- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 13
யாதவின் குரலில் பெரிய சைஸ் நண்டு கொடுக்கை கடித்தபடியே பின்னால் திரும்பி பார்த்த ஆத்விக், முத்துகள் சிதறும் சிரிப்போடு முகத்தில் விழுந்த முடியை வெண்டை விரல் கொண்டு ஒதுக்கி விட்டபடி, அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த கவியின் முதுகை தாண்டி, அவளுக்கு எதிராக புன்னகை முகமாக அமர்ந்திருக்கும் யாதவை கண்டான்.
"இங்கேயும் வந்து தொலஞ்சிட்டானா ராஸ்கல்" மனதில் பொறுமிக் கொண்டே அவனிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் இரு பெண்களின் முதுகை வெறித்தவன்,
"அங்க மாம் என்னவோ நான் தான் இவனை விரட்டி விட்ட மாதிரி பேசினாங்க, ஆனா இங்க இந்த பிராடு பய ரெண்டு கேர்ள்ஸ் கூட உக்காந்து மூக்கு முட்ட முழுங்கிகிட்டு, ஜாலியா பல்ல பல்லக் காட்டி இளிச்சிட்டு இருக்கான் இடியட்" மீண்டும் மனதில் அவனை வருத்தபடி உணவில் கவனம் செலுத்தினாலும், செவிகளை மட்டும் கூர் தீட்டி அவர்கள் பேசுவதை உள்வாங்க தொடங்கினான்.
"என்ன ரெண்டு பேரும் என்ன பத்தி பேசிட்டு இருந்தீங்க" என்றபடி அமர்ந்த யாதவை கண்டு மென்னகை புரிந்த கவி,
"அதுவா சார் நீங்க எவ்ளோ ஹெல்பிங் மைண்டட் பர்சனா இருக்கீங்க, ஆனா இவ தான் அவசரப்பட்டு உங்ககிட்ட காலைல வம்பு இழுத்து வச்சிட்டாளே, அதை பத்தி தான் பேசிட்டு இருந்தோம் இல்ல டி" என்று அவள் தோள் உரசி கேட்க,
அதில் விளுக்கென நிமிர்ந்து யதாவை ஒரு பார்வை பார்த்த ஸ்வாதி, கவியை முறைத்தவளாக, "சும்மா இரு கவி அது காலையோட முடிஞ்சி போச்சி, இப்ப ஏன் அதை பத்தி பேசுற" அவள் காதைக் கடிப்பதை பார்த்தவன்,
"அவ்ளோ சீக்கிரம் எல்லாம் நான் யாருக்கு உதவ முன் வர மாட்டேன் கவிz என் மனசுக்கு நெருக்கமா தோணுறவங்களுக்காக மட்டும் தான் உதவி செய்வேன்.. அப்டி தான் நீயும்" என்று கவியை ஆள்காட்டி விரல் நீட்டி சொன்ன யாதவ்,
"ஆனா என்ன சீண்டி பாத்து விளையாடிவங்கள அவ்ளோ சீக்கிரம் மறக்கவும் மாட்டேன்" தன்னை அழுத்தமாக கண்டு சொன்ன வார்த்தையில், ஸ்வாதியின் மனதில் நெருடலை உண்டாக்கியது.
"ஆமா சாரு மறக்க மாட்டாரு, ஏன்னா அவங்களை நியாபகம் வச்சிருந்து ஆஸ்கார் அவார்ட் வாங்கி தரணும்ல அதான்" ஆத்வி தனக்குள் நக்கல் செய்துக் கொண்டாலும்,
"அவன் மனதுக்கு நெருங்கிய பெண் என்று சொன்னானே, அப்படி யார் இந்த உலகில் இல்லாத அழகி" கேலியாக இதழ் வலைத்தவனாக, அந்த அழகியின் முகம் பார்க்க திரும்ப, அப்போதும் அவள் முதுகு மட்டுமே பிரசன்னம் அளிக்கவும் ம்க்கும்.. என்று சலிப்போடு திரும்பிக் கொண்டான்.
அந்நேரம் ஆர்டர் செய்த உணவுகள் வரவே. "கவி சாப்பிடு" என பேச்சை மாற்றி அவளுக்கு பரிமாறிய யாதவ், மறந்தும் ஸ்வாதியை சாப்பிடு என்று சொல்லவில்லை. அது அவளுக்கும் பெரிதாக தோன்றவில்லை தான், ஆனால் அவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்த கவி,
"ஸ்வாதி நீ என்ன சாப்பிடாம இருக்க சாப்டு" என்றிட,
யாதவ் அப்போதும் வாய் திறவாமல் பன்ணீர் டீக்காவை கடித்தபடி அவளை பார்த்தானே ஒழிய, அப்போதும் ஒரு பேருக்கு கூட உண்ண சொல்லவில்லை,
அதில் முகம் சுணங்கிய ஸ்வாதிக்கு எடுத்த பசியெல்லாம் எங்கோ காணாமல் போக,
"இல்ல எனக்கு வேனாம் கவி, சுத்தமா பசியில்ல, நீ சாப்ட்டு கிளம்பு நம்ம ஹாஸ்டல் போகனும்" என்றாள் சமாளிப்பாக.
"ஏன் ஸ்வாதி நீயும் தானே காலைல இருந்து ஒன்னும் சாப்பிடாம இருக்க, அப்புறம் எப்டி பசி இல்லாம போகும்,. எனக்காக கொஞ்சம் சாப்பிடு ஸ்வாதி, ஹாஸ்டல் போனா வெந்ததையும் வேகாதையும் தான் திங்கணும்..
அதுவும் இல்லாம உன்ன விட்டு நான் மட்டும் எப்டி சாப்பிட்றது" விடாப்படியாக உணவில் கை வைக்காமல் தோழியிடம் வாக்கு வாதம் செய்த கவியை பார்த்த யாதவ்,
"அதான் உங்க பிரண்ட் சொல்றாங்கல்ல சாப்பிடுங்க ஸ்வாதி, இல்லனா உங்களால அவங்களும் சாப்பிட மாட்டாங்க" என்றபடி தண்ணீரை எடுத்து மிடரு குடிக்க, அவனை பார்த்த ஸ்வாதி அதற்கு மேல் எதுவும் சொல்லாமல், ஏதோ சிறிது உணவை மனமேயின்றி கொரித்துக் கொண்டிருந்தாள்.
இங்கு கவியின் குரல், ஆத்வியின் காதில் விழ விழ அந்த குரலை எங்கோ கேட்டது போல் தோன்றவே, "எங்கே கேட்டோம்" என்ற யோசனையில் இருந்தவன் சிந்தனை யாதவின் பேச்சில் கலைந்தது.
"கவி நீங்க ஏன் ஹாஸ்டல்ல இருக்கீங்க வீடு இல்லையா" என்றதும், கவி ஸ்வாதியின் இருவர் முகமும் ஒருசேர சுருங்கி, 'இல்லை' என்ற ஒற்றை பதிலை இருவருமாக அளிக்கவும், இருவரையும் மாறி மாறி பார்த்த யாதவ், அதற்கு மேல் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை.
சிறிது உணவை மட்டுமே முடித்துக் கொண்ட ஸ்வாதி, கண்ணாடி இல்லாமல் வறுத்த மீனில் உள்ள முற்களை தனியாக பிரித்தெடுக்க முடியாமல் கவி தட்டில் மீனை ஒதுக்கி வைத்திருந்ததை எடுத்து, பக்குவமாக பார்த்து பார்த்து பிரித்த மீனை அவள் தட்டில் வைத்தவளாக,
"கவி மீன் தனியா எடுத்து வச்சிருக்கேன், சாப்பிடு" என்றதும் சரி என அதை வேகமாக எடுத்து ருசித்து உண்டவளைக் கண்டு புன்னகைத்த ஸ்வாதியை இமைக்காமல் பார்த்த யாதவ், தன் தட்டில் இருந்த மீனை ஒரு பெருமூச்சு விட்டு ஏக்கமாக பார்த்து வைத்தான்.
"எல்லா மீனையும் பிரிச்சி வச்சிட்டேன் கவி, நீ சாப்டு நான் ஹாண்ட் வாஷ் பண்ணிட்டு வர்றேன்" என்ற ஸ்வாதி இருக்கையில் எழவும், தரையில் பிரண்ட தனது துப்பட்டாவையே தெரியாமல் மிதித்து தடுமாறி விழப் போனவளை,
"ஹேய் பாத்து.." சட்டென தன் இருக்கையில் இருந்து தாவி அவளின் உணவு உண்ட கையின் மணிக்கட்டை தனது இடக்கையால் பிடித்திழுத்து, நொடியில் அவள் மணிக்கட்டை விட்ட ஆண் கரம் அவள் இடையில் தாங்கி இருக்கவே, துப்பட்டா மிதித்ததிலேயே ஒருமாதிரி தடுமாற்றமாக இருந்தவள், சட்டென யாதவ் செய்த செயலில் நான்கு கண்களும் ஒருசேர மோதி, இருவரின் இதயத்திலும் நிலநடுக்கம் உருவானது.
அடுத்த நொடியே அவனிடமிருந்து வேகமாக விலகிய ஸ்வாதி, "ஸ்.சாரி சார்.. இட்ஸ் மை மிஸ்டேக், என் துப்பட்டா கீழ பிரண்டத பாக்காம கால வச்சி எழுந்துட்டேன்" எங்கே அவன் திட்டி விட போகிறானோ என்ற எண்ணத்தில் அவள் நீண்ட விளக்கம் கொடுக்க,
இந்த விளக்கம் எல்லாம் எனக்கு தேவையற்ற ஒன்று எனும் விதமாக, "டேக்கேர்" என்ற வார்த்தையை மட்டும் அழுத்தமாக உதிர்த்துவிட்டு, யாதவ் இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.
நல்லவேலை ஸ்வாதி விழவில்லை, அதற்குள் சுதாரித்த யாதவ் பிடித்து விட்டான் என்ற எண்ணத்தில் கவி பார்த்திருக்க,
"அடப்பாவி, இது தான் சாக்குனு அந்த பொண்ண எங்கெங்க டச் பன்றான் பாரு திருட்டு ராஸ்கல்" உள்ளே பொருமிய ஆத்வி, இருவர் தேகமும் ஒரு நொடியானாலும் முட்டிமோதி சிறு பிரலயம் உண்டு செய்து அதிர்ந்து போனதை கண்டு, வாயில் தொங்கிய நீண்ட நூடுல்ஸை உஸ்.. என்ற சத்தம் எழுப்பி ஒரே இழுவில், வேகமாக உறுஞ்சிக் கொண்டான்.
"சார் எனக்கு போதும் இதுக்கு மேல சாப்டா என்னால அசையக் கூட முடியாது, நானும் போய் ஹாண்ட் வாஷ் பண்ணிட்டு வரேன்" என்றபடி கவி எழப் போக,
"ஒன் மின்ட் கவி நானும் கூட வரேன் தனியா போகாதே" அவளுக்கு பார்வை சரியாக தெரியாதே என்ற அக்கறையில் யாதவ் சொல்ல, இங்கு ஒருவனுக்கு வயிறு எரிந்தது.
"அப்படி இவன் அக்கறையை கொட்டும் அளவுக்கு யார் அந்த அழகி, அதுவும் இரண்டு பெண்கள் வேறு" என்ற எண்ணமே அவன் மூளையை ஆக்கிரமிக்க, எப்போதோ உண்டு முடித்து எழவிருந்தவன், அந்த அழகியின் முகம் பார்ப்பதற்காகவே மெதுவாக உணவை விழுங்கிக் கொண்டிருக்கிறான்.
மேலும் எங்கோ கேட்ட அவளின் குரல் அவனை எழ விடாமல் தடுத்து வைத்திருக்கிறது என்று கூட சொல்லலாம். அவள் இப்போது எழப் போவதை உறுதி செய்து கொண்ட ஆத்வி, மிகவும் கவனமாக இருந்தான் அவளை பார்ப்பதற்காக.
"நானும் முடிச்சிட்டேன் கவி, கமான்" என எழுந்து நின்று அவன் கரம் நீட்டவும் மெல்லிய புன்னகை வீசி அவன் கரத்தோடு தன் கரம் கோர்த்து எழுந்த கவி,
"தாங்க்யூ சார்" என்றவளாக தன் கரம் விலகிக்கொண்டு, முன்னால் அடி எடுத்து வைத்து அவனுக்கு முதுகு காட்டி நடந்து சென்றவளை, ச்ச.. என்ற சலிப்போடு வெறித்த ஆத்வி,
"பெரிய உலக அழகின்னு நெனப்பு முகத்தை இப்டி அப்டி அசைக்காம பொம்மை மாறி நடந்து போரா.. அதுவும் இந்த பிராடு பைய வேற, கிடைக்கிற கேப்புல எல்லாம் மாறி மாறி உள்ள புகுந்துடுறான்..
அதுக்கு அவளுங்களும் இளிச்சு வைக்கிறாளுங்க" சலிப்பாக நினைத்த ஆத்வி, அந்த பழக்கப் பட்ட குரலுக்கு சொந்தக்காரியான கவியின் முகத்தை பார்க்காமல், இடத்தை விட்டு அசையக் கூடாது என்ற முடிவில் அவளுக்காக காத்திருந்தான்.
"என்னடா இது கொடுமை உள்ள ரெண்டு பேரா போனவன், இப்ப வரும் போது மூணு பேரா வரான்" வாஷ் ரூமில் இருந்து யாதவின் இருபக்கமும், இரு பெண்களும் சிரித்து பேசியபடி வருவதை கண்ணை கசக்கிப் பார்த்த ஆத்வி,
முகத்தை மறைத்திருந்த ஒருபக்க முடி கற்றுகளை மெல்ல ஒதுக்கி விட்டபடி, வரிசைப் பற்கள் தெரிய புன்னகை முகமாக வரும் கவியை கண்டதும், இத்தனை நேரமிருந்த சாதுவான மனநிலை முற்றிலுமாக மாறி இருந்தது.
அவள் கொடுத்த அடியும் அவமானமும் அசிங்கமும் அப்போதே தனக்கு மீண்டும் நடப்பதை போன்ற பிம்பம் தோன்றி, மனம் முழுக்க அவள் மீதிருக்கும் அப்பட்டமான பழிவுணர்ச்சியில், கொழுந்துவிட்டு எரிந்தது..
மூவருமாக ஒன்றாக ஒரே காரில் செல்வதை பார்த்தவனுக்கு, இன்னும் இன்னும் அவள் மீது வெறிக் கூடிப் போனாலும், அவன் கண்களில் மின்னும் குரூரமும் இதழில் பூத்த மர்மப் புன்னகையும்,
'இதுவரை தனது கண்ணில் சிக்காத வரையில் அவளுக்கு நல்லக்காலமாக இருந்திருக்கலாம், ஆனால் இனி கவியை ஒரு வழி செய்யாமல் ஓயப் போவதில்லை' என்று மட்டும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது.
"லெட்ஸ் வெயிட் பேபி, அன்னைக்கு நீ எனக்கு கொடுத்த அவமானத்தையும் அடியையும் கூடுதலா உனக்கே திருப்பிக்கொடுக்க இந்த ஆத்வி வந்துட்டே இருக்கேன்.. இனி வரப் போற நாட்கள் எல்லாம், இந்த ஆத்வியோட எண்ணம் மட்டுமே உன் மனசு முழுக்க நிறைஞ்சி இருக்கணும்..
எப்போ நான் என்ன செய்வேன்னு ஒவ்வொரு நொடியும் நீ பயந்து துடிக்கிறத, நான் லைவா பாத்து ரசிக்கனும்" என்ற உறுதியோடு அங்கிருந்து சென்றான்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 13
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.