- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 3
இன்று எங்கேயும் செல்லத் தோன்றவில்லை போலும், திண்ணிய தேகத்தில் சூடான எண்ணெய் தேய்த்துக்கொண்டு, அனல் பறக்கும் வெந்நீரில் குளிக்க தயாராக இருந்த ருத்ரங்கன்,
"அண்ணய்யா" என்ற குரலில் கதவு பக்கம் பார்த்தான்.
"மலர்வாடு (கற்பனை ஊர்) பகுதில சந்தேகம் படும்படியா சிலர பாத்தேன் அண்ணய்யா, அவங்கள ஃபாலோ பண்ணதால இக்கட வர்ற முடியாம போச்சி" குற்றக்குறுகுறுப்பு நெஞ்சை கவ்வ, திடமாக காரணம் சொன்னாலும், அதுதான் மெய்யும் கூட. என்ன ஒன்று முக்தாவை தான் மூடி மறைத்தான்.
"நேனு உன்ன காரணம் கேக்கலையே" கத்தை புருவம் ஏற்றி குறுகுறு பார்வையால் அவனை கூறு போட, பாம்பாக நெளிந்தன ரோமக் கால்கள்.
"அப்புறம் எதுக்கு போன் போட்ட அண்ணய்யா.."
"முதுகு பக்கம் கை எட்டல, நீ இருந்தா நல்லா தேச்சி முதுகை புடுச்சிவுடுவியேன்னு போன போட்டேன்.. இந்தா புடி.." அவன் கையில் எண்ணெய் கிண்ணத்தை வைத்து விட்டு, திடமாக தூக்கி இருக்கும் முதுகை காட்டி கண்ணாடி நோக்கியபடி அமர, ருத்ரனையும் எண்ணெய் கிண்ணத்தையும் மாறி மாறி பார்த்த மதன், பாவமாக முழித்தான்.
ருத்ரன் அழைத்ததும் என்னவோ ஏதோ என நினைத்து பதறி வந்த குற்றத்திற்கு, இது தனக்கு தேவை தான் என சலிப்பாக நினைத்தாலும், ஆணவனின் கரம் எப்போதோ எண்ணெய் தேய்க்க தொடங்கிவிட்டிருந்தது.
"டேய் மதனு.. அடுத்த வாரம் தஞ்சாவூர் போனும்.."
"சரி அண்ணய்யா, நீயும் வதினாவும் போய்ட்டு வாங்க, நேனு இக்கட பத்துக்குறேன்.." என்றபடி அவன் கை வேலை பார்க்க,
"நீ ஒன்னும் இக்கட வெட்டி முறிக்க வேணாம்.. கெளம்பு எங்களோட.." உத்தரவிட்ட ருத்ரனை புரியாமல் பார்த்த மதன்,
"என்னாச்சி அண்ணய்யா, திடீர்னு.." முக்தாவை எப்படி விட்டு செல்வது என்ற யோசனையில் கேட்டான்.
"ஏன் எதுக்குன்னு தெளிவா சொன்னதான் சார் வருவீங்களோ.." நிலைக்கண்ணாடி வழியே அவனை அழுத்தமாக நோக்க, தெளிவில்லாத அவன் முகம் ருத்ரனையும் குழப்பமடைய செய்தது.
"அதுக்கில்ல அண்ணய்யா, நீயும் இல்லாம நானும் போவாம இருந்தா, நம்ம ஸ்டண்ட் பசங்க தேடுவாங்களேனு நினச்சேன் அவ்வளவு தான்.. நம்ம போலாம் அண்ணய்யா"
ஒரு வாரம் இருக்கிறதே, அதற்குள் முக்தாவை ஒரு வழி செய்து விடலாம் என்ற எண்ணத்தில் உடனே சம்மதம் சொல்லும் போதே, கதவு திறந்துகொண்டு உள்ளே வந்தாள் தேன்குழலி.
"ரெண்டு பேரும் மும்புறமா பேசிட்ருந்த மாதிரி தெரிஞ்சுது.. நான் வந்ததும் அமைதியாகிட்டேள் என்ன விஷயம்.." இருவரையும் மாறி மாறி பார்த்தபடி கேட்டாலும், குழலியின் பார்வை என்னவோ கணவனை தான் முறைப்பாக ஏறிட்டது.
அதனை ருத்ரனும் கவனித்தான் தான் இருந்தும் கண்டுகொள்ளாதவனாக,
"அடுத்த வாரம் ஊருக்கு வர்ற சொல்லி அந்த அம்மா நச்சரிச்சிட்டு இருந்துதே, அதைபத்தி தான் சொல்லிட்டு இருக்கேன்.." கண்ணாடி பார்த்து கத்தை மீசையினை விரல் கொண்டு தடவி விட்டபடி சொல்லிட, புசுபுசு மூச்சிக் காற்று அனல் வீசியது.
"அந்த அம்மாவா.. அவா நோக்கு மாமி, நேக்கு அம்மா, எத்தனை முறை சொன்னாலும் இந்த மரியாதை மட்டும் எள்ளுருண்டை வாங்க போய்டும் போல..
எவ்வளவு அன்பா உங்களோட எங்க அம்மா பேசி ஊருக்கு வர்ற சொன்னா, ஆனா அது நோக்கு நச்சரிப்பா தெரியிதா.." இடையில் கை வைத்து எகிறும் மாமியை, உதட்டுக்குள் மறைத்த நகைப்புடன் கண்டவன்,
"கொண்டாந்த டீ ஆறுது பாரு, அவங்கிட்ட குடு டி.." பேச்சை மாற்றி கட்டளையிட,
"எங்களுக்கும் நியாபகம் இருக்கு" கணவனிடம் முறுக்கிய குழலி மதனிடம் தேநீரை நீட்டியவளாக,
"இந்தாங்கோ பிடிங்கோ.." என்றாள் முகத்தை உர்ரென வைத்து.
மறுப்பு கூறாமல் எடுத்துக்கொண்ட மதனுக்கு அவள் கையால் உணவு உண்ணுவதற்கு எல்லாம் கூச்சமும் இல்லை கோவமும் இல்லை. உரிமை கொண்டவர்களிடம் தானே கோபத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த முடியும்.
குழலியிடம் முறுக்கிக்கொள்ள காரணம், 'அத்தனை ஆட்கள் முன்னிலையில் அண்ணனை நிற்க வைத்து யோசிக்காமல் பேசி விட்டாயே' என்ற ஆதங்கம் தான்.
"உங்க அண்ணா எதுக்கு ஊருக்கு கூப்பிட்றான்னு நோக்கு தெரியுமா.." குழலி கேட்டதற்கு,
"நாக்கு தெலியாது.." என்றபடி குளிருக்கு ஏகுவாக அந்த தேநீரை உறுஞ்சி பருகிய மதனை சீராக பார்த்த குழலி,
"இன்னும் எத்தனை நாளைக்கு தனியா இருக்க போறதா உத்தேசம் மதன்" வயதில் சிறியவளாக இருப்பினும், அவளுக்கு அவன் கொழுந்தன் என்ற அன்பும், அவனுக்கு அவள் அண்ணி என்ற மரியாதையும் தானே, இவர்களின் பாசப் பிணைப்பை அழகாக இணைத்து வைத்திருக்கிறது.
"நேனு எங்க தனியா இருக்கேன், அண்ணய்யா நீ எல்லாரும் இருக்கீங்களே அப்புறம் என்ன வதினா.." என்றான் அவள் நோக்கம் அறிந்தே.
"சரி நான் நேரா விஷயத்துக்கே வர்றேன், எங்க அம்மா நோக்கு பொண்ணு பாத்திருக்கா.." என்றதும் மதன் கையில் இருந்த குடுவை குலுங்க, அருந்திக் கொண்டிருந்த தேநீர் தொண்டை அடைத்தது போல புரையேறியது.
"என்ன வதினா சொல்ற.."
"தஞ்சாவூர் பொண்ணு, பேர் கயல்விழி பாக்க நன்னா இருக்கா, நாங்க எல்லாரும் போட்டோல பாத்தாச்சு.. நோக்கும் பிடிச்சிதுன்னா பரிசம் போட்டுக்கலாம் என்ன சொல்றேள்.." கேள்வியாக நிறுத்தி அவன் முகம் பார்த்தாள் குழலி.
"திடீர்னு கேட்டா ஏமி செப்துந்தி"
"என்னது திடீர்னு கேக்குறேனா.. இதுவரைக்கும் முப்பது பொண்ணுக்கு மேல பாத்தாச்சி, ஒன்னு உங்க பின்புலன் அறிஞ்சி பொண்ணு வீட்ல பயந்து வேண்டாம்னு போய்ட்றா, இல்ல நீங்க ஏதாவது காரணம் சொல்லி பொண்ண தட்டி கழிச்சிட்றேள்..
இப்டியே போனா நோக்கு அறுபதாங்கல்யாணம் நடக்குறது கூட கஷ்டம் தான்.." சலிப்பாக சொல்ல, சில நொடி அமைதி காத்த மதன்,
"பாக்குற பொண்ணுங்க மேலயெல்லாம் நாக்கு இண்டெர்ஸ்ட் வரல வதினா.." அவளை பாராது சொன்னவனை பெருமூச்சு விட்டு பார்த்தாள்.
"இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிட்ருப்பேள்.. எல்லாரும் என்ன பிடிச்சா கல்யாணம் கட்டிக்கிறா, காலப்போக்குல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி புடிச்சி வாழுறது தானே.."
"அதில்ல வதினா.."
"ஒன்னும் சொல்ல வேணாம், இனியும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி இவா கூடவே கத்தி துப்பாக்கி தூக்கிட்டு சுத்திட்ருக்க ஐடியா இருந்தா, அந்த நினைப்ப இதோட விட்டுடுங்கோ..
இத்தனை வயசாகுது நோக்கு ஒரு வாழ்க்கைய ஏற்படுத்தி நன்னா வாழ வைக்கணும்னு இவாக்கு கொஞ்சமாவது எண்ணம் இருக்கா.. ஆயிரம் கமிட்மெண்ட்ஸ் இருந்தாலும், வாழ்க்கை துணை அப்டின்றது ஒவ்வொரு மனுஷாலுக்கும் ரொம்பவே முக்கியமாது..
நோக்கு கல்யாணம் பண்ண எங்கள விட, எங்க அம்மாக்கு தான் ரொம்ப ஆசையா இருக்கா.. உங்க முடிவு எதுவா இருந்தாலும் ஸ்ட்ரைட்டா அவாகிட்ட சொல்லி டீல் பண்ணிக்கோங்கோ.."
ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன குழலி, திருத்திருக்கும் மதனின் முழியை கண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டவளாக, சைடு கேப்பில் கணவனையும் சாடிவிட்டு அறையிலிருந்து வெளியேறிட,
"திமிற பாத்தியா இவளுக்கு" போகும் மனைவியை முறைந்தபடி, உடல் விறைத்து நின்ற ருத்தரனை நாட வேண்டிய நிலையானது மதனுக்கு.
"ஏமி அண்ணய்யா இது.. வதினாவ கூட சமாளிச்சுடலாம், ஆனா அவங்க அம்மா..
நீயாவது உன் மாமிக்கு சொல்லி புரிய வையேன்.." சிபாரிசு செய்வான் என துணைக்கு இழுக்க, அவனா வருவான்!
"புரிய வைக்கிறதா, ரெண்டு மூணு நாளா விடாம போன் போட்டு தலை வலிய உண்டு பண்ணிடுச்சி அந்த மாமி..
ஒருவாரம் டைம் கொடுத்து இருக்குறதே பெரிய விஷயம்.. அதுக்குள்ள உன்னால முடிஞ்சா, உன் மனசுக்கு நெருக்கமான அம்மாயி கண்டுபுடிச்சி கூட்டிட்டு வா..
என் மாமி முன்னிலையில வச்சே சிறப்பா கல்யாணம் கட்டி வைக்கிறேன்.. இல்லனா வேற மார்க்கம் லேது தம்முடு, மாமி பாத்த கயலு தான் உன் எதிர்கால கயிறு" தலைவர் ரைமிங் எல்லாம் அதிசயமாக அடித்து விட, நொந்து கொண்டான் மன்மதன்.
** ** **
மயக்கத்தில் இருந்து தானாக கண் விழித்த முக்தாவின் தலை வின்வின்னென்று தெரிப்பது போல் வலியிடுக்க, ஒற்றைக் கையால் தலையினை பிடித்துகொண்டபடி அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவளின் நினைவில் ஏதேதோ தோன்றி மறைந்தன.
சரிவர உண்ணாதது, குளிக்காதது இயற்கை உபாதை என்று உடல் முழுக்க கனத்த அசதியோடு அசோகர்யமாக உணர செய்ய, வயிற்றை இறுக்கமாக பற்றியபடி சோர்வாக சுற்றும் முற்றும் பார்த்தாள்.
முன்பு இருளடைந்து இருந்த அறை, இப்போது மிளிரும் விளக்கொளியின் உபயத்தால் நன்றாக பார்க்க முடிந்தது.
சிறிய படுக்கையறையில் ஒற்றை நபர் படுக்கக் கூடிய கட்டிலும், துணிகள் கலைந்து கிடந்த வாட்ரோபும் கண்டு தலை சுற்றிட, பாத்ரூம் எங்கே என அவஸ்தையாக தேடியவளுக்கு அப்பாடா என்றிருந்தது.
சட்டென குனிந்து தன் கரத்தை காண, முன்பு கட்டி இருந்த கை சங்கிலி இல்லாமல் வெறுமையாக இருப்பதை கண்டு நிம்மதி மூச்சி விட்டவளாக, ஒரு மூலையில் இருந்த நீரறைக்கு ஓடிய முக்தா, அவசர தேவையினை முடித்து, முகத்தை கழுவி சுத்தம் செய்தவளாக தன் கிழிந்த ஆடையினை தவிப்பாக கண்டாள்.
"எப்டி கிழிஞ்சிது.. காயம் கூட இருக்கு.." நடுக்கமாக முதுகுபுறத்தை பார்த்த முக்தா,
"நிரோஜ் கூப்பிட்டான்னு அந்த காட்டு வீட்டுக்கு போனேன், அங்கிருந்த எல்லாருக்கும் எடுத்துட்டு போன டீ பன் பிஸ்கட் எல்லாம் கொடுத்துட்டு, காட்டுப் பாதைல ஒத்தையா நல்லபடியா தானே நடந்து வந்தேன்..
அப்புறம் எப்டி இவன் கையில மாட்டினேன்.. இந்நேரம் நான் காணாம போனதை கண்டுபிடிச்சி, நிரோஜ் என்ன தேடத் தொடங்கி இருப்பானா?" மண்டை வலிக்க யோசனை செய்தவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் நடந்தது எதுவும் நினைவின்றி போனது.
உணவு பொட்டலத்தை பார்த்தாள், பசித்தாலும் அதனை உண்ண வேண்டுமா என்ற யோசனை தோன்ற, கபோர்டிலிருந்த ஒரு சட்டையினை எடுத்து தனது கிழிந்த உடை மேலே அணிந்துக் கொண்டவளாக, அவசரமாக ஓடி கதவை திறக்க முற்படும் போது, தானாக திறந்த கதவினை கண்டு பீதியாக பின்னோக்கி சென்றாள்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 3
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.