Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
72
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 22

நசுங்கிய மலர் குவியல்களுக்கு நடுவே இச்! இச்! என்ற சத்ததோடு முத்தங்களை பாவையின் மேனியில் பதித்தவனோ " உண்மையாவே குலாப் ஜாமுன விட ரசகுல்லா தாண்டி ரொம்ப நல்லா இருக்கு... " என்றான் கிறங்கிய குரலில்..

" உங்கள.. " என சிணுங்கியவளோ " பாருங்க உடம்பு எல்லாம் ஒரே சக்கரை பாகு வழியுது.. இதுல உங்களுக்கு ரசகுல்லா கேக்குதா... எறும்பு கடிக்க போகுது.. " என்றாள் செல்ல கோபம் கொண்டு

" அதுக்குத்தான் மாமா இருக்கேன்ல.. மொத்தமா நானே சாப்பிடுறேன்.. அப்ப எறும்பு கடிக்காது டி... " என மீண்டும் அவள் இதழில் முத்தமிட

அவன் தலை மயிரை கொத்தாக பற்றி கொண்டவளோ " உங்ககிட்ட ஒன்னு கேக்கவா.. " என்றாள்

" ஒன்னு என்ன மொத்தமாவே கேளு... " என இரட்டை அர்த்தத்தில் கூற..

" உங்கள.. " என அவன் கன்னத்தை கடித்தவளோ " நாளைக்கி பாப்பா வந்தாலும் இதே மாதிரி இருப்பிங்களா??... " என்றாள்

" இன்னும் எத்தனை குழந்தை வந்தாலும் என் கடைசி நிமிஷம் வரை இப்படியே தான் இருப்பேன்.. போதுமா இல்ல வேற எதுவும் கேட்டு வாங்கி கட்டிக்க போறியா??.. " என்றான்

அவள் மறுப்பாக தலை அசைக்க.. மெல்ல அவள் மேனியில் எறும்பாக மாறி ஊற ஆரம்பிக்க.. ஸ்.. ஆ.. மா.. மா.. என பாவையின் சுக முனகல் தான் அறையே நிறைந்தது.. இன்று அதைஎல்லாம் எண்ணிய படி தோப்பு வீட்டில் படுத்து இருந்த ராவணனுக்கோ இதற்கு மேல் பாவையின் வாசம் இல்லாமல் வாழ முடியாது என்பதை உணர்ந்து நடுராத்திரி என்பதையும் மறந்து அவன் வீட்டிற்கு சென்றான்..

அங்கோ வெறும் வீடு தான் அவனை வரவேற்க... வேகமாக அவன் அறைக்குள் சென்றவனோ அவன் ரகசிய சிப் மூலம் மகிழினியின் லொகேஷனை அவன் லேப்டாப்யில் தேட.. அதுவோ ஆண்டாள் வீட்டை காட்டியது.. நொடியும் தாமதிக்காது மின்னல் வேகத்தில் ஆண்டளின் வீட்டிற்கு சென்றான்..

அங்கோ அதிகாலை நேரம் அவள் முகத்தில் குளிர்ந்த நீரை கொடிய ஆண்டளோ " ஏய்... எழுந்திரி டி.. " என பேய் போல கத்த..

உடலில் உள்ள சத்துக்கள் எல்லாம் வடிந்து அரைமயக்க நிலையில் இருந்த மகிழினியோ " ம்மா.. தண்ணீ... ம்மா.. " என பிதற்ற...

" ஏய்.. என்ன மஹாராணின்னு நினைப்பா போ.. போய் வேலைய பாரு... " என தலையில் அடிக்க..

அவளோ " வேணாம் அடிக்காதிங்க பா.. ப்.. பா இரு.. க்கு.. " என திக்கி திணறி கூற

அந்த அரக்கியோ " நீயே ஒரு ராசிகெட்டவ.. இதுல உனக்கு ஒரு புள்ளை தேவையாடி... " என ஓங்கி அவள் வயிற்றில் மிதிக்க... ம்ம்மா... என அலறியவளின் சத்தம் காதை கிழிக்க... புயல் வேகத்தில் அங்கு வந்த ராவணனோ கிழியே சுருண்டு கிடந்த அவன் பூனைக்குட்டியை நெஞ்சோடு அணைத்து கொண்டு " மகி.. மகிம்மா.. ஒன்னும் இல்ல.. என்ன பாரு.. " அவளின் கன்னத்தை தட்ட...

ஆடவனின் வேர்வை வாசத்தை அந்த மயக்கத்திலும் உணர்ந்தாளோ.. என்னவோ... " மா..மூ.. " என திக்கிய படி அவன் மார்பில் புதைத்து கொள்ள..

" ஒன்னும் இல்லடி.. நான் வந்துட்டேன்ல இனிமே நான் பார்த்துக்குறேன்.. " என அவளை மார்போடு அணைத்து கொள்ள..

ஆண்டளோ " டேய்! குடிகார பொறுக்கி... விடுடா அவளை... அவ இனி உன்கூட வாழ மாட்ட... " என சத்தமாக கத்த

ஆடவனின் நெற்றிக்கண் பார்வையில் ஒரு நொடி சப்தநாடியும் ஆண்டாளுக்கு அடங்கி தான் போனது... அவனோ அந்த ருத்ரமூர்த்தின் கோபத்தை கண்ணில் தெறிக்க ஒரு பார்வை பார்த்து " என்கூட இருக்கணுமா வேணாம்மான்னு என் பொண்டாட்டி தான் முடிவு பண்ணனும் நீயும் உன் சமந்தியும் இல்ல... " என கர்ஜனையாக கூறியவனின்..

நெஞ்சில் சாய்ந்து இருந்தவளோ "..மா..மூ.. போ.. லாம்.. " என்றாள் திணறிய படி..

அவனும் மறுப்பு கூறாமல் ஒரு ஆழ்ந்த பார்வையோடு செல்ல.. வெளியே நின்ற வேட்டை நாய்கள் கூட அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் மண்டியிட்டு நிற்க... அவனோ மென்மையாக அவளை வண்டியின் முன்பக்கம் அமர வைத்து வண்டியில் ஏறி ஓட்ட ஆரம்பித்தான்..

ரெண்டு நொடி கூட இருக்காது அதற்குள் அவன் சட்டையை பற்றி கொண்டவளோ " மா.. மூ.. வலி..க்..குது.. " என்றாள் அழுகையோடு அதில் பதறி போனவனோ " கொஞ்ச நேரம் பொறுத்துக்கோடி.. " என அவளை மார்போடு அணைத்த படி ஒரு கையால் வண்டியை செலுத்த ஆரம்பித்தான்..

---

அந்த மினி அரண்மனை போன்ற வீட்டில் வந்து நின்றது ராவணனின் பைக்.. மென்மையாக பெண் அவளை கையில் ஏந்தி கொண்டவனோ அந்த வீட்டிற்குள் நுழைய அவனுக்காக காத்து இருந்த பெண் ஒருத்தியோ " சீக்கிரம் வாங்க... ண்ணா " ஒரு அறைக்குள் சென்றாள்..

சுற்றிலும் மருத்துவ உபகரணங்கள் நிறைந்து இருக்க.. பாவையை பூ போல மெத்தையில் படுக்க வைத்தவனோ மென்மையாக அவள் சேலையை கலைந்து உடலில் உள்ள காயங்களை ஆராய.. அவன் அருகே நின்ற பெண்ணோ வயிற்றில் உள்ள குழந்தைக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தாள்..

ஒரு மணி நேரமாக அவளுக்கு பலவகையான மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியவளோ கடைசியாக அவள் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து விட்டு " பேபி இஸ் செப்... " என்றாள் " ஆனால் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இனிமே அவங்க பெட் ரெஸ்ட் தான் எடுக்கணும்.. குறைஞ்சது ஆறு மாசம் வரைக்குமாவது... " என்றாள்

அவனோ " இப்ப எப்படி இருக்கா??... " என்றான் உணர்ச்சியற்ற குரலில்

" இப்ப ஓகே.. வலிக்காக பெயின் கில்லர் கொடுத்து இருக்கேன்.. உடம்பு முழுக்க ஒரே ரத்த கட்டிப்போற அளவுக்கு காயம் இருக்கு.. அண்ட் மேல் வயிறு முழுக்க காயம் இருக்கு.. நல்லா வேலை இன்னும் வேகமா அடிக்கல இல்லைனா குழந்தையும் அவங்களையும் காப்பாத்துறது ரொம்ப கிரிடிகல் ஆகி இருக்கும்... " என்றாள்

" அப்ப கெஸ் தானே சொன்ன.. உண்மையாவே பாப்பாவா??... " என்றான்

" ஆமா, 21 நாள் ஆகுது... சரி, இப்ப எழுந்துக்க மாட்டாங்க ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்.. அப்பறம் வந்து பாக்குறேன்.. " என இருவருக்கும் தனிமை தந்து சென்று விட்டாள்..

மெதுவாக மகிழினியின் வயிற்றில் கைவைத்தவனோ மென்மையாக நடுங்கிய படி முத்தம் வைத்து " சாரி டா குட்டி.. அப்பா அன்னக்கி உங்கள வேண்டாம்னு சொல்லிட்டேன்... ஆனா உண்மையாவே நீனா எனக்கு ரொம்ப பிடிக்கும் குட்டி.. " என ஏதேதோ குழந்தையிடம் பேசியவனோ...

மயக்கத்தில் இருக்கும் பாவையின் நெற்றியில் முத்தமிட்டு " சாரி டி.. என்ன தான் நீ என்மேல கோபப்பட்டு இருந்தாலும் உன்ன தனியா விட்டு போய் இருக்க கூடாது.. " என புலம்பியவனோ அவள் அழுக்கு உடையை கலைந்து வெட் வைப்ஸ் மூலம் துடைத்து விட்டு சிவந்து வீங்கிய காயம் முழுதும் களிம்பை பூசி விட்டு வேறு உடையை மாற்றி விட்டான்..

இரண்டு மணிநேரம் கழித்து மென்மையாக விழிகளை திறந்த மகிழினியோ விழிகளை சுழட்டிய படி அவள் இருக்கும் அறையை காண.. அவள் அருகே வந்த ஆடவனோ " இப்ப வலி இருக்காடி... " என்றான் மென்மையான குரலில்

அவளோ கண்களில் நீர்கோர்க்க " என் பாப்பா... " என்றாள் வயிற்றில் கைவைத்த படி..

மெதுவாக அவள் கையின் மீது கைவைத்தவனோ " நம்ப பாப்பாக்கு ஒன்னும் இல்ல நல்லா இருக்குடி.. " என்றான்

" அப்ப உங்க முடிவ மாத்திகிட்டீங்களா??... " என்றாள்

" ம்ம்.. உனக்காக.. எதாவது வேணுமா??... " என்றான் அவளையே ஆழ்ந்து பார்த்த படி..

அவளோ உணர்ச்சியற்ற அவன் முகத்தில் தெரிந்த பரிதாவிப்பை கண்டுகொண்டவளோ " எனக்கு ஒன்னும் இல்ல... " என்றாள் புன்னகைக்க முயன்ற படி..

அவனோ " யாரு இப்படி பண்ணது??... " என்றான் அவள் உடலில் வரிவாரியாக இருந்த காயங்களை பார்த்த கொண்டே.....

" எனக்காக ஒன்னு பண்ணுவிங்களா??.... "

" சொல்லு என்ன செய்யணும்??... "

" நம்ப பாப்பாவ எட்டி உதைச்ச அவங்க கால் வேலை செய்யவே வேணாம்.. எப்ப ஒரு கருவ அழிக்க பார்த்தாங்களோ அப்பவே அவங்க வாழறதுகான தகுதிய இழந்துட்டாங்க... அப்பறம் அப்பத்தா அவங்க.. " என வார்த்தை வராமல் தவிக்க..

அவள் கரத்தை இருக்கி கொண்டவனோ " அவங்களுக்கு ஒன்னும் இல்ல... நீ ரெஸ்ட் எடு.. " என வெளியே செல்ல போக..

அவன் கரத்தை இருக்கி கொண்டவளோ " என்கூடவே இருக்கீங்களா??... உங்க வாசம் வேணும்.. முத்தம் வேணும்.. உங்க நெஞ்சில சாஞ்சு தூங்கணும்... " என்றாள் குழந்தை போல

" தூங்கலாம் இரு சாப்பாடு கொண்டு வரேன்.. சாப்பிட்டு அப்பறம் தூங்குவ.. " என வெளியே சென்றான்.. கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி வாயலை கண்டவளோ கணவனோடு வரும் பெண்ணை கண்டு குழப்பமாக ஆடவனின் முகம் பார்க்க..

ராவணன் கூறிய வார்த்தையில் அதிர்ந்து தான் போனாள்... அப்படி என்ன கூறி இருப்பான்??...

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 22
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top