அத்தியாயம் 40
வெளியே கொட்டும் மழையில் நனைந்து கொண்டு நடந்து சென்று கொண்டு இருந்தான் சூர்யா. அவன் மனமோ பிளவு பட்ட பாறை போல பிளந்து கிடந்தது.
---
இங்கே நிலா அனுமதிக்க பட்ட அறையில் இருந்த மருத்துவர் வெளியே வந்து " ஒன்னும் இல்ல சின்ன காயம் தான், புல்லட் அவங்க தோள் மேல இறங்கி இருந்துச்சு இப்ப அத ரிமோவ் பண்ணிட்டேன் சோ ஷி இஸ் அவுட் ஒப் டேஞ்சர் " என்றார்.
அப்போது தான் அனைவரும் நிம்மதியாக உணர்ந்தனர்.
டாக்டரோ வீரை பார்த்து ' வீர் கம் டு மை ரூம் ' என கூறி விட்டு சென்றார்.
வீரும் அவர் அறைக்கு சென்று " சொல்லுங்க டாக்டர் " என்றான்
அவரோ ' உங்க சிஸ்டர் டூ வீக்ஸ் ப்ரெஞன்ட் அதாவது கர்பமா இருகாங்க அண்ட் பேபி ரொம்ப நல்லா இருக்கு ' என்றார்
வீரோ அதிர்ச்சியாக ' இது இப்ப யாருக்கும் தெரிய வேண்டாம் டாக்டர் நானே சொல்லிக்குறேன் ' என்றான்
அவரும் ' ஓகே வீர் இனி அம்மாவையும் பாப்பாவையும் கவனமா பாத்துக்கோங்க அண்ட் நாளைக்கி மார்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் ' என்றார்
வீரும் ' எஸ், டாக்டர் ' என கூறி விடை பெற்று சென்றான்.
---
இங்கே அறையில் கண் விழித்த நிலா தேடியாதோ அவள் மாமூவை தான். ஆனால் அவனை தவிர குடும்பத்தினர் அனைவரும் அவளை வந்து பார்த்து விட்டு சென்றனர். கடைசியாக உள்ளே வந்த வீரோ " காங்கிரஸ் பாப்பா " என்றான்
நிலாவும் புரியாமல் ' என்ன சொல்ற வீர், சூர்யா எங்க ' என்றாள்
அவனோ ' இப்ப கூட உனக்கு அவன் தான் வேணுமா, சரி கேளு என் பாப்பாக்கு ஒரு குட்டி பாப்பா வர போகுது அண்ட் இன்னும் இது வீட்ல யாருக்கும் தெரியது எப்படியும் நாளைக்கி வீட்டுக்கு போகலாம் போ போய் உன் லூசு மாமா கிட்ட சொல்லி ரெண்டு பெரும் வந்து வீட்ல சொல்லுங்க ' என்றான்
அவளோ ஆனந்த கண்ணீரோடு " தேங்க்ஸ் வீர் எங்க நீயும் கவிமா மாதிரி அவன் வேண்டாம்னு சொல்லிடு வா அப்படினு நினைச்சேன் " என்றாள்
அவனோ ' எனக்கு தெரியாத என் பாப்பா பத்தி உன்னால அவன் இல்லாம இருக்க முடியாது அவனால நீ இல்லாம இருக்க முடியாது, அப்பறம் ஏன் ரெண்டு பெரும் இப்படி பிரிஞ்சி இருக்கனும் ' என்றான்
அவளோ ' இப்ப எங்க அந்த லூசு ' என்றாள்
தெரியல பாப்பா. நான் கதிர் கிட்ட சொல்லி தேட சொல்றேன் நீ ரெஸ்ட் எடு என கூறி வெளியே சென்று விட்டான்.
---
மறுநாள் காலை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு சென்றாள் தூரிகை நிலா. மாலை போல அவளோடு வீரும் சென்று வெளியே செல்ல போக ராகவனோ " எங்க போறீங்க ரெண்டு பெரும் " என்றார்
நிலாவோ ' மாமா அது... வந்து சூர்யாவ பாக்க போறோம் ' என்றாள்
ராகவனோ " எதுக்கு பாப்பா இப்ப அவன பாக்க போற, அவன் தான் வேணுமா உனக்கு " என்றான்
அவளோ ' ப்ளீஸ் மாமா என்ன இருந்தாலும் அவன் உங்க பையன் இல்லனு ஆகிடுமா ' என்றாள்
பல்லவியோ ' அதுக்குன்னு நாங்க உன்ன அவனோட சேர்ந்து வாழணும்னு சொல்ல மாட்டோம் பாப்பா ' என்றாள்
அவளோ முடிவாக ' நான் சூர்யாவை பாக்க போறேன் மாமா ' என்றாள்
ராகவனோ " அப்ப உனக்கு அவன் மேல கோபமோ வருத்தமோ இல்லையடா " என்றான்
அவளோ ' காதலுக்கு அன்பை மட்டும் தான் கொடுக்க தெரியும் மாமா அது என்னைக்கும் வெறுப்பை தராது ஏன் என்னோட அம்மாவும் அப்பாவும் போடாத சண்டையை ஆனா இன்னக்கி வர அவங்கள மாதிரி ஒரு ஜோடி இல்லையே, அவன் தெரியாம தான் மாமா தப்பு பண்ணிட்டான் ஆனா நாம தெரிஞ்சே அவன ஒதுக்கி அதே தப்பா பண்ண வேண்டாமே மாமா ' என்றாள்
பல்லவியோ " எப்ப இருந்து பாப்பா இவளோ பொறுப்பா பேச ஆரம்பிச்ச எனக்கு சந்தோசமா இருக்கு இனிமே உனக்கு கஷ்டமே வராது சந்தோசமா இரு பாப்பா " என்றாள்
தேவ் - ரதி இருவரும் " உனக்கு அவன் தான் வேணும்னா நாங்க வேண்டாம்னு சொல்ல மாட்டோம் ஆனா மறுபடியும் அவன் இந்த மாதிரி பண்ண அதோட பின்விளைவு என்னனு உனக்கு தெரியும்னு நினைக்குறேன் " என்றனர்.
ராகவனோ ' அதன் எல்லாரும் சொல்லிட்டாங்களே போ போய் அவன கூட்டிட்டு வா ஆனா ஒரு கண்டிஷன் நாளைக்கி காலையில ரெண்டு இங்க இருக்கனும் இனிமே தனியா எல்லாம் தங்க கூடாது ' என்றான்
நிலாவோ " தேங்க்ஸ் மாமா " என ராகவனை அணைத்து கொண்டாள். பின் வீரோடு அவள் சூர்யாவின் பீச் ஹவுஸ் நோக்கி சென்றாள்.
---
வீர் நிலாவை பீச் ஹவுஸ் வாசலில் இறக்கி விட்டு செல்ல நிலாவும் அவள் கையில் இருந்த இன்னோரு சாவி மூலம் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். நேராக சூர்யாவின் அறைக்குள் நுழைந்த அவள் கண்டதோ அறை முழுதும் வீசும் மது வாடையும் கீழே உடைந்து கிடந்த காலி மது பாட்டில்களும் தான். மெதுவாக கண்ணாடி சில்கள் காலில் படாமல் நடந்து பால்கானியை அடைந்தாள்.
அங்கோ சூர்யா ஊஞ்சலில் படுத்து கொண்டு தலையை கீழே தூங்க விட்ட படி இருந்தான். நிலாவோ அவன் அருகில் சென்று " சூர்யா மாமா " என்றாள்
சூர்யாவும் பெண் அவளின் குரல் கேட்டு வேகமாக எழுந்து அமர்ந்து ' நீயா நீ ஏன்டி இங்க வந்த மொதல்ல வெளியே போ டி ' என்றான் கோபமாக
நிலாவோ ' ஏன் இது என் புருஷன் வீடு நான் இங்க தான் இருப்பேன் ' என கூறி சென்று அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.
சூர்யாவோ நிலாவின் அந்த அதிரடியில் கொஞ்சம் அதிர்ந்து ' என்ன வேணும் டி உனக்கு என்ன பழிவாங்க போறியா ' என்றான்
நிலாவோ " ஆமா நானும் என் பையனும் சேர்ந்து என்னைய நீ பண்ண கொடுமை எல்லாம் திருப்பி உனக்கு பண்ண போறோம் " என்றாள்
சூர்யாவோ கோபம் எல்லாம் சென்று விட அவளை பார்த்து ' நீ சரி பையனா யாருடி அது எனக்கு தெரியாம உனக்கு பையன் ' என்றான்
நிலாவோ கொஞ்சமும் அளட்டி கொள்ளாமல் ' ஆமா பையன் தான் வரும் போது பாரு இப்ப நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுடா ' என்றாள்
அவனோ ' என்னது டா வர வர மரியாதை தேயுது டி ' என்றான்
நிலாவோ ' ஆமா அது தான் உனக்கு பிரச்சனையா ஏன்டா என்ன நேத்து தனியா விட்டுட்டு வந்துட நெஜமாவே என்ன உனக்கு பிடிக்கலையா மாமு ' என கோபமாக ஆரம்பித்து வருத்தத்தில் முடிக்க
சூர்யாவோ பெண் அவளின் சோகத்தை காண முடியாமல் அவளை இடையில் கைவைத்து அணைத்து கொண்டு " நான் எப்ப என் எலி குட்டிய பிடிக்கலைனு சொன்னேன் என் உயிர் டி நீ ஆனா என்ன இத உன்கிட்ட சொல்ல தான் தைரியம் இல்லாம சுத்திகிட்டு இருந்தேன் அதுக்குள்ள தான் கதிர் வந்து... நாம கல்யாணம்னு ஒரு பெரிய பிரச்சனையே நடந்து முடிஞ்சிடுச்சி " என்றான்
அவளோ ' அப்ப உனக்கு நெஜமாவே என்ன பிடிக்குமா ' என்றாள்
அவனோ அவள் கன்னத்தில் முத்தம் வைத்து " உண்மையா எனக்கு உன்ன மட்டும் தாண்டி பிடிக்கும் நம்புடி " என்றான்
அவளோ ' அப்ப ஏன்டா நேத்து என்ன தனியா விட்டு வந்துட ' என்றாள்
அவனோ " அது அப்பா கோபமா இருந்தாரு அதான் பிரச்சனை பண்ண வேணாம்னு வந்துட்டேன், இப்ப பரவா இல்லையா உனக்கு கை வலிக்குதா டி எலி குட்டி " என கேக்க
அவளோ கோபமாக " ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட போட நானும் என் பையனும் எங்க மாமா வீட்டுக்கு போறேன் நீ தனியாவே இரு " என்றாள்
அவனோ ' ஏண்டி நான் இல்லாம தான் பையன் வருவானா சொல்லு டி ' என கேக்க
அவளோ ' அதன் ஏற்கனவே நீ பண்ணதுக்கு தான் ஒன்னு என் வயிதுக்குள்ள இருக்கு இதுல இன்னோனு வேணுமா சொல்லு டா உனக்கு தான் நாங்க வேண்டாம்னு டிவோர்ஸ் அப்ளை பண்ண லா அதனால நான் டிவோர்ஸ் தரேன் நீ தனியாவே இருடா ' என்று அவனின் மடியில் இருந்து கீழே இறங்கி நிற்க
அவனோ ' அது உனக்கு என்ன பிடிக்கலைனு நினைச்சி அப்படி பண்ணிட்டேன் சாரி ஆனா உன்ன பிடிக்காமலாம் அப்படி பண்ணல அண்ட் இனிமே விட்டு போகாத வேணும்னா என் கூடவே இருந்து தண்டனை கொடுடி ' என பாவமான முகபாவனையோடு கேக்க
அவளோ " ஆமா இனிமே என் பையன நல்லா பார்த்துக்கோ அதன் உனக்கு பனிஷ்மென்ட் " என்றாள்
சூர்யாவோ கீழே மண்டி இட்டு பெண் அவளின் ஆழிலை வயிற்றில் முகம் வைத்து கண்களில் நீர் நிறைக்க ' உண்மையா வா சொல்ற எலி நிஜமா பாப்பா வர போகுதா டி ' என கேக்க
அவளும் " ஆமா நேத்து தான் வீர் சொன்னான் நமக்கு ஒரு குட்டி பாப்பா வர போகுது இனிமே நீ தனியா இருக்க வேண்டாம், நாம மூணு பெரும் ஒன்னாவே இருக்கலாம் " என்றாள்
அவனோ அவளின் இடையை கட்டி கொண்டு அவள் மணி வயிற்றில் முகம் புதைத்து " சாரி உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் டி இனிமே உன்ன நல்லா பார்த்துக்குறேன், சரி சொல்லு என்ன வேணும் உனக்கு " என்றான்
அவளோ ' ம்ம். முதல வீட்ல போய் நமக்கு பாப்பா வர போகுதுனு நீ தான் எல்லார்கிட்டயும் சொல்லணும் ' என்றாள்
அவனோ தலையை தூக்கி அவள் முகத்தை பார்த்து" அது மட்டும் முடியாது டி இத போய் சொன்ன எங்க அப்பா என்ன நேத்து விட்ட அரையை விட பெருசா ஒன்னு வேணா சேர்த்து தருவாரு நான் வேற இனிமே அங்க வரவே மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் " என்றான்
நிலாவோ " அது உன் பிரச்சனை டா... மாமா நாளைக்கி காலையில நம்மள வீட்ல இருக்க சொன்னாரு சோ கண்டிப்பா போறோம் நீ பண்ண வேலையை நீயே சொல்லு " என்றாள்
அவனும் ' சரி என் எலி ஆசை பட்டு கேட்டுட்ட சோ உனக்காக பண்றேன் டி ' என்றான்
அவளும் " சரி போய் குளிச்சிட்டு வா ஒரே நாறுது " என்றாள்
அவனும் ' சரி போய் குளிக்குறேன், நான் வர வரைக்கும் இங்கே இரு ' என அவளை ஊஞ்சலில் அமர வைத்து விட்டு அறையை சுத்தம் செய்து குளித்து விட்டு கையில் ஒரு ஜூஸ் டம்ளருடன் அவள் அருகில் வந்தான்.
அவளிடம் ஜூஸ்யை கொடுக்க அவளோ எனக்கு வேணாம் வோமிட் வரும் என்றாள்
சூர்யாவோ " ஏன் வேணாம் கொஞ்சமா குடி எலி குட்டி வோமிட் எல்லாம் வராது லெமன் ஜூஸ் தான் கொண்டு வந்து இருக்கேன் " என்றான்
அவளோ ' நீ குடிக்கல ' என்றாள்
அவனோ " இல்ல நீ குடி நான் அப்பறம் சாப்ட்டுக்குறேன் " என்றான்
---
அன்று இரவு இருவரும் அணைத்து கொண்டு நிம்மதியாக உறங்கினர். சூர்யாவோ அவளை பொம்மை போல மென்மையாக அணைத்து கொண்டு படுத்து இருந்தான். அதிகாலை போல
ஆண் : நீ சூரியன் நான்
வெண்ணிலா உன் ஒளியால்
தானே வாழ்கிறேன்
பெண் : நீ சூரியன் நான்
தாமரை நீ வந்தால் தானே
மலர்கிறேன்
ஆண் : நீ சூரியன் நான்
வான்முகில் நீ நடந்திடும்
பாதையாகிறேன்
பெண் : நீ சூரியன் நான்
ஆழ்கடல் என் மடியில்
உன்னை ஏந்தினேன்
ஆண் : தவமின்றி
கிடைத்த வரமே ஹோ ஓ …
பெண் : இனி வாழ்வில்
எல்லாம் சுகமே......
என்ற பாடல் அலாரமாக ஒலிக்க விழிகளை திறந்தாள் தூரிகை நிலா. அவளோ நேரத்தை பார்க்க மணி காலை 5.30 என காட்டியது. பின் வேகமாக சூர்யாவை எழுப்ப அவனோ வேகமாக " என்னாச்சு எலி எதாவது வேணுமா இல்ல வலிக்குதா டி எங்கையாவது " என தூக்கம் கலைந்து பதட்டமாக கேக்க
நிலாவோ " அதெல்லாம் இல்ல மாமு வா நாம பீச்க்கு போகலாமா " என்றாள்
அவனோ " ஏண்டி அதுக்காக இப்படி காலங்கத்தால எழுப்புனா நான் கூட எதோ பிரச்சனைன்னு பயந்துட்டேன், சரி இரு வரேன் " என எழுந்து சென்று முகம் கழுவி விட்டு பெண் அவளோடு கடற்கரை நோக்கி நடந்தான்.
ம்ம். சொல்லு டி எதுக்கு இப்படி இருட்டும் இல்லாம வெளிச்சமாவும் இல்லாத நேரத்துல என்ன இங்க கூட்டிட்டு வந்து இருக்க என்றான்
அவளோ " சொல்றேன் அங்கே பாரு வானத்துல என்ன தெரியுது " என்றாள்
" அங்க என்ன இருக்கு நிலா, நட்சத்திரம், கொஞ்சம் சூரியனோட ஒளி எல்லாம் சேர்ந்து இருக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல நிலா மறைஞ்சு சூர்யன் வர போகுது " என்றான்
அவளும் ' ம்ம். அது தான் இது பகலும் இல்ல இரவும் இல்ல ரெண்டும் ஒன்னா சந்திச்சுக்குற நேரம் மாமு நீ தான சொன்ன நீ சூர்யன் நான் நிலா நாம எப்பவும் சேர முடியாதுனு ஆனா இப்ப சொல்றேன் இந்த நிலவும் சூர்ய ஒளியும் போல நாம எனக்கும் பிரிய மாட்டோம். ஹாப்பி பர்த்டே மாமு . ' என்றாள்
சூர்யாவோ " எனக்கு கிடைச்சதுலையே பெஸ்ட் மார்னிங் வியூவும் இது தான் பர்த்டே கிபிட்யும் இது தான் தேங்க்ஸ் டி எலி குட்டி " என பெண் அவளை இருக்கி அணைத்து கொண்டான்.
தொடரும்....
அடுத்து எபிலாக் வரும் மக்களே

Author: Nithya
Article Title: ரதி 🩵 40
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.