- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 9
மருத்துவர் வந்து விக்ரமை பரிசோதனை செய்துக் கொண்டு இருக்க மொத்த குடும்பமும் அவ்வறையில் ஓரமாக நின்று, மருத்துவர் கூறப் போகும் நல்ல பதிலுக்காக ஆவலாக காத்திருந்தனர்.
தன் பரிசோதனையை முடித்த மறுத்தவர் பேசும் முன் முந்திக் கொண்ட மித்ரா,
"டாக்டர் மாமாக்கு இப்ப ஏதும் பிரச்சன இல்லையே, அவர் கண் முழிச்சிடுவார் தானே" என படபடப்பாக கேட்கும் மனைவியின் கரத்தை அழுத்தமாகப் பற்றி தன்னருகில் நிற்க வைத்துக் கொண்ட ஆதி, "நீங்க சொல்லுங்க" எனும் விதமாக கண்ணசைத்தான் மருத்துவரைப் பார்த்து.
"நீங்க நெனச்சது போலவே நல்ல செய்தி தான், விக்ரம் உடம்புல கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றம் வருது, முன்ன விட இனிமே தான் இவரை ரொம்ப கேர் எடுத்து பாத்துக்கணும்.. எப்ப எந்த நேரம் கண் விழிப்பார்னுலாம் இப்போதைக்கு தெளிவா சொல்ல முடியாது, அதோட அவர்க்கு டேப்லெட்ஸ் இன்ஜெக்ஷன் எல்லாம் இனிதான் கரெக்ட் டைம்க்கு பாத்து பாத்துக் கொடுக்கணும்..
அதனால இனி இவர் கூட எப்பவும் யாராவது இருக்கனும், எனக்கு தெரிஞ்சி பெஸ்ட் ஆப்ஷன் யாராவது நல்ல நர்ஸ் இல்ல கேர் டேக்கர் வச்சிக்கோங்க" என்றவர் அங்கிருந்து சென்று விட, இத்தனை நாளும் தேறாது முடியாது எப்பவேணாலும் பூட்ட கீஸா பூடும் என்று கை விரித்த மருத்துவர், இன்று நல்ல முன்னேற்றம் என சொல்லி சென்றதே அங்கிருந்த அனைவர் மனதும் லேசாக இருந்தது.
"மித்துபேபி என்ன டி யோசனைல இருக்க, உன் தங்கச்சி புருசன் பொழச்சிக்கிட்டனாம் உனக்கு இப்ப நின்மதியா" யாரும் பார்க்கும் முன் மனைவியின் இடையில் வலிக்காமல் கிள்ளி காதுக்குள் கிசுகிசுத்து நகர்ந்தான் கேடி பாய்.
சுற்றிலும் அதிர்ந்து பார்த்து திருத்திருவென முழித்த மித்ரா, யாரும் பார்க்கவில்லை போலும் என நினைத்து கணவனை முறைக்க, ஆதி ஒரு மார்க்கமாக புருவம் உயர்த்தி பார்க்கவும், "வயசாகியும் இவர் வம்பு பண்றதுக்கு மட்டும் குறைச்சலே இல்ல" என வாய்க்குள் முணுமுணுத்து வெட்க புன்னகைப் பூத்து திரும்பிக் கொண்டாள்.
தாய் தந்தையின் அலப்பறையை ஓரக்கண்ணால் கண்ட ஆத்விக்கு சட்டென கவியின் மென்மை இன்னும் அவன் உள்ளங்கையில் பஞ்சி மூட்டையாய் கனப்பது போல் இருக்க, "என்ன கன்றாவி உணர்வு டா இது" என திடுக்கிட்டுப் போனவன், நடுங்கும் கரத்தை உயர்த்தி அவன் முகத்துக்கு நேராக வைத்துப் பார்த்தவனுக்கு, அந்த உள்ளங்கையில் பாவையின் மென்மையின் கனம் மறைந்து, அவள் ஆத்வியின் கன்னத்தில் மாறி மாறி அறைந்த படம் காட்சியாக ஓடும் பிரம்மையை வெறிக் கொண்டு பார்த்தவன் கரம் அடுத்த நொடி இரும்பாக இறுகியது.
"மாமா, நம்ம ஏன் நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுக்கக் கூடாது, விக்ரம் மாமாவ டேக்கேர் பண்ண ஆள் வேணும்னு" அஜய் கூற,
"அதான் தம்பி நானும் யோசிச்சிட்டு இருந்தேன், யாராவது நல்லவங்களா மாமாவ பாத்துக்க வந்தா சீக்கிரம் அவர் குணமாகிடுவாருன்னு டாக்டர் தான் தெளிவா சொல்லிட்டாரே.. என்னங்க நீங்க என்ன சொல்றீங்க" ஆவலாக ஆதியைப் பார்த்தாள்.
"இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு, அதான் மாமியாரும் மருமகனும் கூடி பேசி முடிவெடுந்துடீங்களே அப்புறம் என்ன" என்றவன் அதுக்கான வேலையை அஜயிடமே ஒப்படைத்து விட்டு, ஆத்வியை அழுத்தமான பார்வை பார்த்தபடியே அலுவலகம் கிளம்பி சென்றான்.
"மாம் நானும் ஆபிஸ் கெளம்புறேன்" என்ற ஆத்வியை யோசனையாக பார்த்த மித்ரா,
"என்ன டா இன்னைக்கு தானே தொழில் தொடங்கப் போறேனு சொன்ன அதுக்கான வேலைய எதுவும் பாக்காம எப்டி ஆபீஸ்" என்றாள்.
"அதெல்லாம் முதல்லே ஸ்டார்ட் பண்ணியாச்சு மாம்.. இன்னைக்கு தான் கம்பனி திறப்பு விழாவும் கூட" அதிர்ச்சி கொடுத்தான் அன்னைக்கு.
"நீ ஊருக்கு வந்தே ஒன்னு ஒன்றை மாசம் தானே இருக்கும், அதுக்குள்ள எப்டி" என்று கேள்விகளை தொடுக்கும் ஆருவின் கை பிடித்து சுற்றி நடனம் ஒன்று போட்டவன்,
"நான் யூஎஸ் போறதுக்கு முன்னாடியே பக்காவா பிளான் பண்ணி இங்க வேலைய பாக்க சொல்லிட்டு தான் போய் இருந்தேன் ஆரு.. அந்த வேலை முடிய போகுதுனு எனக்கு இன்பார்ம் பண்ண பிறகு தான் இந்தியா வந்தேன்" என்றவன் "இதுக்கே இப்டின்னா இன்னைக்கு கம்பனிய திறந்து வைக்கப் போற சீப் கெஸ்ட் யாருன்னு தெரியுமா" என்ற மகனை வியப்பாக பார்த்த மித்ரா,
"யாருபா அது" என்றாள் ஆர்வமாக.
"அதுதான் சஸ்பென்ஸ்" ஆத்வி சொல்லும் போதே,
"அது யார்னு எனக்கு தெரியும் பாட்டி" என முந்திக் கொண்டு வாயை திறந்த தன்யாவின் வாயை பொத்தி, குண்டுகாட்டாக தூக்கி தன்தோள் மீதுப் போட்டுக் கொண்டவனாக,
"அட குட்டி சாத்தானே கொஞ்சம் உன் முந்திரிக் கொட்ட வாய மூடு.. இதுக்கு மேற்பட்டு உன் காதுக்கு வர வரமாதிரி எந்த விஷயத்தையும் பிளான் போடக் கூடாது போல" மனதில் நினைத்திருக்க,
"டேய் ஆத்வி அவ ஏதோ சொல்ல வந்தாளே, அவள விடு" என்ற ஆருவை,
"முடியாது பே.." என முகம் திருப்பி,
"சீக்கிரம் நீங்க எல்லாரும் டைம்க்கு ரெடியாகி இருங்க மாம், அக்கா நீயும்.. "மாமா நீங்க இவங்கள அழைச்சிட்டு வந்துடுங்க" என்று சொல்லி தன்யாவை தூக்கி செல்ல,
"டேய் இன்னும் அவ குளிக்க கூட இல்ல விட்டு போடா" ஆரு கத்த.
"அதான் இவ்ளோ கியூட்டா அழகா இருக்காளா.. நல்லவேள இவளை குளிக்க வச்சி மேக்கப் போடறேன்னு குழந்தை முகத்தை கெடுத்து வைக்கல.. நீ வா தன்யா போற வழில மாமாவே உனக்கு நல்லா முகத்தை கழுவி விட்டு கூட்டிட்டு போறேன்" என்றவன் குழந்தையை தூக்கி செல்லவும், அஜய் மித்ரா இருவரும் ஆத்வியின் கூற்றில் சிரிக்க, இருவரையும் முறைத்த ஆரு,
"வேணாம் ஆத்வி அங்க நாலு பேர் வந்தா குழந்தைய தான் முதல்ல பாப்பாங்க.. அவளை என்கிட்ட கொடுத்துட்டு போடா" என்ற ஆருவின் கத்தல் எல்லாம் ஆத்வியின் காதில் விழுந்தும் பலன் தான் இல்லாமல் போனது. பின்னே விட்டு சென்றால் குட்டி. சாத்தான் வாயை திறந்து விடுமே அந்த எண்ணம் தான்.
** ** **
"ஸ்வாதி ப்ளீஸ், நானும் உன்னோட வர்றேனே" என்றபடி தான் எங்கு சென்றாலும் குட்டிப் போட்ட பூனை போல பின் தொடரும் கவியை கண்டு முறைக்க நினைத்து தோற்றவளாக,
"இப்ப என்ன டி உனக்கு பிரச்சன" அவள் புறம் திரும்பி நின்று கை கட்டி வினவினாள்.
"நீ பீச் பக்கத்துல இருக்க ஐடி கம்பனிக்கு தானே இன்டெர்வியூ போற, நானும் உன்கூட வர்றேன்.. நீ இன்டெர்வியூ போய்ட்டு வர வரைக்கும் உனக்காக நான் பீச்ல வெய்ட் பண்றேன் ஸ்வாதி" சிறு பெண்ணாக கண் சிமிட்டி பாவமாக சொன்னதை பார்த்தும் அவளை எப்படி விட்டு செல்வாள்!
கவிக்கு பீச் என்றால் அத்தனை பிடித்தம், சிறுவயதில் ஆசிரமத்தில் எப்போதாவது தான் பீச் பார்க் என்று அழைத்து செல்வார்கள், ஒரு குறிப்பிட்ட நேரம் தான் அங்கு விளையாட வேண்டும். அதுவும் கவி போன்ற குழந்தைகளை எல்லாம் விளையாட அனுமதிக்க மாட்டார்கள். அவள் விளையாட செல்லாமல் இருப்பதை பார்த்து ஸ்வாதியும் விளையாடமல் கவியோடே இருந்து விடுவாள். அப்படி இருக்க ஸ்வாதி எதார்த்தமாக பீச் அருகில் உள்ள கம்பனியில் இன்டெர்வியூ என்று வாயை விட்டுவிடவே, அதையே பிடித்துக் கொண்டு ஸ்வாதிக்கு முன்னால் அவள் எழுந்து குளித்து தயாராகி, ஸ்வாதியை கிளம்ப விடாமல் நச்சரித்துக் கொண்டிருக்கிறாள்.
"சரி என்கூடவே வா.. ஆனா நான் வர வரைக்கும் பீச்ல கால் நனைக்கிறேன், கை நினைக்கிறேன்னு கடல் தண்ணி பக்கம் போகக் கூடாது.. கரைல உக்காந்து வேடிக்கை மட்டும் தான் பாக்கனும் சரியா" ஸ்ட்ரிக்ட் ஆபிசராக கேட்டிட, சரி என்று வேகமாக தலையாட்டி துள்ளி மகிழ்ந்தவளை கண்டு ஸ்வாதிவும் உற்சாகமாக தயாரானாள்.
** ** **
"அஜய், ஆத்வி புது கம்பனி ஓபன் பண்ண போற விஷயம் உங்களுக்கு தெரியுமா.." காதில் பெரிய டிசைனர் குடை ஜிமிக்கியை மாட்டியபடி ஆரு தன் கணவனை சந்தேகமாக பார்த்து வினவ, அவள் பார்வையில் ஜர்க்கான அஜய்,
"இல்லையே ஆருமா ஏன் உனக்கு இந்த விபரீதமான சந்தேகம் எல்லாம் வருது, ஐ ஹெட் யுவர் மைண்ட்" என தலையை உளுகிக்யவனை ஒரு மார்க்கமாக பார்த்தாள்
"அதுக்கு ஏன் அஜய் படபடப்பா இருக்கீங்க" முழுதாக தயாராகி அவன் முன் நின்று குருகுருவென பார்க்க, அதுவரை போனில் யாருக்கோ மெயில் அனுப்பிக் கொண்டே பேசியவன் இப்போது தான் அவளை சரியாக பார்த்தான்.
அழகிய வேலைபாடுகள் நிறைந்த சிவப்பு நிற பேன்சி நெட் சேரியை குட்டி பட்டை வைத்து கட்டி, கழுத்தை ஒட்டிய கற்கள் பொதித்த நெக்லஸ் ஜொலிக்க, கை நிறைய பேன்சி ரெட் வளையல் என்று மிதமான ஒப்பனையில் ப்ரீ ஹேர் விகிதம் தயாராகி இருந்தாள். பிள்ளை பிறந்தும் உடற்பயிற்சி மூலம் தன் உடலை, ஹீரோ சைசில் வடிவாக வைத்திருக்கும் மனைவியை கண்டவன் புத்தி எசக்கு பிசக்காக மாறியது.
கையில் இருந்த போனை மேஜையில் இடம் மாற்றியவன், சட்டென அவன் அமர்ந்த வாங்கிலே மனைவியின் இடை பிடித்து இழுத்ததில், அழகு பூவாக ஜொலிக்கும் சேலையோடே ஒரு சுற்று சுற்றி, மலர் கொடியாக அவன் மடியில் சரியாக தன்னை பொருத்திக் கொண்டவள், கணவனின் எதிப்பாரா செயலில் திடுக்கிட்டு பின் தன்னிலை வந்தாள்.
"அஜய் என்ன பண்றீங்க நான் கஷ்ட பட்டு ரெடியானேன், சேரி எல்லாம் கசங்குது பாருங்க" சிணுங்கியவளின் முதுகில் படர்ந்த முடி கற்றை முன்னால் எடுத்து விட்டு, பளீரென கண்ணை பறிக்கும் முதுகில் முத்தம் வைக்க, உடல் கூஸிப் போன ஆரு,
"அஜய் பங்கஷன் போகணும் மறந்துடீங்களா" என்றவளின் குரல் உள்ளே அடங்கியது கணவனின் ஸ்பரிசம் தொட்டதும்.
"போய் தான் ஆகணுமா ஆரு" என்றவன் குரல் தழைய, ஆடை மூடா பளபளக்கும் அவள் முதுகில் அவன் அதரங்கள் கோடுகள் வரைந்தது. கணவன் மடியில் அவன் கிடுக்குப் பிடியில் நெளிந்த ஆரு,
"அஜய் நீங்க ரொம்ப மோசம் எதுவா இருந்தாலும் பங்ஷன் போய்ட்டு வந்து பாத்துக்கலாம், நீங்க முதல்ல வாங்க அம்மா கீழ ரெடியாகி இருப்பாங்க" எங்கே விபரீதமாக சேலையில் கை வைத்து விடுவானோ என்ற பயத்தில் அவள் படபடக்க,
"ஆருமா ரொம்ப நாள் பிறகு நீயும் நானும் மட்டும் தனியா இருக்கோம் டி, இந்த மொமன்ட்ட நான் மிஸ் பண்ணவே மாட்டேன்" என்றவனுக்கு தானே தெரியும் அவன் இட்ட குட்டி, மனைவியின் அருகில் நெருங்க விடாமல் அவனை பாடாய் படுத்தி எடுப்பது.
அவன் கூற்றில் பதறியவளுக்கும் அவள் பிரச்சனை, "எங்கே முதலில் இருந்து தயாராக வைத்து விடுவானோ" என்று. தன்யா அவர்களோடு இல்லாததை மறந்து, எப்போதும் போல தன்னவன் முன்பு தைரியமாக நின்று பேசியதற்கு இது தனக்கு தேவை தான் என நொந்து போனாலும், இருவரும் தனிமையில் தங்களுக்கான நேரங்கள் செலவிட்டு பல நாட்கள் ஆனதை இத்தருணம் தான் இருவருக்குமே நினைவு படுத்தியது.
ஆருக்கு கணவனின் அருகாமை பிடித்திருந்தாலும், அதற்க்கான நேரம் இது அல்லவே என நினைத்தவளுக்கு இப்போது எப்படி இவனிடம் இருந்து தப்பிப்பது என யோசிக்கும் போதே, கண்கள் கிறங்கி மனைவியின் வாசம் பிடித்து அவள் முதுகில் மையல் இட்டு, படிப்படியாக அவள் மேனியில் ஊர்வலம் நடத்த கைகளை தளர்த்தவும், அந்த கேப்பை பயன்ப் படுத்திக் கொண்டவளாக, அவன் மடியில் இருந்து எழுந்த ஆரு, கணவனுக்கு பழிப்புக் காட்டி விட்டு சிப்பிகள் சிதறும் சிரிப்பு சத்ததோடு ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்.
"ஏய்.. ஆரு நில்லு டி" அவள் ஓடும் திசையைக் கண்டு உணர்ச்சிகள் எழும்ப கத்திய அஜய், எப்படியாவது அவன் இட்ட குட்டிக்கு தெரியாமல் மனைவியை தனியாக கொஞ்ச நாள் கடத்தி செல்ல வேண்டும் என்ற சபதத்தோடு பாத்ரூம் சென்று வந்த பின்னே, மீண்டும் தயாராகி ஆரு மித்ராவை அழைத்துக் கொண்டு ஆத்வியின் புது கம்பனிக்கு சென்றான்.
புயல் வீசும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 9
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.