- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 12
"ஆத்வி, யாதவ் சாப்பிடாம கொள்ளாம எங்க போனான்" என்ற மித்ரா மகனை சந்தேகமாக பார்த்தாள்.
"அவன் எங்கே போனான்னு என்ன கேட்டா எனக்கு எப்டி மாம் தெரியும்.. அவன் என்ன என்கிட்ட சொல்லிட்டா போனான்" அலட்சியமாக பதில் சொன்னவனை முறைத்த மித்ரா,
"டேய் உன்ன பத்தி எனக்கு தெரியாதா, வேலை மெனக்கிட்டு அவன் உன் பங்க்ஷன்க்கு தானே ஆத்வி வந்தான்.."
"அவனை நான் ஒன்னும் வெத்தலை பாக்கு வச்சி என் கம்பனி திறப்பு விழாக்கு வந்து தான் ஆகணும்னு கட்டாயப் படுத்தி அழைக்கல மாம்.. டாட் கூப்ட்டு இருப்பாரு வந்தான், அவனா போய்ட்டான்" என்று தோளை குலுக்கியவனை கவலையாக பார்த்த மித்ரா,
"வந்தவனை ஒரு வார்த்தை வா'ன்னு கூட சொல்லாத அளவுக்கு அப்டி என்ன டா அவன் மேல வெறுப்பு, இத்தனைக்கும் அவன் உன் தம்பி டா.. அவனுக்கு நம்மள விட்டா வேற யார் இருக்கா ஆத்வி" என்றாள் வருத்தமாக.
"ஏன்னா அவனை எனக்கு பிடிக்கல மாம், சும்மா சும்மா அவனை என் தம்பி தும்பின்னு சொல்லாதீங்க வெறுப்பா இருக்கு.. அதோட நீங்களும் டாடியும் அவனை கொஞ்சி உறவு கொண்டாடுறது சுத்தமா பிடிக்கல போதுமா..
இதுக்கு மேல எனக்கு பிடிக்காத ஒன்ன என் முன்னாடி பேசவும் செய்யாதீங்க, செயல்லயும் செய்யாதீங்க" கோவமாக கத்தி விட்டு கார் கீ எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டான்.
போகும் அவனையே கண் கலங்கி பார்த்த மித்ராவின் தோளில் கை போட்ட ஆதியை நிமிர்ந்து பார்த்த மித்ரா,
"ஏங்க யதாவை இவன் இந்த அளவுக்கு வெறுக்குறான்.. யாதவ் பாவம் இல்லையா.. என் தங்கச்சி சுபி இல்லாத குறைய இன்னொரு அம்மாவா இருந்து நான் தானே அவனை பார்த்தாகனும், அதை ஏங்க அவன் புரிஞ்சிக்காம பேசிட்டு போறான்" கேவலோடு குறைப்பட்ட மனைவியை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட ஆதி,
"நீ யாரக் கொஞ்சிறதா இருந்தாலும் தனித்தனியா கூட்டிட்டு போய் கொஞ்சிக்கோ மித்துபேபி, முக்கியமா என் கண்ணு முன்னாடி அவனுங்க ரெண்டு பேரையுமே நீ கொஞ்சக் கூடாது புரிஞ்சிதா" கராராக சொன்ன ஆதியை வெடுக்கென நிமிர்ந்து பார்த்த மித்ரா
"உங்களுக்கு ஆத்வியே எவ்வளவோ பரவால்லைங்க.. இதுக்கு ஏன் ஆதரவா என் தோளை தொடணும், அப்பனுக்கும் பிள்ளைக்கும் இந்த வரட்டுப் பிடிவாதத்துல ஒன்னும் குறைச்சல் இல்ல" மனதில் தான் நினைத்துக் கொண்டு சிலுப்பிக் கொள்ள முடிந்தது.
ஆனால் அவளின் பார்வையின் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று நன்றாக அறிந்த ஆதி,
"அவன் என்புள்ள டி என்ன மாதிரி தான் இருப்பான்" என நக்கலாக சொன்னவன்,
"எனக்கு மட்டும் தான் நீ பர்ஸ்ட் பிரிஃபரென்ஸ் குடுக்கணும் பேபி, அப்புறம் தான் அந்த ராஸ்கல்ஸ்" முறைப்பாக சொன்ன கணவனின் தாடியை பிடித்து அவள் முகத்துக்கு நேராக இழுக்க,
"ஏய்.. என்ன டி பண்ற வலிக்குது" என்று அவன் கத்தவும்,
"நல்லா வலிக்கட்டும்.. எப்டி எப்டி உங்களுக்கு தான் பர்ஸ்ட் பிரிஃபரென்ஸ் குடுக்கணுமா.. ஆனா சார் மட்டும் திருட்டு தனமா பிள்ளைகளை கொஞ்சலாம் ரசிக்கலாம் அப்டி தானே.. நீங்க பண்ற கேடி வேலையெல்லம் எனக்கு தெரியாதுனு நெனச்சீங்களா"
கண்களை உருட்டி செல்லமாக மிரட்டும் மனைவியை கள்ளமாக ரசித்தவன், தனக்கு வலிக்காமல் மெல்லமாக தாடியை பிடித்து ஆட்டும் மனைவியின் கைகளை எடுத்து விரலுக்கு முத்தம் வைக்க, எப்போதும் போல் அவன் கையில் பாகாய் கரைந்தவளை கண்களாலே அள்ளிப் பருகிய ஆதி,
"அது என்ன டி பேசிட்டு இருக்கும் போது தாடிய பிடிச்சி இழுக்குறது" குரலில் இருந்த கோபம் அவன் பார்வையில் இல்லை என்பதை புரிந்துக் கொண்ட மித்ரா,
"பேச்ச மாத்தாதீங்க, என் எதிர்ல தான் பிள்ளைகளை திட்றது முறைக்கிறது எல்லாம்.. ஆனா என்ன விட நீங்க தான் நம்ம பசங்க மேல ரொம்ப பாசமா, அவங்களுக்கு என்ன தேவைனு முன்க்கூட்டியே எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சி செயல் படுத்துவீங்க.. எனக்கு நல்லா தெரியும் யாதவ நீங்க ஆரு ஆத்வி மாதிரி தான் நம்ம புள்ளயா பாக்குறீங்க" என்ற மனைவியை
"அப்டியா.." என குறும்பாக நக்கல் பார்வை வீச,
"ஆமா, ஆனா பிள்ளைகளை என் கண்ணு முன்னாடியே நீங்க கொஞ்சினாலும் நான் ஒன்னும் உங்கள மாதிரி பொறாமை பட மாட்டேன்.. அதுக்கு பதிலா என் புருஷன் கொஞ்சுற அழகை ரசிச்சி தான் பாப்பேன். . வேணும்னா ட்ரை பண்ணி பாருங்களேன்"
அவன் மீசையை நீவி விட்டு முகத்தை சுளித்து சொல்லும் அழகில் இருக்குமிடம் மறந்து மனைவியை அணைத்து முத்தமிட நெருங்க, ம்க்கும்.. என்ற செருமும் சத்தத்தில்,
"யார் டா அந்த இடைஞ்சல்" எனும் விதமாக ஆதி திரும்ப, அங்கு அஜய் தான் எங்கோ பார்வையை செலுத்தியபடி நின்றிருந்தான்.
அவனை பார்த்ததும் மித்ரா அவசரமாக ஆதியை விட்டு பிரிந்து, கூச்சத்தில் அவ்விடம் விட்டு ஓடியே விட்டாள்.
"வந்த வேலை திருப்தியா முடிஞ்சிதா அஜய்" கனீர் குரலில் ஆதியை ஏறிட்ட அஜய்,
"ஹான் முடிஞ்சிது மாமா, இப்ப தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு" சிரித்துக் கொண்டே சொன்னவனை ஏகத்துக்கும் முறைத்த ஆதி, அவன் முதுகிலேயே ரெண்டு போடு போட்டு விட்டு, தானும் ஒரு மெல்லிய புன்னகையை தவழ விட்டபடி அங்கிருந்து சென்றான்.
*******
மயக்கம் தெளிந்து கண் விழிந்த கவி, தான் இருப்பது மருத்துவமனை என்று அதன் வாசம் வைத்தே கண்டுகொண்டவளுக்கு, மங்கலான பார்வையிலும் தன்னையே தவிப்பாக பார்த்திருக்கும் ஸ்வாதியை சரியாக உணர்ந்து கொண்டாள் போலும்.
"ஸ்வாதி எனக்கு என்ன ஆச்சி ஏன் இங்க இருக்கோம்" என்றாள் சோர்ந்து போனவளாக..
அவள் கையை மென்மையாக பிடித்து தலை கோதிய ஸ்வாதி,
"ஏன் கவி காலைல இருந்து சாப்பிடல நான் உன்ன சாப்பிட சொல்லிட்டு தானே போனேன்.. காலைல இருந்து சாப்பிடாம இருந்ததும் இல்லாம, கடல்ல வேற விழிந்துருக்க, அதான் பயம் பசி பதட்டம் எல்லாம் ஒன்னு சேந்து மயக்கம் வர வச்சிடுச்சி" கவலையாக அவள் சொல்லும் போதே உள்ளே வந்தான் யாதவ்.
கரையில் மயங்கி விழப் போனவளை தாங்கிப் பிடித்து, கவிக்கு என்னானதோ என்று அழுகையில் கரைந்த ஸ்வாதியையும் கையோடு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்த யாதவ், பின் வேலை விடயமாக எங்கோ வெளியே சென்றவன் அப்போது தான் வந்தான்.
அவனை நன்றியோடு பார்த்த ஸ்வாதி, மென்னகை புரிய, அவளை கண்டுக்கொள்ளாதவன் பார்வை கவியின் மேல் தான் படிந்திருந்தது.
"இவர் யாரு.." கண்ணை கசக்கி முகம் சுருக்கி வினவிய கவிக்கு, யாதவ் தான் இனி தன் முதலாளி என்றதும்,
"அப்படியா" என பதட்டமாக அவனுக்கு மரியாதை கொடுக்க எழப் போனவளை தடுத்து நிறுத்திய யாதவ்,
"இங்க பாரு கவி, நான் உன் பிரண்டுக்கு மட்டும் தான் பாஸ் உனக்கில்ல,. அதனால அவங்க எனக்கு மரியாதை கொடுத்தா போதும், நீ என்ன யாதவ்னே பேர் சொல்லி கூப்பிடு, பிகாஸ் நானும் உனக்கு இனி ஒரு பிரண்ட் தான்" என்று ஸ்வாதியை நக்கலாக பார்த்து அவளிடம் கை நீட்ட கவி ஒன்றும் புரியாமல் தோழியைப் பார்த்தாள்.
யாதவ் கூறிய பதிலில் ஸ்வாதிக்கு ஒரு நிமிடம் முகம் சுணங்கி மீண்டு, "கை குலுக்கு" என வரவழைக்கப் பட்ட புன்னகையோடு சொல்ல, சரி என கை குலுக்க யாதவ்க்கு ஏகபோக மகிழ்ச்சி.
கவியை வீட்டுற்கு அழைத்து செல்லலாம் என மருத்துவர் சொல்லிட, மருத்துவமனையில் இருந்து மூவருமாக வெளியே வந்ததும், தோழிகள் இருவரும் அவனுக்கு நன்றி கூறி விட்டு ஆட்டோவில் செல்லப் பார்க்க, அவர்களை போக விடாமல் தன் காரில் ஏற்றிக் கொண்ட யாதவ், நேராக ஒரு உணவகம் அழைத்து சென்றான்.
"இங்க ஏன் சார் கூட்டிட்டு வந்தீங்க, சாப்பாடு எல்லாம் விலை ஜாஸ்தியா இருக்குமே.. நாங்க ஹாஸ்டல் போய் சாப்ட்டுக்கிறோம் சார், நீங்க சாப்ட்டு கிளம்புங்க"
ஓரளவு நடுத்தர குடும்பங்களும் சாப்பிடும் அளவிற்கு, பார்க்க ரிச் அன்ட் சிம்பிலாக இருந்த அந்த ஹோட்டலை பார்த்தபடி கூறிய ஸ்வாதியின் பேச்சை காதில் வாங்காமல், கவியின் கை பிடித்து உரிமையாக அழைத்து சென்றவனை பார்க்க ஏனோ கோபம் தான் வந்தது.
யாதவ் வேண்டுமென்றே தன்னை அவாய்ட் செய்கிறான் என்று புரிந்துக் கொண்டு தான், அவனோடு சாப்பிட மனம் ஒப்பாமல் அப்படி சொன்னது. மேலும் தன் கையில் அதிக பணமும் இல்லை.
முதல் மாத சம்பாதனை வரும் வரை, இருக்கும் பணத்தை வைத்து தான், எஞ்சு இருக்கும் நாட்களை தள்ள வேண்டும் அந்த எண்ணத்தில் ஸ்வாதி சொல்லி இருக்க, யாதவ் இவளை கிஞ்சித்தும் மதிக்காமல், அவ்வளவு ஏன் உள்ளே வா என்று கூட அழைக்காமல் சென்றதை எண்ணி, உள்ளே செல்லாமல் தயக்கமாக நின்று விட்டாள்.
கவியை அழைத்து வந்த யாதவ் நான்கு பேர் அமரும் மேஜையின் முன்பு நிற்க வைத்தவனாக,
"கவி இங்க உக்காரு நான் ரெஸ்ட்ரூம் போய்ட்டு வந்து ஆர்டர் கொடுக்குறேன்" என்றபடி சூசு வெகுநேரம் அடக்கி வைத்திருந்தால் அவசரமாக சென்றான்.
அந்த ஹோட்டல் முழுக்க மெல்லிய மஞ்சள் விளக்குக்களை மட்டுமே மிளிர விட்டிருக்க, ஏற்கனவே மங்களாக தெரியும் கண்களுக்கு மேலும் மங்கி போய் தான் தெரிந்தது.
"ஸ்வாதி எங்கே இருக்க நீ" கைகள் நீட்டி தடவிய கவி, நின்ற இடத்தை விட்டு இரண்டு மூன்றடி நகர்ந்து வந்து விட்டவளாக, "சரி உணவை ஆர்டர் கொடுக்க இங்கு தான் எங்காவது சென்றிருப்பாள்" என்றெண்ணிய கவி,
மீண்டும் இருந்த இடத்திற்கே சென்று அமர்ந்து விடலாம் என வேகமாக திரும்பியவளின் துப்பட்டாவின் ஒருமுனை, சன்னல்லோரம் வெளியில் இருந்து வீசிய குலுங்காற்றில் பறந்து, உணவருந்திக் கொண்டிருந்த ஆத்வியின் முகத்தை மூடியது.
தாயிடம் கத்தி விட்டு கோவமாக வெளியே வந்தவனும், தன் கம்பனியில் விதவிதமாக பரிமாறப்பட்ட மதிய உணவை சாப்பிடவில்லை. காரணம் ஏனோ, ஒருவேளை தம்பி சாப்பிடவில்லை என்ற எண்ணத்தில் அவனுக்கும் சாப்பிட பிடிக்கவில்லையோ என்று நினைத்தால் அது தான் தவறு. அங்கு போடப் படப்பட்டது அனைத்தும் சைவ உணவு அதான் காரணம்.
அங்கிருந்து புறப்பட்டு வந்த ஆத்வி, சிக்கன் மட்டன் நண்டு இறால் என்று வாயில் எச்சில் ஊற வைக்கும் அனைத்து விதமான அசைவ உணவுகளையும் விளம்பரத்திற்கு ஆங்காங்கே பேனரில் வைக்கப்பட்டிருந்த உணவகத்தை கண்டதும் உள்ளே வந்தவன், அனைத்து உணவுகளையும் கவியை அமர சொன்ன பின் மேஜையில் அமர்ந்து தான் உண்டுக் கொண்டு இருந்தான்.
தீடீரென சாப்பிடும் போது தன் முகத்தை ஏதோ மூடவும், "ச்ச..என்ன கருமம் இது" என கோவமாக நினைத்தாலும், அதிலிருந்து வரும் வாசனையை ஆழ நுகர்ந்த ஆத்வி, அந்த துப்பட்டாவை தன் முகத்தில் இருந்து எடுப்பதற்குள், சர்ரென தானாகவே அது வழுக்கி சென்றது.
கவி முன்னால் நடக்கவும் அவ்ளோடே சேர்த்து அவள் துப்பட்டாவும் செல்ல, அதை தொடர்ந்து பின்னால் திரும்பி பார்த்த ஆத்விக்கு அவள் முதுகு பக்கம் மட்டுமே தெரிய, கடுப்பாக திரும்பி மீண்டும் உண்ணுவதில் கவனம் கொண்டான்.
"கவி என்ன டி தனியா சுத்திட்டு இருக்க எங்க உன் புது பிரண்டு" ஸ்வாதி அவளை ஒரு இருக்கையில் அமர வைத்தவளாக, தானும் அவள் அருகில் அமர்ந்தபடி வினவ,
"என்ன ஸ்வாதி கிண்டல் பண்றியா.. பார்த்த ஒரு நாளிலே அவர் நமக்கு எவ்ளோ உதவி பண்றார், நல்ல மனசு டி அவர்க்கு.. பாவம் நீதான் அவர் கூட காலைல வம்பு பண்ணி இருக்க" என்று சிரித்துக் கொண்டே கவி சொல்ல,
"ஆமா நல்ல மனசு" என ஸ்வாதி முகத்தை சுழிக்கவும்,
"என்ன ரெண்டு பேரும் ஜாலியா என்னை பத்தி பேசிட்டு இருக்கீங்க" என்றபடி தன் வேலையை முடித்த கையோடு உணவை ஆர்டர் கொடுத்து விட்டு வந்தான் யாதவ்.
யாதவின் குரல் இப்போது கனீரென எதிரொலிக்கவும் அந்த சத்தத்தில், வாயில் நண்டு கொடுக்கை கடித்தபடி, சந்தேகமாக திரும்பிய ஆத்வி, அங்கு கவி வாய் விட்டு மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும், கண்ணில் வெறியேறியது.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 12
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.