Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
16
Reaction score
1
Points
3
அசுரன் 4

உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்த சுடரிகா எப்படியோ ஒரு வழியாக உறங்கிப் போனாள். நல்ல வேளையாக அது குளிர்காலம் இல்லாமல் இருந்ததினால் அவள் உடல் தப்பிப்பது.

இரவு வெகு நேரம் வரையிலும் போனில் மேனகாவுடன் வாட்ஸப்பில் அரட்டை அடித்து விட்டு எப்பொழுது உறங்கிப் போனான் என்று உக்ரானந்துக்கு தெரியவில்லை. மீண்டும் போனில் வந்த மெசேஜ் வைத்து தான் அவன் எழுந்து கொண்டான்.

"உங்க கிட்ட பேசணும் கால் பண்ணவா?" வந்த மெசேஜை பார்த்து அது நிச்சயமாக மேனகாவிடம் இருந்து தான் வந்திருக்கிறது என்று அறிந்து கொண்டவனோ சரி என்று அவனாகவே போனையும் செய்தான்.

"ஹேய் நீ சீக்கிரமா எந்திரிக்க மாட்டியே பத்து மணி ஆனாலும் இழுத்து போட்டுட்டு தூங்குவ இப்ப என்ன அஞ்சு மணிக்கு கால் பண்ணி இருக்க?" நக்கலாக கேட்டான் உக்ரானந்த்.

"ஆனந்த் உங்க கிட்ட பேசணும்?"

"நேத்து நைட் முழுவதும் நம்ம மெசேஜ்ல பேசிட்டு தானே இருந்தோம் இப்ப என்ன காலைல போன் பண்ணி பேசணும்னு சொல்ற ஏன் இன்னும் என்கிட்ட பேசணும்னு உனக்கு அவ்வளவு ஆசையா?" கேட்டவன் இதழ்கள் மெல்லமாக வளைந்தது. அவன் பேசுவதிலிருந்து நக்கலும் எட்டிப் பார்த்ததை அங்கு பேசிக் கொண்டிருந்த மேனகாவுக்கும் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

"என்ன கை விட்டுட மாட்டீங்களே?" அவள் அழுகும் குரலில் கேட்க இவனுக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது

நேற்று இரவு முழுவதும் இதே பாட்டு தான் பாடிக் கொண்டிருந்தாள் மேனகா.

"ஏழைகள் பஞ்சபாட்டு பாடுவது போல இவள் என்ன இதையே சொல்லிட்டு இருக்கா?" வாயுக்குள் முனுமுனுத்தவன் வெளியே சிரிக்கும்படி முகத்தை வைத்துக் கொண்டு,

"அப்படி எல்லாம் எதுவும் ஆகாது தேவையில்லாம நீ பயப்படாத நான் நேத்துல இருந்து உன்கிட்ட இதையே தானே சொல்லிக்கிட்டு இருக்கேன் இது ஜஸ்ட் அம்மாவோட திருப்திக்காக பண்ண கல்யாணம் எனக்கு ஏதோ கண்டம்" என தொடங்கியவனை,

"தெரியும் உனக்கு 31 வயசுல மிகப்பெரிய கண்டம் இருக்கிறதால ஆன்ட்டி இப்படி எல்லாம் பண்ணி இருக்காங்கன்னு எனக்கு தெரியும் என்கிட்ட சொன்னதுக்கு அப்புறம்தான் உன்கிட்டயே சொன்னாங்க அது முதல்ல உனக்கு தெரியுமா?" என்றாள் மேனகா.

"சரி உனக்கு தான் எல்லாமே தெரிஞ்சதுன்னு வச்சுக்கோ. இப்ப எதுக்கு காலங்காத்தால போன் பண்ணி என் மூடையே அப்செப்ட் பண்ணிட்ட மேனா. எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. இப்படி காலைல எந்திரிச்ச உடனே இப்படி சோக பாட்டு பாடுனா நான் எப்படி ஆபீஸ்க்கு போறது ஹா. எனக்கு ஒரு எனர்ஜி ட்ரிங்க் கொடுக்கிற மாதிரி நல்லா பேசக்கூடாதா?" கோபத்தில் கொஞ்சமேனும் அவளிடம் வெளிப்படுத்தி இருந்தான் உக்ரானந்த்.

தனக்குள் எழும் கோபத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துகிறான் ஆனந்த். நடந்த திருமணத்தை நினைத்து அவன் ஏற்கனவே வெந்து கொண்டிருக்க இவள் மேலும் மேலும் அதில் எண்ணெயை ஊற்றி அந்த புண்ணை இன்னும் அதிகப்படுத்துவது போலவே செய்து கொண்டிருக்க இவனுக்கு கோபம் தான்.

"ஏன் இப்படி இவள் பிதற்றுகிறாள் என்றுதான் அவனுக்கு புரியவில்லை. நான் வாக்கு கொடுத்தது கொடுத்ததுதான் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். அது ஏன் இந்த அக்கிறுக்கிக்கு தெரிய மாட்டேங்குது" என திட்டவும் செய்தான் மனதிற்குள்ளே.

"சாரி சாரி உங்க மூட ரொம்பவும் நான் அப்செட் பண்ணிட்டேன். ஐ அம் சோ ரியலி சாரி ஆனந்த். ஓகே ஹவ் எ நைஸ் டே ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் மீட்டிங்" என அவள் சொல்லிவிட்டு போனை அணைத்து விட அவனுக்கு அப்பொழுதுதான் மூச்சே விட முடிந்தது. வாயைக் குவித்து காற்றை ஊதி தள்ளியவன் சொப்பா முடியல என தலையில் கை வைத்து ஒரு இரண்டு நிமிடம் அப்படியே உட்கார்ந்தாள்.

என்னவெல்லாம் செய்ய வேண்டும் இன்றைக்கு யாரெல்லாம் பார்க்க வேண்டும் என தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மட்டுமே மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. அதை நினைக்க நினைக்க அவனுக்கு அதிக அளவிற்கு டென்ஷனும் உருவானது உடனே தனது பக்கத்தில் வைத்திருக்கும் சிகரட்டை எடுத்தான். கூடவே லைட்டரையும் எடுத்துக் கொண்டு பால்கனியின் கதவை திறக்கும் வேளையில் அங்கு அவள் அவன் காலுக்கடியில் படுத்துக் கொண்டிருக்க, அவளை பார்த்ததும் எரிச்சலுடன் அவளை மெல்லமாக தாண்டி சென்று அங்கு நின்று புகை பிடித்துக் கொண்டிருந்தான்.

புகையின் வாசத்தில் மெல்லமாக கண்விழித்தவளோ படார் என எழுந்து நின்றாள். அங்கு மேல் சட்டை இல்லாமல் வெறும் பேண்ட்டுடன் நின்றிருந்த ஆனந்த் புகை பிடித்துக் கொண்டிருப்பதை அவள் பார்த்ததும் படபடவென தூக்கி வாரி போட்டது பெண்ணவளுக்கு.

நேற்று இரவு அவன் பேசியது அவள் காதில் எதிரொலித்து கொண்டே இருந்தது வேகமாக எழுந்து நின்றவள், அங்கு இருக்கும் பெட் சீட்டையும் தலையணையையும் எடுத்துக் கொண்டு வேகமாக உள்ளே போக எத்தணிக்க,

"ஏய் நில்லு" என்று அதிகாரமாய் கேட்ட குரலில் அப்படியே கால்கள் பிரேக் அடித்தது போல நின்று விட்டது.

முதுகை காட்டிய படியே அவள் நெஞ்சு உலுக்கி அவள் நிற்க அவனோ அவளின் முதுகையே வெறித்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவனோ,

"ஏன் முகத்தை காமிக்க மாட்டியா அப்படியே நிப்பியா?" என்று அவன் கேட்கவும் அவளும் பதறி போனவளாக மெல்லமாக திரும்பி பார்த்தாள் அவனை.

சோபை இழந்து தலை முடி கலைந்து நின்றிருந்தவளின் வதனத்தை பார்த்த அவனுக்கும் மெல்லமாக ஏதோ ஒன்று மனதில் நெருடியது போலவே இருந்தது. அவளின் முகத்தை பார்த்ததும் இல்லாமல் கூர்மையாக இன்னும் அழுத்தமாக அவளையே புகை விட்டபடியே பார்த்துக் கொண்டே இருந்தான் ஆனந்த்.

அவன் எதற்காக தன்னை இப்படி கூர்மையாக பார்க்கிறான் என்று கூட அறியாத பெண்ணவளோ அவனை பார்க்காமல் அவனுக்கு பக்கத்தில் இருக்கும் அந்த மரத்தில் கொஞ்சி பேசி விளையாடிக் கொண்டிருக்கும் குருவிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கீச் கீச் சத்தத்தில் அது ஒலி எழுப்பிக் கொண்டிருக்க, தன் முன்னே நிற்ப்பவனை பார்க்காமல் குருவிகளையே பார்த்துக் கொண்டிருக்க எதை அவள் பார்க்கிறாள் என யோசித்து அவன் பின்னாடி திரும்பி பார்க்க அந்த மரத்தின் பொந்தில் இருக்கும் ஒரு தாய் குருவியும் தந்தை குருவியும் தன்னுடைய குழந்தையான குட்டிக் குருவிகளிடம் கொஞ்சி பேசி சிரிப்பது போன்றவே இருக்கும் காட்சி அவனுக்கு அது எரிச்சல் காட்சி ஆகி பபோனது.

தினம் பார்க்கும் காட்சி தான் ஆனால் அவன் பார்க்கும் விதம் வேறு மாதிரி அல்லவா இருக்கிறது.

"காலை எழுந்தால் போதும் இந்த குருவிகளோட சத்தம் தாங்க முடியவில்லை இந்த குருவிக்கூட்டம் எடுங்கன்னு எத்தனை முறை சொல்றது ஆனா கேக்குறானா அந்த தோட்டக்காரன். கோபத்தில் கடுகடுவென தினமும் அந்த தோட்டக்காரனை திட்டுவான். உக்கிரானந்த் கொடுக்கும் திட்டுகளை எல்லாம் வலது காதில் வாங்கி இடது காதல் போட்டபடியே போய் விடுவான் தோட்டக்காரன்.

ஒரு குடும்பத்தை அளிப்பது பாவம் அது மனிதராக இருந்தால் என்ன சாதாரண விலங்கினமாக இருந்தால் என்ன? பாவம் அதுவே சின்ன குருவிகள் அதன் கூட்டை கலைக்கலாமா என்ற எண்ணத்தில் தான் தோட்டக்காரன் அதை கலைக்காமல் இருந்தான்.
ஒரு நாள் அவனைப் பிடித்து சரமாரியாக திட்டி தீர்த்து வைத்தான்.

சரியாக உக்ரானந்த் இருக்கும் அறைக்கு எதிரே இருக்கும் அந்த மரத்தில் தான் குருவி கூடு கட்டி இருந்தது. காலையில் அது எழுப்பும் சத்தம் அவனுக்கு சில நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது இந்த குருவிகளின் சத்தம் ஏன் தான் இப்படி கேட்கிறதோ கோபத்துடன் தோட்டக்காரனை அன்றைக்கு பிடித்த விலாசி விட, இதற்கு மேலும் கலைக்காமல் இருந்தால் நம் வேலை போய்விடும் என நினைத்த தோட்டக்காரன் மெல்லமாக மரத்தில் ஏறி அந்த குருவிக்கூட்டை எடுக்க முயற்சிக்க, அவனை தடுத்து நிறுத்திவிட்டார் ஜெய்யானந்த்.

"என் மகன் தானே கேட்டால் அதற்கு நான் பதில் செல்கிறேன் நீ இப்ப அந்த குருவி கூட்டை கலைக்காதே கிளம்பு" என்று தோட்டக்காரன் சொல்லி அனுப்பி விட அதற்கு பிறகு அதை அவர் பொறுப்பில் பார்த்துக் கொண்டார்.

"ப்ச்.. சலித்தபடியே அவளின் மேல் ஒரு பார்வையை பதித்தவன் மீண்டும் அவளையே பார்த்து இருந்தாள். வெண்மையான தேகம் கொண்ட பெண்ணின் அழகிய வதனம் எப்பொழுதும் ஜொலித்துக் கொண்டுதான் இருந்தது. அதையெல்லாம் கண்டு ரசிக்கும் மன நிலையில் இல்லை அவன்.

எதையோ மண்ணை பார்த்ததை போலவே அப்பெண்ணை பார்த்து முடித்தவன், சிறு கண்ணசைவில் அவளை தான் பக்கம் பார்க்கும்படி செய்தான். அவன் கணைத்து அவன் தொண்டை செரும அவகுருவிகளின் மேல் பதித்து வைத்திருந்த அவரது பார்வை அவனின் பக்கம் திரும்பியது.

"ஆமா உன் பேர் என்ன கேட்டதே ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை அவால் ஒரு பெண்ணினுடைய பெயரைக் கூட தெரியாமல் திருமணம் செய்து கொண்டானா ? கடவுளே எனக்கு ஏன் இப்படி ஒரு கொடுமையை செஞ்ச என்று கடவுளை திட்டுவதை தவிர அவளிடத்தில் வேறு எதுவும் பெரிதாக இல்லை சுடரீகாவுக்கு என்றால்

"ஓகே ரீகா சாரி நேத்து நைட் உன்கிட்ட கொஞ்சம் ஹார்ஷா நடந்துக்கிட்டேன். அவன் சொல்லவும் அவளோ ஆச்சரியமாக தலை சாய்த்து அவனை பார்க்க,

"என்ன அப்படி பார்க்கிற நேத்து கடுகடு என்று பேசினவன் இன்னிக்கி சாப்பிட்டா பேசுறேன்னு பாக்குறியா? என்னதான் இருந்தாலும் உன்கிட்ட இந்த மாதிரி எல்லாம் நான் நடந்திருக்கக்கூடாது சோ சாரி எல்லாம் கேட்பேன்னு நினைக்காத அது கேட்கிற பழக்கமும் எனக்கு இல்ல கோவப்படுற மாதிரி நீ நடந்துகிட்ட எங்க அம்மா ஏற்கனவே இந்த கல்யாணம் எதனால நடந்ததுங்கிறத உன்கிட்ட சொல்லி இருக்காங்க இல்ல.?"

"சொல்லியிருக்காங்க சார்"

"ம்... குட் இந்த பதில் நேத்தே நீ சொல்லியிருந்தான் உன்னை நேத்து கொண்டு போய் bñதேவையில்லாம திட்டி இருக்க மாட்டேன் இல்ல அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் விடு. எங்க அம்மா சொன்னதுக்கு எல்லாத்தையுமே நீ கரெக்டா ஃபாலோ பண்ணனும். குறிப்பா உனக்கும் எனக்கும் நடந்துச்சே இந்த கல்யாணம் இதெல்லாம் யாருக்கும் வெளிய தெரியவே கூடாது புரியுதா கேள்வியாக கேட்டவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மெல்லhமாக தலையசைத்தாள்.

"இப்படி தலையை அசச்சா என்ன எனக்கு இந்த தலையை அசைக்கிறது உம்னு சொல்றது பிடிக்காது பதில் வரணும் புரியுதா என அவன் கேட்க ஓகே சார் நல்லாவே புரியுது இந்த கல்யாணத்தை பத்தி நான் மூச்சு விட மாட்டேன் சொன்னவை மெல்லமாக அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு

''நான் இப்போ போகலாமா?" என்றாள் அவன் சரி என்று தலையசைத்தான்.

"ஒரு நிமிஷம் நில்லு இங்க பாரு எனக்கும் உனக்கும் கல்யாணம் ஆனங்கறத நீ வெளியே சொல்ல மாட்ட கரெக்டுதான் ஆனா அதுக்காக நமக்கு கல்யாணம் ஆனதை வச்சு நீ அட்வான்டேஜா நடந்துக்க கூடாது. ஐ மீன் ஆபீஸ்ல இதுக்கு முன்னாடி வரைக்கும் நீ எப்படியோ? பட் ஆபில நீ ஸ்டாஃப் அது போல தான் எப்பவுமே புரிஞ்சுதா?"

ம்..

என்ன சொன்ன

"புரிஞ்சுது சார் புரிஞ்சது படபட படன்னு புரியவை அங்கிருந்து மெல்லமாக நகர்ந்தாள்.

அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தாள். அறைகள் இருக்கும் குளியல் அறையை பயன்படுத்தலாமா வேண்டாமா என உள்ளுக்குள் நடுக்கம் இது அவனுடைய அறை அவன் மட்டுமே பயன்படுத்தும் அதில் தானும் பயன்படுத்திக்கொள்ள அவளுக்கு கூச்சம் ஏற்பட கண்களை மிரட்டி பார்த்துக் கொண்டிருந்தவள் கிழம்ப அவள் அப்படியே அந்த பால்கனியில் இருக்கும் ஒரு இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள்.

வேகமாக அவளைத் தாண்டி உள்ளே சென்ற ஒ ஆனந்த் குளியல் அறைக்குள் சென்று குளித்து முடித்து விட்டு டிப் டாப்பாக தயாராகி கதவை திறக்கும் வேளையில் அவள் இன்னும் அதே இடத்தில் உட்கார்ந்து இருப்பதை பார்த்ததும் இவனுக்கு கடுகடுப்பு கூடிவிட்டது கோபமாக அவளை முறைத்து பார்த்தவன் அவளின் அருகில் வந்தான்.

"மகாராணிக்கு தனியா வெத்தல பாக்கலாம் வச்சு அழைக்கணுமோ . ஆபீஸ்க்கு லேட்டாகலகோபமாக கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் பயந்து போய் அவன் பக்கத்தில் நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழப்போனவளை அவளின் முழங்கையை பிடித்து தன் பக்கம் இழுத்ததில் அவளின் வெப்பமான மூச்சுக்காற்று அவன் மேலே பட்டு தெறித்தது.

அவளின் சுவாசத்தை உணரும் நிலையில் அவன் இப்பொழுது இல்லை ஆனால் ஆணவனின் ஆண்மை வாசம் முழுவதுமாக பெண்மைக்குள் இறங்கியது போல உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது அவன் அடித்து இருந்த சென்டின் மணமும் ஆண்மைக்கே உரித்தான கம்பீரமும் அவளை ஒரு நிமிடம் ஆட்டி அசைத்து பார்த்துவிட்டது. மேற்கொண்டு அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து மெல்ல விலக அவனும் அவளின் விழிகளுக்குள் தன் விழிகளை விட்டவன் ஏனோ திடுமென அவளின் கையை விட அவள் மேலும் கீழே விழுகப்போக இப்பொழுது முதலுக்கே மோசம் என்பது போல் அவளின் இடையோடு கைகோர்த்து தன் பக்கத்தில் கை வளைவுகளில் நிப்பாட்டினான்.

பெண்ணவளை திடுமென இப்படி தான் செய்வோம் என அவன் நினைத்துக்கூட பார்க்காத ஒன்று மெல்லமாக அவளை தன்னிடம் இருந்து பிரித்து ஒரு அடி தள்ளி நின்றுவிடவும் கைகளை மார்புக்கு குறுக்கே கையை கட்டியவன்,

"இப்படியே உட்கார்ந்து இருக்க இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்க?" என்றான் அவன்.

"சார் குளிக்கணும் இந்த பாத்ரூம் யூஸ் பண்ணிக்கலாமா வேணாமான்னு ஒரே குழப்பம்."

"நேத்து என்னோட ரூமையே யூஸ் பண்ணிட்ட பாத்ரூம் யூஸ் பண்றதுக்கு என்ன உனக்கு குழப்பம் லூசு போ போய் குளிச்சிட்டு சீக்கிரமா புறப்பட்டு வா" என அவன் சொல்லிவிட்டு போனதில் அவளுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்தான் தன் பொருள் தனக்கு மட்டுமே என்று வாதாடுபவன் எப்படி இலகுவாக? அவளின் மனம் கேள்வியாக கேட்டு கொக்கி போட்டு நிற்க பதில் தான் கிடைக்கவில்லை.

அசுரன் தொடர்வான்...
 

Author: shakthinadhi
Article Title: அசுரன் 4
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top