Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
78
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 28

பேக்டரியில் படு ஜோராக காய்கறி மற்றும் பழங்களை ரகம் பிரித்து பேக்கிங் செய்து சீல் அடிக்கும் வேலை நடக்க.. சீல் செய்த பெட்டிகளை சிறிய ட்ரோலி மூலம் ஸ்டோர் ரூமியில் அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர் சில ஆட்கள்.. ஒரு பக்கம் ஆகாஷ் வேலைகளை சரியாக செய்ய.. மறுபக்கம் குழலியோ எப்படி ராகவ் மனதில் இடம் பிடிப்பது என தீவிரமான யோசனையோடு அங்கே இருக்கும் கேன்டீன்யில் சமையல் வேலை செய்து கொண்டு இருந்தாள்..

அப்போது ராகவ் அவன் அறைக்கு டீ ஆர்டர் செய்ய.. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குழலியோ கையில் டீயோடு தன் அங்கங்கள் தெரியும் படி உடையை சரி செய்து கொண்டு அவன் அறைக்கு சென்றாள்..

கதவை தட்டி விட்டு அவன் அனுமதிக்காக நிற்க.. உள்ளே இருந்து எஸ்.. என்ற கம்பிரமான ஆடவனின் குரலுக்கு அவள் உள்ளே சென்றாள்..

பார்த்ததும் பாவையை கண்டு முகத்தை சுழித்த ராகவோ " என்ன விசியம்??... " என்றான்

" சார்.. டீ ஆர்டர் பண்ணீங்க.. " என மரியாதையாக டீயை அவன் மேசையில் வைக்க..

அவனோ தன் முன்னாள் இருக்கும் கணினியை பார்த்த படியே வச்சிட்டு போங்க.. என்றான்

அவளோ அங்கேயே நிற்க...

ராகவோ " இன்னும் என்ன??.. " என்றான்

" இல்லை உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ராகவ்.. " என்றாள்

அவனோ " ஏய்... " என்றான் பற்களை கடித்த படி.. எதோ கூற

ஆடவனின் வார்த்தையில் தெரிந்த அலட்சியத்தையும் வெறுப்பையும் கண்ட குழலியோ அமைதியாக தன் காரியம் முக்கியம் என " அது உங்கள எனக்கு பிடிச்சி இருக்கு.. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா??.. " என்றாள் பட்டேன தேங்காய் உடைப்பதை போல...

ராகவோ அவளை விட்டு பிடிக்க எண்ணி " வாட்?? நீ பேசுறது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.. உன் தகுதி என்ன?? என் தகுதி என்ன??.. கெட் லாஸ்ட்.. " என விரட்டி விட்டான்..

அவளும் மனதில் வன்மம் கொண்டு என்னைக்காவது என்கிட்ட சிக்காமையை போயிடுவீங்க??.. என நினைத்த படி சென்று விட்டாள்..

அவள் சென்றதும் ஆடவனின் அலைபேசி அழைக்க.. அதில் மூன் கால்லிங் என காட்டியது.. சட்டென கோபம் சென்று இதழில் புன்னகை தோன்ற அழைப்பை எடுத்து காதில் வைத்தான்..

எதிர் புறமோ " என்ன மிஸ்டர். ராகவ் தினகரன்.. கல்யாணம் பண்ண ஆஃர் எல்லாம் வருது போல ??.. " என்றாள் நக்கல் குரலில்..

" ம்ம்.. ஆமா, மேடம்.. பொண்ணு கூட நீங்க பார்த்து இருப்பிங்கனு நினைக்குறேன்.. நீங்க ஓகே சொன்ன அடுத்த முஹூர்த்தத்துல கல்யாணம்.. " என்றான் மேலும் அவளை சீண்டிய படி..

" அப்ப முதல டிவோர்ஸ் அப்ளை பண்ணி.. ஜீவனம்சம்மா உன் சொத்து மொத்தம் எனக்கு கொடுத்துட்டு.. அன்னக்காவடியா போய் அவளை கல்யாணம் பண்ணிக்கோ.. " என்றாள் அதிரடியாக

ராகவோ " ஹேய்! மூன் என்னடி ஒரு பேச்சுக்கு சொன்ன டிவோர்ஸ் எல்லாம் கேக்குற.. " என அவன் கெஞ்ச..

" அப்படி வாடா வழிக்கு.. என் மங்குஸ் மண்டையா!.. எதோ பேச்சுக்கு கேட்டா சார்க்கு ரெண்டு பொண்டாட்டி கேக்குதா??.. வந்தேன்னு வை கட் பண்ணி போட்ருவேன்.. ஜாக்கிரதை.. " என பட்டாசாக பொறிந்து தள்ள..

" ஹேய்! மூன் பேபி ரிலாக்ஸ் டி.. உன் தினு எப்படிடி உன்ன விட்டு போவேன்.. ரதி மாதிரி பொண்டாட்டி நீ இருக்கும் போது யாரவது குரங்கு மாறி வப்பாட்டி வச்சி பாங்களா??.. " என்றான்

" ம்ம்.. ரொம்ப நடிக்காத டா.. " என்றாள்

அவனோ " இப்ப தான் உனக்கு புருஷன் நியாபகம் வந்துதாடி??.. அப்பறம் என்ன பண்ற??.. " என்றான்

" ஹெவி ஒர்க் போகுது தினு பையா.. இப்ப தான் கொஞ்சம் பிரேக் கிடைச்சது.. ஐ மிஸ் யூ டா.. எப்ப நேர்ல பக்காலாம்??.. " என்றாள்

" இன்னும் கொஞ்ச நாள் மூன் பேபி.. இங்க ஒர்க் இப்ப தானே ஆரம்பிச்சி இருக்கோம்.. ஒரு எயிட் டு டேன் வீக்ஸ் போகட்டும் டா.. அப்பறம் மாமா எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன்.. " என்றான்

" அப்படியா??.. ஆனா அந்த கண்ணு பொய் சொல்லுதே டா.. " என்றாள்

" ஏய்.. மூன் பேபி சும்மா.. சும்மா.. அந்த பிக் பாஸ் மாதிரி கேமரா வச்சு வாட்ச் பண்ணாத டி.. சீக்கிரமே நேர்ல பாக்கும் போது மொத்தமா சொல்றேன்.. " என்றான்

" ம்ம்.. சரி தினு.. டேக் கேர்.. அந்த லூசு பொண்ணு மறுபடியும் வராம பார்த்துக்கோ.. அண்ட் முடிஞ்சா அவளை வேலைய விட்டு தூக்கிடு.. " என்றாள்

ராகவோ " நீ சொல்லி செய்யமையை மூன் பேபி??.. கண்டிப்பா டி.. நீயும் கவனமா இரு.. ஜாக்கிரதை டி.. லவ் யூ மூன் பேபி.. " என அழைப்பை தூண்டித்தான்..

அழைப்பை தூண்டித்தாலும் ஆடவனின் மனம் முழுதும் அவன் செல்ல மூன் பேபியே நிறைந்து இருந்தாள்.. எங்கு இருந்தாலும் ஆடவனின் மேல் ஒரு கண் வைத்து இருக்கும் செல்ல ராட்சசி ஆயிற்றே அவள்..

---

இங்கு சிவராமன் வீட்டிலோ...

அந்த பெரிய வீட்டில் மாபெரும் குழப்பமான விசித்திரமான அமைதி...

முன்பு பணமும் அதிகாரமும் ஆட்சி செய்த அந்த வீட்டில் இப்போது பதட்டமும் பயமும் மட்டுமே சுற்றி கொண்டு உள்ளது..

சிவராமனோ குழப்பமாக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருக்க...

அவர் அருகே வந்த செண்பகமோ " அண்ணா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... " என்றார்

அதை கேட்ட சிவராமனோ " சொல்லு என்ன விசியம்??.. " என்றார் கேள்வியாக

செண்பகமோ " இல்ல.. அது வந்து என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.. அதுக்கு மாப்பிளை வீட்ல செய்யுறதுக்கு நகை பணம் எல்லாம் வேணும்ல.. அதனால இந்த சொத்தை எல்லாம் பிரிச்சி கொடுறியா??.. " என்றாள் பவ்யமாக

அவரோ கோபமாக " ஏய்... கிறுக்கி.. நானே அந்த முரடன் குடிகாரன் எப்படி இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குனா.. அதுவும் என் சொத்தை எல்லாம் கரைச்சிட்டு வரேன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்..

இதுல நீ வேற சொத்தை கொடு.. பணத்தை கொடுன்னு.. ஏன் உனக்கு தான் கல்யாணம் பண்ண அப்போ 200 பவுன் நகையும்.. கொஞ்ச நிலமும் கொடுத்தாங்கல அப்பறம் என்னவாம்..

எதோ உன் புருஷன் சொத்து மாதிரி உரிமையா வந்து கேக்குறவா... " என எரிச்சளோடு கூற..

அதில் முகம் கருத்த செண்பகமோ " என்ன அண்ணா பேசுறீங்க.. ஏன் உங்கள தானே என் புருஷன் பைத்தியம் ஆனாரு.. அப்பறம் நீங்களும் பழசை எல்லாம் மறந்து இருக்க மாட்டிங்கன்னு நினைக்குறேன்...

நான் இப்ப கூட அந்த ராவணன் கிட்டவோ இல்லை போலீஸ் கிட்டயோ வாய திறந்தா??... உங்க நிலைமைய பத்தி யோசிச்சு பாருங்க.. " என்றார் நயவஞ்சகத்தோடு..

அதில் சற்று பழைய விசயங்களை நினைத்து ஜர்க்கான சிவராமனோ " எனக்கு ரெண்டு நாள் அவகாசம் கொடு.. " என்றார் பம்மிய படி..

செண்பகமோ சரி என்பதை போல சென்று விட்டார்..

---

நாட்கள் ரெக்கை கட்டி கொண்டு பறக்க... தமிழ்நாடு முழுவதும் யாழினி குரூப்ஸ்யின் இயற்கையான காய்கறி பழங்கள் தான் பயன் படுத்த பட்டு வருகின்றன... அதுவும் இயற்கை முறையில் பயிறிட்டு விளைவிக்க படுவதால் மக்களும் அதை விரும்பி வாங்கி செல்கின்றனர்...

மகிழினிக்கோ இது ஏழாவது மாதம்... முன்பை விட ராவணனின் கவனிப்பில் ஓர் சுற்று எடை கூட கூடி இருந்தாள்...

ஜன்னலின் வழியே வானில் மிதக்கும் மேகத்தையும் நிலாவையும் ரசித்து கொண்டு இருந்தாள் மகிழினி.. சட்டென மடியில் கணம் கூட அதில் இன்பமாக அதிர்ந்தவளோ அவள் முரடனின் இருப்பை கண்டு " இன்னக்கி சீக்கிரமா வந்துட்டீங்க போல??... " என்றாள்

ராவணனோ " ஆமா, என் பூனை குட்டி தனியா இருக்கே அதான் அவளை பாக்க ஓடி வந்துட்டேன்.. சரி, சாப்டியா டேப்லெட்ஸ் எல்லாம் போடுகிட்டிய??... " என்றான் அவள் விரல்களில் முத்தம் வைத்த படி..

" ம்ம்.. சாப்டேன் மாமூ.. நீங்க சாப்பிட்டீங்களா??... " என்றாள்

" நான் சாப்டேன் டி.. அப்பறம் என்ன யோசனை என் பொண்டாட்டிக்கு??... " என்றான் கேள்வியாக

மகிழினியோ " அது எனக்கு அப்பத்தாவை பாக்கணும் போல இருக்கு மாமூ.. அவங்க கிட்ட பேசியே நாலு மாசம் மேல ஆக போகுது... " என்றாள் வருத்தமாக..

அவனோ " உனக்கு தெரியாத அவங்க இன்னும் கோமால தானடி இருக்காங்க.. சீக்கிரம் சரியானதும் அவங்க கிட்ட கூட்டிட்டு போறேன்.. " என்றான்..

அவளோ ம்ம்.. என சுரத்தையே இல்லாமல் கூற...

அவள் கைகளை பற்றி கொண்டவனோ " ஒய்! பூனை குட்டி.. நாளைக்கு ரெடியா இருங்க.. நாம வெளியே போறோம்.. " என்றான்

அவளோ " உண்மையாவா??... " என்றாள் ஆச்சர்யமாக

ஆமா.. என்பதோடு முடித்து கொண்டான் அவன்...

மகிழினிக்கு நாத்தனார் வளையல் போ டா யாரோ ஒரு பெண்ணை அழைத்து வரும் தேவகி..

ராவணனின் தங்கை வருவாளா??...

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 28
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top