ரதி 22
அத்தியாயம் 22
🎶 கூழாங்கல் கூவுகின்ற
கானம் போதாதே கூசாமல்🎶
கூடுகின்ற நாணம் போதாதே💗
தொண்ணூறு ஆண்டுகள் நீ
கேட்கிறாய் ஜென்மங்கள்
ஆயிரம் போதாதடா💞🎶
🎶நம் கனவை
செதுக்க பிறந்தும்💗
போதாதுடா இவ்வுலகில்
இருக்கும் தெய்வங்கள்
போதாதுடா குட்டி குட்டி
கோவம் கொண்டு கட்டி
முட்டி மோதி கொண்டு
திட்டி திட்டி தீர்த்த பின்னும்💞🎶
🎶போதவில்லையே💕
போதவில்லையே💞🎶
🎶 உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே🎶 என ரதி அவள் தேவனின் இடுப்பினை கட்டி கொண்டு பாடலை பாட அதை ரசித்து கொண்டே வண்டியை இயக்கி கொண்டு இருந்தான் ருத்ர தேவன்.
அந்த ஆள் நடமாட்டம் குறைவாய் இருந்த சாலையில் தீடீரென ஒரு லாரி அவர்களை இடிப்பது போல வர ருத்ரதேவன் வண்டியை லாவகமாக கொண்டு சென்று ஓரமாக நிறுத்தினான். அங்கே ஈசல் போல வேகமாக வந்த கார்களையும் அதில் இருந்து இறங்கிய அடி ஆட்களை கண்ட தேவ் ரதியை இழுத்து கொண்டு ஓடினான். பின் அங்கே இருந்த பழைய இடத்தில் அவளை மறைவாக அமர வைத்து விட்டு " அம்மு, நான் திரும்பி வர வரைக்கும் இங்கேயே இரு " என கூறி சென்றான். அவளோ தாமதிக்காமல் ராகவனுக்கு அழைத்து கூற அவனோ வேகமாக ரதி இருக்கும் இடத்திற்கு ஜி பி ஸ் உதவியுடன் வந்து கொண்டு இருந்தான்.
இங்கே தேவ்வோ அவர்களை துரத்தி வந்த ஆட்கள் முன் நின்று ' இப்ப வாங்க டா ' என ஆண் சிங்கம் போல கர்ஜிக்க அவனை நோக்கி வந்த ஆட்களை எல்லாம் அடித்து துவைத்து எடுத்து கொண்டு இருந்தான். சுமார் அரை மணி நேரம் நடந்த சண்டையில் ஒருவன் தேவ்வின் மண்டையில் கட்டையால் ஓங்கி அடிக்க அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
அப்போது இன்னோருவனோ ரதியை இழுத்து வர ஒருவன் வேகமாக ரதியை கத்தியால் குத்த சென்றான். ரதி ஆஆ... என்று அலற அந்த கத்தியை கீழே தள்ளி விட்டு அந்த அடி ஆளை ஓங்கி மீதித்தான் ராகவன். அவன் தேவ் அருகில் சென்று கை கொடுத்து தூக்கி விட அவனும் அவன் தலையில் வரும் உத்திரத்தை கண்டு கொள்ளாமல் எழுந்து மீண்டும் சண்டை போட்டான். அப்போது திடீரென ஒரு குண்டு ரதியை நோக்கி வர அதை கவனித்த தேவ் அம்முமுஊஊ!.... என்ற கூவளோடு அந்த குண்டைய் அவன் வலது தோளில் தாங்கினான்.
அங்கே நடந்த கலவரத்தில் தேவ் மயங்கி சரிய போக அவனை இரு பக்கமும் தாங்கி பிடித்து கொண்டனர் ரதியும் ராகவனும். அதற்குள் காவல் துறையினர் வந்து துப்பாக்கியால் சுட்ட ரவுடி மற்றும் அங்கே கீழே மயக்க நிலையில் உள்ள அடி ஆட்களை எல்லாம் கைது செய்து சென்றனர். ராகவனோ ருத்ரதேவனை காரில் ரதியின் மடியில் படுக்க வைத்து விட்டு புயல் வேகத்தில் மருத்துவமனை நோக்கி சென்றான்.
ரதியோ அவன் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப அவனோ அதீத ரத்த போக்கினால் மயக்க நிலையில் கடினப்பட்டு கண்களை திறந்து " அம்மு, நான் இல்லனாலும் தைரியமா இருக்கனும் சரியா, எனக்கு பதிலா வீரும், ராகவனும் உன்ன பார்த்து கொள்வாங்க நீ எப்பவும் போல கம்பிரமா இருக்கனும் " என கூற
ரதியோ " அப்படி எல்லாம் சொல்லாத தேவ் எனக்கு நீ வேணும் பொண்ணு பொண்ணு சொன்ன இப்ப அவ முகத்த பாக்க வேணாமா, அம்மா அப்பா இல்லாம நாம பட்ட கஷ்டம் நம்ம குழந்தைகளுக்கும் வேணாம் தேவ் " என அழுகையோடு கூற
அவனோ " என்னால முடியலடி கண்ணு எல்லாம் எரியுது, தூக்கமா வருது டி பாப்பாவா பத்திரமா பாத்துக்கோ அம்மு என கூற
ராகவனோ " டேய்! கண்ண மூடாதடா இன்னும் கொஞ்ச நேரம் தான் ஹாஸ்பிடல் கிட்ட வந்துட்டோம், மகனே என் தங்கச்சிய விட்டு போகணும்னு நினைச்ச உன்ன கொன்னுடுவேன் டா " என கோபமாக பேச
தேவ்வோ " ஆல் தி பெஸ்ட் மச்சான். கண்டிப்பா நான் சொல்லனாலும் என் அம்மு, வீர், பாப்பா வா நீ பாத்துக்குவானு தெரியும் இருந்தாலும் சொல்றேன், இந்த அழகான குடும்பத்தோடு வாழ எனக்கு கொடுத்து வைக்கல டா மா..ச்..ச... ன் " மூச்சினை இழுத்து கொண்டு கூற
ராகவனோ கீரிச்.... என்ற சத்ததோடு காரை ஹாஸ்பிடல் முன் நிறுத்தினான். பின் பக்க கதவை திறந்து தேவ்வை தூக்கி கொண்டு உள்ளே சென்றான். அங்கே தயாராக இருந்த பெட்யில் ஆணவனை படுக்க வைத்து அவன் கன்னத்தை தட்டி கொண்டே " டேய்! தேவ் மச்சான் எழுந்திரிடா " என எழுப்ப அவனோ அசைவின்றி கிடந்தான்.
ஐ சி யூ வில் அவனை சேர்த்து விட்டு வெளியே காத்து நின்றனர் ராகவனும் ரதியும். அதற்குள் விசியம் தெரிந்து வீரராகவன் வர அவர் சென்று கட்டி கொண்டு " வீரா வீரா தேவ் எழுந்துக்க சொல்லு " என அழுக அவரோ " ஒன்னும் இல்ல தாயீ அவன் சீக்கிரமே கண்ணு முழிச்சிடுவான் " என கூறி பெண் அவளை அங்கே இருந்த நாற்காலியில் அமர வைத்தார்.
ரதியோ தாய்யை தேடும் குழந்தை போல அவள் தாத்தாவான வீரராகவனை வயிரோடு கட்டி பிடித்து அழுது கொண்டு இருந்தாள். அந்த வயதான பெரியவரோ " அழுகாத தாயீ, வயித்துல இருக்க பிள்ளைக்கு ஆகாது " என அவள் அழுகையை காண முடியாமல் சமாதானம் கூற அவளோ பிள்ளை என்றத்தில் அவள் அழுகையை குறைத்து கொண்டு மெல்ல விசும்பி கொண்டு இருந்தாள்.
இரண்டு பிள்ளைகள் இருப்பதால் மீனாட்சியும், பல்லவியும் அவர்களோடு வீட்டிலேயே இருந்து விட்டனர். ரதியோ அவள் தேவனை முதல் முறை சந்தித்தது முதல் இன்று காலை சென்ற பைக் பயணம் வரை அனைத்தையும் நினைத்து அழுது கொண்டு இருந்தாள். அவள் உதடுகளோ தேவ் தேவ் என மந்திரம் போல அவன் பெயரையே ஜெபிக்க
சரியாக அரை மணி நேரம் கழித்து அந்த ஐ சி யூ வில் இருந்து வெளியே வந்த மருத்துவரோ " சாரி டு செ திஸ் ஹி இஸ் னோ மோர் " என கூற ராகவனோ நோ... நோ.. என கத்த ரதியோ தன் செவிகளில் விழுந்ததை நம்ப முடியாமல் வேகமாக எழுந்து மருத்துவர் அருகில் சென்று " என் தேவ்க்கு என்னாச்சு டாக்டர் " என கேக்க அந்த மருத்துவரோ பெண்ணவளின் அழுது வீங்கிய கண்களையும் அவளின் சோக முகத்தையும் கண்டு " அவர் இறந்து போய்விட்டார் " என கூற ரதியோ அதீத அதிர்ச்சியில் அப்படியே மயங்கி சரிந்தாள்.
அவள் கீழே விழும் முன் ராகவனும் வீராவும் அவளை பிடித்து கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மங்கை அவளை பரிசோதனை செய்த மருத்துவரோ " அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் " என கூறி சென்றார்.
தொடரும்....

Author: Nithya
Article Title: ரதி 🩵 22
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.