ஆதியின் கையசைவை உன்னிப்பாக கவனித்த கவி, தன் கழுத்தை சுட்டிக்காட்டி சொல்லவும் தான் குனிந்து பார்த்து காதில் ஹெயரிங் பட்ஸ் இல்லை என்பதை உணர்ந்தவளாக, "அச்சோ இது எப்ப காதுல இருந்து விழுந்துச்சி" அவசரமாக எடுத்து காதில் பொருத்திக் கொண்டவள். ஈ.ஈ..என பல்லை காட்டி "சாரி அங்கிள் பட்ஸ் காதுல இல்லாதத நான் கவனிக்காம விட்டேன்" என்றாள் சமாளிப்பாக.

கவியின் செய்கையை கண்டு ஓரளவுக்கு அவளின் நிலை புரிந்த இரு பெண்களும் மேலும் ஆதியின் செயலை ஆச்சிரியமாக பார்க்க,

"நீ இங்க கேர் டேக்கர் வேலைக்கு வந்துருக்கியா கவி" என்றான் அவள் பெயரை சுருக்கி மென்மையாக.

எத்தனை ஆச்சிரியம் மித்ராவால் தாங்க முடியும்! தன் கணவனா தன்னையும் தன் பிள்ளைகளையும் தவிர்த்து மற்ற மனிதர்களிடம் பாசமாக பேசுகிறான் என்ற எண்ணமே மித்ராவின் மண்டையை குடைய, கவியின் முழு உருவத்தையும் அப்போதைக்கு அவள் சரியாக கவனிக்க தவறி இருந்தாள்.

"எஸ் அங்கிள், நிறைய ஹாஸ்பிடல்ல வேலை தேடி ஏறி இறங்கிட்டேன், ஆனா உனக்கு காது கேக்காது அதனால பேஷண்ட்டோட அவசரத் தேவைக்கு கூப்ட்டா உன் காதுல விழாது, அப்டி இப்டினு நிறைய காரணம் சொல்லி போக சொல்லிடுவாங்க..

நீங்களும் என்ன அனுப்பிடுவீங்களா அங்கிள்" எங்கே ஆதியும் தன் குறையை காரணமாக வைத்து வெளியே அனுப்பி விடுவானோ என்ற வருத்தத்தில் அவள் முகம் சோகத்தில் மூழ்கியது.

"நோ கவி, உன்ன இனி அனுப்புறதா எனக்கு ஐடியா இல்ல, அவ்ளோ ஏன் இனி நீயே நெனச்சாலும் அது முடியாத ஒன்னு" என்றவனின் அழுத்தமான உள்ளர்த்தமான பேச்சி யாருக்கு புரியாமல் போனால் என்ன, மித்ராக்கு புரியாமல் போகுமா!

கவியை இங்கு இருக்க சொல்கிறான் என்றால் நிச்சயம் அவன் மனதுக்கு அவளை பிடித்திருக்க வேண்டும், தவறாக அல்ல ஏதோ ஒரு வித உணர்வாக. ஆனால் என்ன காரணமாக இருக்கும் என்ற யோசனையில் ஆதியை மட்டும் கூர்ந்து கவனித்தவள், கவியை பார்க்கவில்லை.

"சோ, உன் வேலை என்னவோ அதை இப்பவே நீ ஸ்டார்ட் செய்ய தொடங்கு.. இவ என் வைப்" மித்ராவின் தோளில் கை போட்டு சொன்னவணக்கவ், "அன்ட் இது என் டாட்டர்" என்று ஆருவை பெருமையாக காட்டிய ஆதி, "உனக்கு என்ன வேணுமோ இவங்க கிட்ட கேளு செஞ்சிக் கொடுப்பாங்க, இங்கேயே தங்கி வேலை செய்தாலும் ஓகே, இல்ல ஹாஸ்டல் போய்ட்டு மார்னிங் டூ நைட் இங்க வந்தாலும் ஓகே தான்.."

எத்தனை மென்மை இந்த பெண்ணிடம் மட்டும். இது போல தன்னிடம் தன் கணவன் நடந்துக் கொண்டிருக்கிறானா என்று கேட்டால், முரட்டு அன்பை மட்டும் தானே தன் மீது வாரி இறைத்து இருக்கிறான். அதுவும் கவியின் பயம் இல்லாத உரிமையாக பேச்சும், ஆதியின் கண்ணில் தெரியும் கருணையும் கண்டு, மித்ராக்கு ஏதோ ஒன்று உள்ளது என்று மட்டும் தெளிவாக உணர்த்தியது.

ஆதி சொன்னதை கேட்டதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த கவி, "ஐயோ.. என்னால நம்பவே முடியல அங்கிள்.. ஐ யம் ஃபீல் வெறி ஹாப்பி" என்றபடி ஆதியின் கை பிடித்து குதிக்க,

"தட்ஸ் ஓகே கவி, எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சி, டேக் கேர்" அவள் கன்னம் தட்டி மென்மையாக சொல்லி சென்ற ஆதியை வாயில் கை வைத்து நெஞ்சி வலி வராத குறையாக பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

ஆரு ஆத்விக்கு தெரியாத ஆதியின் பல கேடி முகங்களை மித்ரா ஒருத்தி மட்டும் தானே அவன் அருகில் இருந்து பார்த்திருக்கிறாள், அதனால் கொள்ளும் ஆச்சிரியங்கள் தான் பலவாராக அவளை குழப்ப நிலைக்கு கொண்டு சென்றது.

"மேடம், எனக்கு நான் யாரை பாத்துக்கணும்னு கொஞ்சம் காட்ட முடியுமா" ஆருவிடம் பவ்வியமாக கேட்டதும், அவளை பொய் கோபம் கொண்டு முறைந்தவள்,

"ஓஹ். என் அப்பா கிளம்பினதும் தான் உங்களுக்கு எங்கள எல்லாம் கண்ணுக்கு தெரியிதோ" இடுப்பில் கை வைத்து விரைப்பு முகம் காட்ட,

"ஐயோ மேடம் அப்டிலாம் இல்ல, அங்கிள எனக்கு ஏற்கனவே தெரியும், அதனால தான் அவரை பாத்ததும் எனக்கு எக்சைட்மென்ட்ல என்ன பண்றதுனு புரியல, சாரி மேடம்" என்றாள் உள்ளடங்கிய குரலில்.

"ஐயோ.. என்னமா இதுக்கெல்லாம் போய் சாரி கேட்டுட்டு இருக்க, அவ சும்மா உன்ன கிண்டல் செய்றா தப்பா எடுத்துக்காத.. பாக்கவே லஷ்மிகாலட்சியமா அழகா இருக்க, உனக்கு போய் இப்படியா ஆகணும்" அவள் நிலையை எண்ணி வருந்திய மித்ரா,

"சரி சரி.. நீ வா நான் உனக்கு என் மாமாவ காட்டுறேன்.." என்ற மித்ரா அவள் கை பிடித்து விக்ரம் அறைக்கு அழைத்து செல்லுகையில், ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வை இருவருமே அத்தருணம் உணர தான் செய்தனர்.

காரணம் அறியாமல் மித்ராவின் இதயம் படபடப்பாக அடித்துக் கொண்டு, கவியின் கையை கெட்டியாக பிடித்துக் கொள்ள, கவியும் தான் என்னவென சொல்ல முடியா உணர்வில் மித்ராவின் அருகில் நெருக்கமாக ஒட்டி இருந்தாள்.

"இவரை தான்மா நீ கவனமா பாத்துக்கணும்" படுக்கையில் அசைவில்லாமல் இருந்த விக்கரமை வருத்தமாக காட்ட,

"ஓகே மேடம்" என்ற கவி, மெத்தையில் படுத்திருக்கும் விக்ரமின் கைகளை தன்னையும் அறியாது, இறுக்கமாக தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டாள்.

"என்ன எனக்கு ஒரு மாதிரி படபடப்பாவே இருக்கு, நார்மலா எனக்கு இப்டியெல்லாம் இருந்ததில்லையே.. ஒரு வேலை புது வேலை புது மனிதர்களை பாத்து இப்படி எல்லாம் எனக்குள்ள ஆகுதோ..

ஆமா அப்டியா தான் இருக்கும், அப்டி ஒன்னும் இங்க இருக்கவங்க எல்லாம் மோசமானவங்களா தெரியல, அதுவும் அங்கிள் இருக்கும் போது நமக்கென்ன கவலை.. அவர் என்மேல வச்ச நம்பிக்கைய காப்பாத்தவாது நம்ம வேலைய நம்ம சரியா செஞ்சாகனும்" இப்படியாக அவள் நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்கயில்,

"உன் முழு பேரு என்னமா" என்ற மித்ரா குலரில் தெளிந்து,

"பார்கவி மேடம்! என்றாள் புன்னகை முகமாக.

"சரி கவி நீ வேலையப் பாரு, கூட ஆருவும் உனக்கு ஹெல்புக்கு இருப்பா நான் போய் மதிய சமையல ரெடி பண்றேன்" என்றவளுக்கு கவியோடு நாள் முழுக்க உக்காந்து பேச ஆசை இருந்தாலும், கணவன் மற்றும் மகன்களுக்கு மதிய உணவை தயார் செய்து கொடுக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் அங்கிருந்து சென்றாள்.

அன்றைய நாளில் ஆருவும் கவியும் பேசிப் பழகி நல்ல நண்பர்கள் போல் ஆகி விட்டிருந்தனர்.

இரவு 8.00 மணி அளவில் வேலைக்கு சென்ற ஆண்கள் எல்லாம் ஒவ்வொருவராக வரத் தொடங்கி இருக்க,

நேரம் ஆனதால் மித்ரா ஆருவிடம் சொல்லி விட்டு, அவசர அவசரமாக தன் பேகில் பஸுக்கு கொடுக்க சில்லறையை தேடியபடி வந்த கவி, இரும்புடல் கொண்டவன் மீது மோதியதில், காந்தம் போல் அவன் உடலில் ஒட்டிக் கொண்டு இருவருமாக ஒருசேர தரையில் விழந்திருக்க, நல்ல வேலையாக தரை முழுக்க மெத்து மெத்து கார்ப்பெட் போட்டிருந்ததால் யாருக்கும் சேதாரம் இல்லாமல் போனது.

யார் அந்த அவன்?
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 16
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top