- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
ஒரு மழை நாளில்
அத்தியாயம் - 1
முதுவேனில் முடிந்து, கார்காலம் தொடங்கி இருந்த நாட்கள் அது, இடி மின்னலுடன் பெருத்த சத்தத்தோடு அடை மழையாக கொட்டி தீர்த்துக் கொண்டு இருந்த அதிகாலை நேரம் அது.
அந்த மழையிலும் தார் சாலையில் ஒரு ஜாக்குவார் மட்டும் மிதமான வேகத்தில், சாலையை மறைத்து வெள்ளம் போல் மழை நீர் தேங்கி இருந்ததில் துரிதமாக வந்துக் கொண்டு இருக்க.
தூரத்தில் ஒரு பெண், கண்முன் தெரியாமல் மழையில் நனைந்தபடி பின்னால் திரும்பி திரும்பிப் பார்த்தபடி, மூச்சிறைக்க ஓடி வந்து கொண்டு இருந்தாள்.
மழை அதிகமாக பொழிவதால், சாலை எங்கும் வெறிச்சோடிக் காணப்பட, காரின் பின் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த மனோன்மணி பாட்டி தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு, தூரத்தில் மூச்சி வாங்க ஓடி வரும் பெண்ணை கவனித்தவர்,
"கண்ணா.. கண்ணா.. கொஞ்சம் வண்டிய நிப்பாட்டுப்பா.." என பதறியவராக கார் ஓட்டி கொண்டு வந்த அவரின் பேரனிடம் சொல்ல,
அவனும் என்னவோ ஏதோ என்று காரை சட்டென சாலையில் நிறுத்தி, பாட்டிக்கு தான் ஏதாவது பிரச்சனையா என நினைத்து, "என்னாச்சி பாட்டி" என்றான் தானும் பதறி.
அதற்குள் ஓடி வந்த பெண்ணோ அவன் காரை நிப்பாட்டும் முன்னமே, காரில் மோதி கீழே விழுந்து இருந்திருந்தாள்.
பாட்டியை திரும்பி பார்த்ததில் அவன் அதனை கவனிக்கவில்லை, ஆனால் பாட்டி கவனித்து மேலும் பதறியவராக, "கண்ணா அந்த பொண்ணு காருல மோதி கீழ விழுந்துட்டா, போய் என்னன்னு பாருப்பா" என்றார் அவரசமாக.
ஒன்றும் புரியாமல் விழித்தவன், "பாட்டி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, என்னாச்சு உங்களுக்கு மழை வேற பயங்கரமா பெய்து" கொஞ்சம் சத்தமாகவே கேட்டான்.
"ஐயோ கண்ணா, நம்ம காருல ஒரு பொண்ணு மோதி கீழ விழிந்து கெடக்குறாப்பா. சீக்கிரம் போ.." என்றார் மேலும் பதட்டமான குரலில்.
முன் இருக்கையில் வைத்திருந்த குடையை எடுத்து விரித்துக் கொண்டு காரை விட்டு கீழ் இறங்கினான் அவன். அந்த மாயக்கண்ணனின் வசீகரத் தோற்றத்தின் மறு உருவமான.
"அரவிந்த் கண்ணா" நம் நாயகன்.
ஆறடிக்கும் சற்று அதிக உயரம், அஜானுபகவான தோற்றத்துடன், நேர்த்தியான ஃபார்மல் உடையில் சட்டையை முன் பக்கம் மட்டும் இன் செய்து, இடுப்பில் சிங்க முகம் போட்ட பெல்ட் அணிந்து, பார்ப்போறை எளிதில் எடைப் போடும் வல்லமைப் பெற்ற கூர் பார்வையால் கீழே விழுந்து கிடந்த பெண்ணைப் பார்த்தான்.
பட்டு புடவையில், நகைகளுக்கு பஞ்சமின்றி அணிந்து இருந்தாள். கூந்தலை பின்னலிட்டு அதில் தலை மறைக்க வண்ண மலர்களால் அலங்கரித்து, மணக்கோலத்தில் தேவதையாக இருந்தவள், அடை மழையில் தொப்பளாக நனைந்து இருந்தும், அவளின் முகம் பயத்தில் அரண்டு போய், அந்த மழையிலும் அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவன் கண்ணுக்கு தெள்ள தெளிவாக தெரிந்தது.
காரில் மோதி கீழே விழுந்ததில், கையில் அடிப்பட்டு ரத்தம் மழை நீரோடு கரைந்து கொண்டு இருக்க, அதைப் பார்த்த அந்த பெண்ணோ நடு ரோடு எனும் பாராமல், சிறு பிள்ளைப் போல தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.
அதனை பார்த்தவன், "ஏய்ய்.. பொண்ணு இப்ப ஏன் அழற, நீ இப்டி விழுந்து சாக என் வண்டி தான் கெடச்சிதா" என்றவனின் அதிகாரக்குரலில் அதிர்ந்து போன அப்பெண், எதிரில் இறுக்கமான முகத்துடன் குடை பிடித்த வன்னம் நின்றிருந்தவனை, முகத்தில் மழை நீர் விழ அண்ணாந்து பார்த்தவளாக,
"அ.து கீழ விழுந்ததுல, க்.கைல அடி பட்டுடுச்சி, ரத்தம் வருதா அதான்" என ஒவ்வொரு வார்த்தையாக கோர்த்து கோர்த்து தன் தேன் குரலில் பாவமாக கீச்சிட்டாள்.
அவளை கூர்ந்து பார்த்த அரவிந்த், "எங்கருந்து வருதோ என் உயிர வாங்க" என முணுமுணுத்து, "நீ முதல்ல எழுந்து தள்ளிப் போ, வேற ஏதாவது வண்டி வருதான்னுப் பாத்து அதுல விழுந்து சாவு" பற்களை நரநரவென கடித்து கொஞ்சம் கூட அந்த பெண்ணின் நிலையை கண்டுக் கொள்ளாது காருக்குள் ஏற முனையும் நேரம், ஏதோ சத்தம் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தான்.
காட்டெருமை போன்ற தேகக் கட்டுகளுடன் பத்து ரௌடிகளுக்கு மேல் படபடவென ஓடி வந்தவர்கள் கைகளில், நீளமான கத்திகள், கட்டைகள் என கூர்மையான ஆயுதங்களை வைத்திருக்க,
அதில் ஒருவன் மட்டும் பட்டு வேஷ்டி சட்டையில், கரிகட்டையை போன்ற வக்கிர பார்வையுடன், கையில் மஞ்சள் கையிராலான தாலியை சுற்றிக் கொண்டு அரக்கன் போல் வந்தவன்,
"அடியே ஓடுகாலி சிறுக்கி, தாலி கட்ற நேரம் பாத்து என் கண்ணுலையா மண்ண தூவிட்டா ஓடி வர்ற, இனிமே நீ எப்டி எங்கிட்டருந்து தப்பிகிறேன்னு நானும் பாக்குறேன் டி" என்ற கனல் வீசும் பார்வையால் பாவையை நெருங்கிட,
அதில் மொத்தமாக உடல் நடுங்கி போனவள், விருட்டென எழுந்து அரவிந் பின்னால் வந்த பெண்ணோ,
அவன் என்னவென உணரும் முன்னமே பின்னாலிருந்து அவனை இறுக கட்டிக் கொண்டவளாக,
அவன் பின் முதுகில் பயத்தில் முகத்தை புதைத்து, "சார்.. சார்.. ப்ளீஸ் சார் என்னை எப்படியாவது இவங்ககிட்டருந்து காப்பாத்துங்க சார்" என பாவமாக கெஞ்சி, நடுங்கி அழத் தொடங்கி விட்டாள்.
அரவிந்த் தான் அவளின் இந்த செயலில் எதுவும் காதில் விழாத சிலையாக நின்றிருந்தான். பாவையின் ஈரம் சொட்டும் பொன்மேனி முழுவதும் ஆணவனின் உடலோடு ஓட்டி, அவளின் உடலில் உள்ள குளிர்ந்த நீரை எல்லாம் ஆணவனின் தேகத்தில் சூடான நீராக மாற்றி பாய்ச்சிக்கொண்டு இருக்க.
ஆடவனின் உடல் சிலிர்த்து, மயிர்க்கூர்கள் எல்லாம் அட்டென்ஷன் போசில் சல்யூட் அடிக்காத குறைத்தான் நிமிர்ந்து நின்று கொண்டது. கையில் வைத்திருந்த குடையோ, அந்த பெண் அவனை அணைத்த போதே மழையில் எங்கோ அடித்து சென்றது.
"டேய் யாரு டா நீ, என்னவோ பெரிய ஹீரோ மாதிரி வந்து, நான் கட்டிக்க போற இந்த சிறுக்கிய கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நடு ரோட்ல கட்டி புடிச்சிட்டு இருக்க துஉஉ.." என கத்திய துருவன்,
"டேய் தடி மாடுங்களா.. உங்களுக்கு என்ன கைல கட்டையோட நின்னு போஸ்க் கொடுக்கவா, வேளா வேளைக்கு சட்டி சட்டியா சோறு போட்டு கூடவே வச்சிருக்க.. ச்சீ.. போய் அவனை அடிச்சி போட்டுட்டு என் பட்டு குட்டிய எங்கிட்ட கொண்டாங்க" அரவிந்த் பின்னால் இருந்த பெண்ணை காரில் ஏறி அமர்ந்து எட்டி பார்த்து துருவன் கண்ணடிக்க, மேலும் நடுங்கிப் போனாள் அவள்.
முதலில் ஒருவன் கட்டையோடு அரவிந்தை தாக்க வர்ற, அது வரை சிலையாக நின்றிருந்தவன், பெருத்த இடி சத்தம் காதை கிழிக்க, தாக்க வந்தவனின் கையை முறுக்கி கட்டையை பிடுங்கி அவன் தலையில் ஒரு போடு போட அப்படியே சரிந்தான்.
மழை..

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 1
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.