Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
அத்தியாயம் 36

சூர்யா நிலாவை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.இருவரும் லிப்ட் மூலம் நான்காம் தளம் சென்று ஒரு அறைக்குள் நுழைந்தனர். அங்கே படுக்கையில் வயர் களின் உதவியோடு மூச்சு விட்டு வாழ்ந்து கொண்டு இருந்தான் அவன். நிலாவோ கண்களை அகல விரித்து ' கதிர் ' என்றாள்

சூர்யாவோ " ஆமா கதிர், என் உயிர் நண்பன் டி அவன் பாரு உன்னால எப்படி செத்த பொணம் மாதிரி இருக்கான் பாரு " என கூற

அவளோ கண்களில் நீரோடு ' உண்மையாவே நா ஒன்னும் பண்ணல மாமா ' என்றாள்

அப்போது மருத்துவர் உள்ளே வந்து ' மிஸ்டர். சூர்யா உங்க பிரண்ட் ஓட நினைவுகள் திரும்ப ஆரம்பிச்சி இருக்கு இனி எப்ப வேணும்னாலும் அவர் பழைய படி எழுந்து உங்க கூட பேச ஆரம்பிச்சிடுவாரு ' என்றார்.

சூர்யாவோ கண்களில் புது வித நம்பிக்கையோடு ' சரி டாக்டர் இன்னும் நல்லா கவனமா பாத்துக்கோங்க என் உயிர் டாக்டர் அவன் ' என கூறி நிலாவோடு வெளியே சென்று விட்டான்.

---

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சூர்யா, நிலாவோடு காரில் சென்று கொண்டு இருந்தான்.
அவனுடைய முகத்தில் இன்னும் கதிரின் நினைவுகள் சுமையாக இருந்தது.

“நீ பார்த்தியா எலி … என் கதிர் உன்னால இப்படி வாழவும் முடியாம சாகவும் முடியாம கிடக்கிறான். ஆனா நீ என்னோட முகத்துக்கு முன்ன வந்து ‘நான் ஒன்னும் பண்ணல’ன்னு சொல்ற. உன்னை நம்புற அளவுக்கு நான் முட்டாளா நினைச்சியா எலி ?” என்று கடுமையாகச் கேட்டான்.

நிலாவோ , “ மாமா … என் மேல சத்தியமா சொல்றேன், நான் எப்போதும் என் மாமூவ மட்டும் தான் காதலிச்சேன் . கதிரோட உயிர் போகறதுக்கு நான் காரணம் இல்ல. நீ ஏன் என்னை நம்ப மாட்டே மாமா ?” என்று கண்ணீர் விட்டாள்.

ஆனால் சூர்யாவின் சந்தேகம் அவனைக் கொடூரமாக மாற்றியது.

---
அதன் பின் இருவரும் கதிரை பற்றி பேசி கொள்ளவில்லை என்றாலும் சூர்யா நிலாவிடம் பேசுவதை தவிர்த்தான்.
நிலா சூர்யாவுடன் உரையாட முயன்றால் –
அவன் எப்போதும் கசப்பான வார்த்தைகளால் குத்துவான்.

“நீ என் மனைவி ஆனாலும், என் மனசுல நீ கதிரை கொலை பண்ண பார்த்த கொலைகாரி . என்னை அவமானப்படுத்தினவள்தான்,” என்று சாடுவான்.

தினமும் இரவு குடித்து விட்டு தான் வீட்டிற்கு வருவான். நிலாவும் பல முறை அவனிடம் " குடிக்காத மாமா இந்த வாசனையே எனக்கு பிடிக்கல உனக்கு என் மேல கோபம் என என்னடா இப்படி குடிச்சி உடம்ப கெடுத்துக்குற " என்றாள்

அவனோ " என் உடம்பு என் இஷ்டம் அதுல நீ தலை யிடாத எலி " என்று அவன் அறைக்கு சென்று விடுவான்.

நிலா கண்ணீர் சிந்தினாலும், எதிர்க்காமல் தாங்கிக்கொண்டாள்.
அவளின் இதயத்தில் இன்னும் அவனுக்கான அன்பும் காதலும் குறையவில்லை.

---

நாட்களும் இதே போல சென்றது. இரவில் குடிகாரன் போல சுற்றி திரியும் சூர்யா காலை டிப் டாப்பாக கிளம்பி காலேஜ் சென்று விடுவான். அதே போல் தான் நிலாவும் எந்த சோகத்தையும் வெளியே சொல்லாமல் இருந்து வந்தாள். வீட்டில் இருந்து வீர், ரதி என்று யார் கேட்டாலும் ஒன்னும் இல்லை என்பதோடு முடித்து கொள்வாள்.

அன்றும் வழக்கம் போல எதோ சிந்தனையில் வெளியே வந்த நிலா எதிரே இருந்த கார்த்திகேயனை கண்டு " என்ன வேணும் உனக்கு வழிய விடு " என கூற

அவனோ ' என்ன புது பொண்ணே முகத்துல கல்யாண கலைக்கு பதிலா டன் கணக்குல சோகம் வழியுதே ' என்றான் நக்கல் குரலில்

அவளோ " மிஸ்டர் உங்களுக்கு எதுக்கு என் பர்சனல் போய் உன் வேலையை பாரு " என்றாள் கோபமாக

அவனோ " என்ன மேடம் ரொம்ப சூடா இருக்கீங்க போல நான் வேணும் னா உங்க சூட்டை குறைக்க ஹெல்ப் பண்ணவா " என்றான் இரட்டை அர்த்ததில்

அப்போது அவன் பின்னால் இருந்து " அவள பாத்துக்க நான் இருக்கேன் நீ உன் வேலையை மட்டும் பாரு " என்ற கம்பிரமான சூர்யாவின் குரல் கேட்டு திரும்ப

சூர்யாவோ நிலா அருகில் வந்து " காலேஜ் முடிஞ்சா வீட்டுக்கு கிளம்பமா என்ன வெட்டி பையன் கிட்ட எல்லாம் பேசிகிட்டு இருக்க " என்றான்

நிலாவோ பல நாள் கழித்து கேக்கும் அவனவன் குரலில் ' இல்ல மாமா இதோ கிளம்பிட்டேன் போலாம் வாங்க ' என அவனோடு காரில் ஏறி சென்று விட்டாள்.

கார்த்திகேயனும் அவமானத்தில் முகம் கருக்க நின்று இருந்தான்.

---

காரில் நிலா பின்னால் அமர்ந்து கொண்டாள்.
சூர்யா ஸ்டீயரிங் பிடித்துக் கொண்டு இருந்தாலும் அவன் பார்வை கண்ணாடியில் அவளின் முகத்தை தான் தேடிக் கொண்டிருந்தது.

அவள் முகத்தில் இருந்த சின்ன சிரிப்பு அவனுக்கு ஏதோ வித்தியாசமான உணர்வை கொடுத்தது.
பல நாட்களாக அவன் அவளை நோக்கி இப்படி கவனித்தது இல்லை.

ஆனால் உடனே மனசுக்குள்
“ என்டி இப்படி பண்ண உன்னால மட்டும் அன்னக்கி அவன் அப்படி ஒரு முடிவு எடுக்காம இருந்து இருந்தான நாம இன்னக்கி இப்படி கஷ்டப்பட்டு இருக்க வேணாமே எலி ” என்று ஒரு வேதனை குரல் கேட்டது.

உடனே அவன் முகம் கடுமையாக மாறிவிட்டது.

---

அந்த இரவு...

சூர்யா படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.
அவன் கனவில் கதிர் அவனிடம் வந்து,
“சூர்யா… நிலா ரொம்ப நல்லவ என்ன காப்பாத்து சூர்யா ” என்று குரல் கொடுத்தான்.

சூர்யா அதிர்ச்சியுடன் விழித்துக் கொண்டான்.
கனவு இருந்தாலும் அது உண்மை மாதிரி தோன்றியது.


---

மறுநாள் காலை கதிரின் மருத்துவர் அழைத்தார்.
“மிஸ்டர் சூர்யா… உங்களுக்கு ஒரு குட் நியூஸ் . கதிர் இன்று கண்களைத் திறந்து உங்க பெயரை சொல்ல ஆரம்பிச்சிட்டார்.” என்றார்

அதை கேட்ட சூர்யா மகிழ்ச்சியோடு நேராக சென்று நிலாவிடம் கூறி அவளின் கையைப் பிடித்து,
“எலி… நம்ம கதிர் கண் விழிச்சிட்டான் நாம போய் பாக்கலாம் !” என்று சொன்னான்.

நிலாவின் கண்களில் ஒளி பரவியது.


---

மருத்துவமனைக்குள் நுழைந்த சூர்யா, கதிரின் அறைக்குச் சென்று அவனைப் பார்த்தான்.
கதிர் மெதுவாக கண்களைத் திறந்து,
“சூர்யா…” என்றான்.

சூர்யா அவனை கட்டி அணைத்தான்.
“கதிர்... என் உயிரே... நீ திரும்ப வந்துட்ட.”

ஆனால் அதே நேரத்தில்…
கதிரின் கண்கள் நிலாவை நோக்கின.
அவன் சுவாசத்தில் சிரமமோடு,
“ நிலா... சொல்லு…சூர்யா …” என்று சொன்னதும் மீண்டும் மயங்கி விட்டான்.

சூர்யா அதிர்ச்சியடைந்தான்.
“என்ன சொன்னான் கதிர்? நிலா … அப்படின்னா… என்ன ?” என்று குழம்பினான்.

அதே நேரத்தில் கதவு வெளியே யாரோ ஒருவன் நின்று கொண்டு எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்தான்.
யார் அவன்?

அவன் முகத்தில் கொடூர சிரிப்பு மலர்ந்தது.
“இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்…” என்று புன்னகைத்தான்.


---

அதே நேரம் நிலாவின் போன் அடிக்க அதில் பல்லவி என காட்டியது. சூர்யாவோ அழைப்பை ஏற்று " சொல்லுங்க அம்மா " என்றான்

எதிர் பக்கம் என்ன சொல்ல பட்டதோ ' இல்ல அம்மா எலி குட்டிக்கு உடம்பு சரி இல்ல அதனால நாங்க வரல ' என்று அழைப்பை துண்டித்து விட்டான்.

அப்படி என்ன கூறி இருப்பார்கள்...?

தொடரும்....
 

Author: Nithya
Article Title: ரதி 🩵 36
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top